அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

டொமைன்கள்

டொமைன் பெயரே அனைத்துக்கும் ஆரம்பம்.
டொமைன்கள்
டொமைன் பெயரே அனைத்துக்கும் ஆரம்பம்.

டொமைன் பெயர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

நீங்கள் ஏன் ஆன்லைனில் இருக்கிறீர்கள் (மற்றும் ஏன் நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள்) என்பதை நேர்த்தியான டொமைன் ஒரே பார்வையில் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறது. அதிக கவனத்தையும் பார்வையாளர்களையும் ஈர்க்க, இப்போது சரியான டொமைன் விரிவாக்கத்தைக் கண்டறியவும்.

டொமைன் பெயர்களுக்கான மிகப் பெரிய பதிவாளராக நாங்கள் இருப்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ளுங்கள்.

மேலாண்மையின் கீழ் எங்களிடம் கிட்டத்தட்ட 19 மில்லியன் வாடிக்கையாளர்களும் 78 மில்லியன் டொமைன் பெயர்களும் இருப்பது தற்செயலாநது அல்ல. ஒரு டொமைன் பெயரைத் தேடி மக்கள் இங்கு வரக்கூடும், ஆனால் அவர்கள் கண்டுபிடிப்பது அவர்களை வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க வைக்கிறது.

ஒரு டொமைன் பெயரை வாங்குங்கள். அதை லாபத்திற்கு விற்றிடுங்கள்.

பீச்சிலிருந்தோ உங்கள் கோச்சிலிருந்தோ பணிபுரிவதைக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் ஒரு டொமைன் வர்த்தகரின் வாழ்க்கை, அதை நீங்களும் செய்வதற்கு உங்களுக்கு நாங்கள் உதவ முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒரு டொமைன் பெயரை எப்படி பெறுவது?

கவலை வேண்டாம், ஒரு டொமைனைப் பதிவுசெய்வது மிக எளிது. உடனடியாக நீங்கள் ஒரு டொமைனைப் பதிவுசெய்வதற்கான நான்கு படிநிலைகள் இதோ:

ஒரு டொமைன் பெயர் விரிவாக்கத்தைத் தீர்மானியுங்கள். விரிவாக்கம் என்பது டொமைன் பெயரின் இறுதியில் இருக்கும் ஒரு பகுதி – உதாரணமாக .net, .biz, .org அல்லது .com.

புள்ளிக்கு இடதுபக்கம் என்ன இருக்க வேண்டுமென்று யோசியுங்கள். அது உங்களுடைய பிஸினஸ் பெயர் அல்லது சிறப்புத் தன்மையாக இருக்கலாம்.

இந்தப் பக்கத்தின் மேல் பகுதியிலுள்ள பெட்டியில் நீங்கள் விரும்பும் டொமைனைத் தட்டச்சு செய்யுங்கள். குறிப்பிட்ட ஒரு டொமைன் இருக்கிறதா என்பதையும் உங்களுக்கு இன்னும் பிடிக்கக்கூடிய சிலவற்றையும் உங்களுக்குக் காட்டுவோம்.

ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கார்ட்டில் சேர்த்துவிட்டு செக்அவுட் செய்யுங்கள். இப்போது உங்கள் சொந்த டொமைனுக்கு நீங்கள் பெருமைக்குரிய உரிமையாளர். இது உங்களுக்காக பதிவுசெய்யப்பட்டிருக்கும் வரை வேறு எவரும் இதைப் பயன்படுத்த முடியாது.

நல்ல டொமைன் பெயரைக் கண்டுபிடிப்பது பற்றி ஏதேனும் உதவி கிடைக்குமா?

கண்டிப்பாக. ஒரு டொமைனைப் பதிவுசெய்வது எளிது என்றாலும், நல்லதொரு டொமைன் இருப்பது நீங்கள் மிகச் சிறந்த டொமைன் பெயரைப் பதிவுசெய்ய உதவும். சில உதவிக்குறிப்புகள்:

எளிதாக நினைவில் வைத்திருக்கும் பெயரைத் தேர்வுசெய்யுங்கள். அதனால்தான் பெரும்பாலான பிஸினஸ்கள் அவர்களுடைய பிஸினஸ் பெயரிலேயே டொமைனைப் பெறுகின்றனர். சிலர் தங்களுக்குப் பிடித்தமான டொமைன் கிடைத்த பிறகு தங்களுடைய பிஸினஸ் பெயரைத் தேர்வுசெய்கின்றனர்.

டிரேட்மார்க் செய்திருப்பவை, பதிப்புரிமை பெற்றவை அல்லது மற்றொரு நிறுவனம் பயன்படுத்துவதைப் பதிவுசெய்ய வேண்டாம். இது டொமைன் இழப்பு மற்றும் சட்டப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

டொமைன் பெயர் சிறியதாக இருப்பதே எப்போதும் நல்லது, ஏனெனில் அவற்றை வாடிக்கையாளர்கள் எளிதாக நினைவில் வைத்திருக்க முடியும். Facebook, Twitter மற்றும் உங்களின் பிற சமூக ஊடகக் கணக்குகளின் பயனர்பெயர்களுடன் பொருந்தும் பெயர்களைப் பெறுவதும் எளிதானதே.

உங்களுக்கு உள்ளூரில் பிஸினஸ் உள்ளதா? நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் இடங்கள், நகரம் அல்லது நாடு பற்றி டொமைனில் சேருங்கள், இதன் மூலம் உள்ளூர் வாடிக்கையாளர் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை விரைவாகப் பார்க்க முடியும். .berlin, .nyc போன்ற புவியியல் சார்ந்த டொமைன் விரிவாக்கங்களின் பட்டியலைப் பார்த்து, உங்கள் பகுதிக்கான ஒன்றைத் தேடுங்கள்.

எண்கள் அல்லது ஹைஃபன்களைத் தவிர்த்திடுங்கள். உங்கள் இணைய முகவரியைக் கேட்கும் ஒருவரால், நீங்கள் 5 என்னும் எண்ணைப் பயன்படுத்துகிறீர்களா அல்லது “ஐந்து” என்பதைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை அறிந்துகொள்ள முடியாது. உங்கள் பிஸினஸ் பெயரில் எண் இருக்கும்பட்சத்தில், இரண்டு பதிப்புகளையும் பதிவுசெய்யுங்கள் - எண்ணுடன் ஒன்று, எண் உச்சரிக்கப்பட்டு ஒன்று. (கோடுகள் சிக்கலை உருவாக்கும், மேலும் நேர்த்தியாகத் தோன்றாது.)

ஒன்றை விட அதிகமாகப் பெறுங்கள். உங்கள் இணையதளத்திற்கான டிராஃபிக் அதிகரிக்கும்போது, உங்கள் தளத்திற்கு வரும் போக்குவரத்தை திசைதிருப்பிவிடும் நோக்கத்தில் அதேபோன்ற டொமைன் பெயர்களை போலியாகப் பயன்படுத்தும் நபர்களின் கவனத்தை நீங்கள் ஈர்க்கும் வாய்ப்புள்ளது. அதேபோன்ற அல்லது தவறான எழுத்துவரிசை டொமைன்களை முன்கூட்டியே பதிவுசெய்யுங்கள், இதனால் இவை பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தாது.