டொமைன் பேக்ஆர்டர்கள்

உங்களுக்கு ஏற்ற டொமைனைப் பெறுவது, உங்களின் மிகப் பெரிய கனவாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தொடக்க விலை
₹ 1,119.30/ஒவ்.

டொமைன் பேக்ஆர்டர் என்பது என்ன?

சூப்பர்மார்க்கெட்டில் இருக்கும் வரிசையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமல்லவா? டொமைன் பேக்ஆர்டரும் அத்தகைய ஒன்றுதான். முன்பு ஒருவர் எடுத்துள்ள டொமைன் மீண்டும் கிடைக்கும் போது அதனைப் பெறும் வரிசையில் இருப்பீர்கள். ஆம், வரிசை கொஞ்சம் பெரிதாக இருக்கலாம்.

வேறொருவருக்குச் சொந்தமானது உங்களுக்குத் தேவையாக இருக்கலாம். அதனைப் பெற உதவுகின்றோம்.

illu-domain-back-order-buy-a-lot
நீங்கள் அதிகம் வாங்குகிறீர்கள் என்றால், ஏன் அதிகமாகச் சேமிக்கக் கூடாது?
போதுமான டொமைன்களைப் பெற முடியவில்லையா? எங்கள் டிஸ்கவுன்ட் டொமைன் கிளப், புதிய டொமைன்களை குறைவான விலை + GoDaddy ஏலங்களுக்கான மெம்பர்ஷிப் என அனைத்தையும் ₹ 679.92/மாதம் என்ற விலையில் தருகிறது. அதை விட சிறந்த டீலைக் கண்டறிய முடியாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 • டொமைன் பேக்ஆர்டரிங் என்றால் என்ன?

  டொமைன் பேக்ஆர்டர் செய்வது என்பது யாரோ ஒருவருக்கு பதிவுசெய்யப்பட்ட டொமைன் பெயரில் முன்பதிவு செய்வது போன்றது. அந்த டொமைன் பெயர் காலாவதியானதும், அது பொதுவாக கிடைப்பதற்கு முன்னர் பதிவுசெய்வதற்கான வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.

  மேலும் தகவலுக்கு, எங்கள் டொமைன் பேக்ஆர்டர்கள் மற்றும் கண்காணிப்பு ஆதரவுப் பக்கத்திற்குச் செல்க.

 • நான் GoDaddy-இல் டொமைன் பெயரை எப்படி பேக்ஆர்டர் செய்வது?

  ஒரு டொமைன் பெயரைை எப்படி பேக்ஆர்டர் செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், நீங்கள் தனியாக இல்லை. நடவடிக்கையானது ஒவ்வொரு பதிவாளரிலும் சிறிதளவு வேறுபட்டு இருக்கலாம், ஆனால் பொதுவான நடவடிக்கை இணையம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். நீங்கள் டொமைன் பெயரை பேக்ஆர்டர் செய்யும்போது, அது காலாவதியாகும்போது உங்கள் பணம்செலுத்துதலை டொமைன் பெயருக்கு பயன்படுத்துவோம். நீங்கள் ஒரேயொருவர் தான் டொமைன் பெயரை பேக்ஆர்டர் செய்துள்ளீர்கள் என்றால், கூடுதல் விலை எதுவும் இல்லாமல் அது உங்களுடையது தான். இது ஏலத்திற்கு சென்றாலும், முதல் ஏலத்தை வைக்க உங்கள் பேக்ஆர்டர் பணம்செலுத்துதலை நாங்கள் பயன்படுத்துவோம். நீங்கள் டொமைன் பெயரைத் தொடர்ச்சியாக ஏலம் செய்யலாம் அல்லது மற்றொரு டொமைன் பெயருக்கு உங்கள் பேக்ஆர்டர் கிரெடிட்டை மாற்றலாம்.

  கூடுதல் தகவலுக்கு, பேக்ஆர்டர்களை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

 • டொமைன் பேக் ஆர்டர்கள் உத்திரவாதமுள்ளதா?

  உங்கள் கனவு டொமைன் பெயரை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருப்பீர்கள் என்பதை உத்திரவாதம் செய்ய முடியாததால், உங்களுக்கு பதிலாக அதைப் பெறுவதற்கு தேவைப்படும் ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் எடுப்போம். தற்போதைய பதிவாளர் டொமைன் பெயரை புதுப்பிக்கவில்லை என்றால், உங்களுக்காக பதிவுசெய்ய, பதிவுசெய்யும் வழிகள் ஒவ்வொன்றையும் நாங்கள் பயன்படுத்துவோம். வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்பும் டொமைன் பெயர்களைப் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

  கூடுதல் தகவலுக்கு, டொமைன் பேக்ஆர்டர்கள் டொமைன் பெயர் பதிவை உறுதிசெய்யுமா? என்பதைப் பார்க்கவும்

 • பேக்ஆர்டர் செய்த டொமைன் பெயர் கிடைக்கிறது என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?

  நீங்கள் டொமைன் பெயர் பேக்ஆர்டர் ஒன்றை வாங்கினால், அது கிடைத்த உடனே உங்களுக்கு தெரியப்படுத்துவோம். கூடுதலாக, GoDaddy-இல் நீங்கள் பேக்ஆர்டரை வைக்கும்போது, டொமைன் பெயரைப் பார்த்துக் கொண்டே தினசரி கண்காணிப்பு கருவிகளை இலவசமாக வழங்குவோம்.

  கூடுதல் தகவலுக்கு, டொமைன் பெயர் கண்காணித்தல் என்றால் என்ன? என்பதைப் பார்க்கவும்

 • GoDaddy-இல் எனது டொமைன் பேக்ஆர்டரை நான் ஏன் இட வேண்டும்?

  நீங்கள் GoDaddy-இல் டொமைனை பேக்ஆர்டர் செய்யும்போது, உங்கள் கனவு டொமைன் பெயரைப் பாதுகாக்க ஒரு வாய்ப்பிற்கு அதிகமானதைக் கொடுப்போம். ஒவ்வொரு பேக்ஆர்டரும் இலவச டொமைன் கண்காணிப்பு, GoDaddy ஏலங்கள்க்கா ன ஒராண்டு உறுப்பினர், ஒராண்டு டொமைன் பெயர் பதிவு மற்றும் நீங்கள் பேக்ஆர்டர் செய்த டொமைன் பெயர் ஏலத்திற்கு செல்லும்போது முதல் விலையை நிர்ணயம் செய்வது போன்றவற்றை உள்ளடக்கி இருக்கும். உங்கள் பேக்ஆர்டர் வெற்றி எனில், இலவச இணைய உருவாக்கம், மின்னஞ்சல் கணக்கு மற்றும் கூடுதலானவற்றை நாங்கள் கொடுப்போம்.

  கூடுதல் தகவலுக்கு, டொமைன் பேக்ஆர்டர்கள் என்றால் என்ன? என்பதைப் பார்க்கவும்

 • நான் டொமைன் பெயர் பேக்ஆர்டரை வாங்கியுள்ளேன். இப்போது என்ன நடக்கிறது?

  உங்கள் பேக்ஆர்டரின் நடவடிக்கைக் கண்காணிக்க உங்கள் டொமைன் கண்காணித்தல் உறுப்பினர் என்பதைப் பயன்படுத்துவது அடுத்த செயல்முறை. பேக்ஆர்டர் செய்த பிறகு, அதன் நிலையை தினசரி நாங்கள் சோதித்து அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மின்னஞ்சல் அறிவிப்புகளை அனுப்புவோம். நடப்பு பதிவு காலாவதியானதும், பதிவகம் அதை பொதுவாக விடுவதற்கு முன்னர் டொமைன் பெயரை எடுக்க முயல்வோம். நாங்கள் வெற்றியடைந்தோம் என்றால் நீங்கள் தான் பேக்ஆர்டர் வைத்திருப்பவர் மேலும் நீங்கள் டொமைன் பெயரைப் பதிவுசெய்திருப்பவராவீர்கள். பல பேக்ஆர்டர் வைத்திருப்பவர்கள் இருக்கும்பட்சத்தில், டொமைன் பெயரை வெல்வதற்காக ஏலத்தில் பங்கேற்கலாம்.

  கூடுதல் தகவலுக்கு, GoDaddy ஏலங்கள் பார்வைப் பட்டியலைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

 • எனது டொமைன் பேக்ஆர்டரை நான் எங்கே பார்க்கலாம்?

  டொமைன் நிர்வாகியில் உங்கள் பேக்ஆர்டரை பார்க்க மற்றும் கண்காணிக்க உங்கள் GoDaddy கணக்கில் உள்நுழையலாம். நிலைப் புதுப்பித்தல்கள் மற்றும் டொமைன் பெயரின் காலாவதியாகும் தேதி போன்றவை உள்ளிட்ட உங்களுக்கு தேவைப்படும் முக்கிய தகவல் அனைத்தையும் இங்கே தான் நாங்கள் காட்டுவோம்.

  கூடுதல் தகவலுக்கு, உங்கள் பேக்ஆர்டர்கள் மற்றும் கண்காணிக்கப்பட்ட டொமைன் பெயர்களைப் பார்த்தல் என்பதைப் பார்க்கவும்.

 • எனது டொமைன் பெயர் பேக்ஆர்டருக்கு தனியுரிமையைச் சேர்க்க முடியுமா?

  ஆம். இயல்பாக, நீங்கள் ஒரு டொமைன் பெயரைப் பதிவுசெய்ததும் Whois தரவுத்தளத்தில் உங்களுடைய தனிப்பட்ட தகவல் பொதுவாக காட்டப்படும். கவலை வேண்டாம் - உங்கள் பேக்ஆர்டருக்கு Domains By Proxy தனிப்பட்ட பதிவை செய்வதன் மூலம் உங்களைப் பாதுகாப்பது எளிதானது.

  கூடுதல் தகவலுக்கு, பேக்ஆர்டர் செய்த டொமைன் பெயர்களுக்கு தனியுரிமையைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

 • எனது கணக்கிற்காக பேக்ஆர்டர் செய்த டொமைன் பெயரை நான் எப்போது எதிர்பார்க்கலாம்?

  உங்கள் கனவு டொமைனைப் பாதுகாப்பதற்கான எங்கள் முயற்சி வெற்றியடைந்தால், உங்கள் டொமைன் பெயரைப் பதிவுசெய்து உங்கள் கணக்கில் 45 நாட்களுக்குள் வைத்து விடுவோம். உங்கள் பேக்ஆர்டரில் ஒரு வருட்த்திற்கான டொமைன் பெயர் பதிவு சேர்க்கப்பட்டுள்ளது.

  கூடுதல் தகவலுக்கு, டொமைன் பேக்ஆர்டர்கள் என்றால் என்ன? என்பதைப் பார்க்கவும்

 • எனது பேக்ஆர்டர் வெற்றியடையவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

  உங்கள் டொமைன் பெயர் பேக்ஆர்டர் தோல்வியடைந்தால், வேறொரு டொமைன் பெயருடன் முயற்சி செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். உங்கள் பேக்ஆர்டரை மற்றொரு டொமைன் பெயருக்கு மாற்றுவது எளிமையானது மற்றும் இலவசமானது.

  கூடுதல் தகவலுக்கு, பேக்ஆர்டரை வேறொரு டொமைன் பெயருக்கு மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.