டொமைன் புரொக்கர் சேவை

நீங்கள் விரும்பும் டொமைனைப் பெறுவதற்கான உங்களது வாய்ப்பு.

ஒரு டொமைனுக்கு ₹ 4,059.49 மட்டுமே, கூடுதலாக 20% கமிஷன்^

நீங்கள் எப்போதும் விரும்பிய டொமைன் இன்னமும் உங்களுக்கு தான் – அது எடுக்கப்பட்டிருந்தாலும் கூட.

டொமைன் புரொக்கர் சேவை, டொமைன் பெயரை உங்களுக்காகப் பெறுவதற்கு உங்கள் டொமைன் புரொக்கர் அதன் தற்போதைய உரிமையாளருடன் பேரம் பேசுவார்.

  • உங்கள் தனியுரிமையை பாதுகாக்கிறோம். இச்செயல்பாடு முழுவதிலும் உங்கள் அடையாளம் வெளிக்காட்டப்படாது. டொமைன் உரிமையாளரால் உங்களை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது.

  • சிறப்பான நெட்வொர்க். ஒரு டொமைனின் உரிமையாளர் யார், அவரை எப்படி தொடர்புகொள்வது போன்றவற்றில் உலகத்தின் முன்னணி டொமைன் நிறுவனமான எங்களை விட யாரும் சிறப்பாகச் செயல்பட முடியாது.

  • எங்கள் பெயர் கவனம் ஈர்க்கக்கூடியது. தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களை விட GoDaddy IN -இடமிருந்து வரும் ஒரு கோரிக்கைக்கு டொமைன் உரிமையாளர்கள் அதிகம் செவிசாய்க்கும் வாய்ப்புள்ளது.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

டொமைன் புரொக்கர் சேவை என்றால் என்ன?

வேறொருவர் பதிவுசெய்திருக்கும் டொமைன் பெயரை நீங்கள் வாங்க விரும்பினால், அதற்கு நாங்கள் உதவ முடியும். எங்களுடைய டொமைன் புரொக்கர் சேவை தனிப்பட்ட டொமைன் புரொக்கர் வசதியை வழங்குகிறது, அவர் டொமைன் பெயரின் தற்போதைய உரிமையாளரைத் தொடர்புகொண்டு, உங்கள் பட்ஜெட்டிற்குள் அடங்கும் ஒரு விற்பனை விலையை பேரம் பேசி, டொமைன் பெயர் விற்பனைப் பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்வார், இவை அனைத்தின்போதும் உங்களது அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும். எங்கள் புரோக்கர்கள் டொமைன் வல்லுநர்கள் ஆவர், அவர்கள் உங்களுக்காக மிகக் குறைந்த விலையில் நீங்கள் விரும்பும் டொமைனை வாங்கித் தருவதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள்.

டொமைன் புரொக்கர் சேவை எனக்கு சரியானதா?

டொமைன் புரொக்கர் சேவை பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட டொமைன் பெயர் ஒன்றை நீங்கள் வாங்க வேண்டுமென்றால், சந்தைக்கு பிந்தைய டொமைன் பெயர் அல்லது விலையுடன் பரிச்சியம் இல்லையென்றால், அல்லது பாதுகாப்பான மற்றும் அடையாளமற்ற வழியில் டொமைன் பெயருக்குப் பணம்செலுத்த வேண்டுமென்றால், டொமைன் புரொக்கர் சேவை உங்களுக்கு மிகப் பொருத்தமானது!

மேலும் தகவலுக்கு, டொமைன் புரொக்கர் சேவை என்றால் என்ன? என்பதைப் பார்க்கவும்

நான் விரும்பும் டொமைன் பெயர் வாங்குவதை டொமைன் புரொக்கர் சேவை எனக்கு உத்திரவாதம் அளிக்குமா?

டொமைன் புரொக்கர் சேவை, டொமைன் பெயரின் நடப்பு உரிமையாளருடன் விற்பனையை பேரம் பேச அதிகபட்சம் 30 நாட்களுக்கு ஒரு தனிப்பட்ட டொமைன் புரொக்கர் வசதியை வழங்குகிறது. டொமைன் பெயர் வாங்கித் தருவதற்கு நாங்கள் உறுதியளிக்க இயலாது என்றாலும், தற்போது அந்த டொமைன் பெயரைப் பதிவு செய்திருப்பவரைத் தொடர்புகொண்டு உங்களுக்காக பேரம் பேசுவதற்கு முயற்சி செய்வோம்.

மேலும் தகவலுக்கு, டொமைன் புரொக்கர் சேவையை வாங்குதல் என்பதைப் பார்க்கவும்.

டொமைன் புரொக்கர் சேவைக்கு எப்படி கட்டணம் வாங்குவீர்கள்?

டொமைன் வாங்குதல் நடவடிக்கையைத் தொடங்க ஆரம்பகட்ட டொமைன் வாங்குதல் சேவைக் கட்டணத்தை வசூலிப்போம், மேலும் டொமைன் பெயரை வெற்றிகரமாக வாங்கியதும், 20% வாங்குபவர் புரொக்கர் கட்டணம் (குறைந்தபட்ச கட்டணம் ₹ 1,071.43) டொமைன் புரொக்கர் விலையுடன் சேர்க்கப்படும்.

பதிவு செய்திருப்பவர் தனது டொமைன் பெயரை விற்பதற்கு ஆர்வமாக உள்ளார். இப்போது என்ன நடக்கும்?

டொமைன் உரிமையாளர் தன்னுடைய டொமைன் பெயரை உங்களுக்கு விற்பனை செய்ய ஆர்வமாக இருந்தால், உங்கள் டொமைன் பெயர் புரோக்கர் நீங்கள் தேர்வுசெய்யும் குறைந்த விலையில் தொடங்கி நீங்கள் அதிகபட்சம் கொடுக்கக்கூடிய விலை வரை பேரம் பேசத் தொடங்குவார். விலை தீர்மானம் ஆனதும், வாங்குவதற்கான கோரிக்கை வெளியிடப்படும். கோரிக்கைகள் 10 பிஸினஸ் நாட்கள் வரை செல்லுபடியாகும், நீங்கள் விற்பனையாளர் வழங்கும் மாற்றுச் சலுகையை ஏற்றுக்கொள்ள விரும்பும் வரையில் அதை ரத்துசெய்ய இயலாது.

மேலும் தகவலுக்கு டொமைன் புரொக்கர் சேவை என்பதைப் பார்க்கவும்: வாங்குபவருக்கான வழிகாட்டி.

நீங்கள் டொமைன் பெயரைப் பதிவு செய்திருப்பவரை எப்படி தொடர்புகொள்வீர்கள்?

நீங்கள் பட்ஜெட் வரம்பைக் குறிப்பிட்டவுடன், Whois தரவுத்தளத்தில் அந்த டொமைன் பெயருக்காகப் பட்டியலிடப்பட்டிருக்கும் பதிவு செய்திருப்பவர் மற்றும் நிர்வாகத் தொடர்புநபர்களை சரிபார்ப்போம். பெரும்பாலும், பதிவு செய்திருப்பவர் அல்லது நிர்வாகத் தொடர்புநபர் அந்த டொமைனின் உரிமையாளராக இருப்பார் அல்லது யார் உரிமையாளர் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். உரிமையாளரை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாக உங்கள் டொமைன் புரொக்கர் தொடர்புகொள்வார்.

டொமைனுடன் தொடர்புடைய தொடர்புத் தகவல் மூலம் உரிமையாளரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், டொமைன் பெயர் பதிவு செய்திருப்பவரை உங்கள் சார்பில் தொடர்புகொள்ள, பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள தகவலை மட்டுமே உங்கள் டொமைன் பெயர் புரொக்கர் பயன்படுத்துவார்.

நான் வாங்கிய டொமைன் பெயரை எனது கணக்கிற்கு எப்படி நகர்த்துவது?

இப்போது டொமைன் பெயர் உங்களுடையது, அதை உங்கள் கணக்கிற்கு நகர்த்துவோம்! GoDaddy வழியாக டொமைன் பெயர் பதிவுசெய்யப்படவில்லை என்றால், உங்கள் கணக்கிற்குள் செல்வதற்கு டொமைன் பெயர் இடமாற்றத்தை வாங்கி, அதைப் பூர்த்திசெய்ய வேண்டும். GoDaddy வழியாக டொமைன் பெயர் பதிவுசெய்யப்பட்டிருந்தால், கணக்கு மாற்றத்தின் வழியாக டொமைன் பெயரை உங்கள் கணக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

டொமைன் பெயர் வாங்கப்படவில்லை என்றால் என்ன நடக்கும்?

தங்களுடைய டொமைன் பெயரை விற்பனை செய்யுமாறு கோருவதற்கு டொமைன் உரிமையாளரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், உங்களுக்கான டொமைன் பெயரைப் பெற்றுத் தருவதற்கு எங்களால் தொடர்ந்து செயல்பட முடியாது. உங்கள் டொமைன் புரொக்கர் உங்கள் கோரிக்கையை 30 நாட்களுக்கு பிறகு அல்லது தங்களுடைய டொமைன் பெயரை டொமைன் உரிமையாளர் விற்க வேண்டாம் என்று தீர்மானித்த பிறகு மூடிவிடுவார்.

டொமைன் புரோக்கர் சேவை மற்றும் டொமைன் வாங்குதல் சேவை என்பவை எவை?

GoDaddy டொமைன் வாங்குதல் சேவை என்பதுதான் இப்போது டொமைன் புரோக்கர் சேவை எனப்படுகிறது. எடுக்கப்பட்டுவிட்ட ஒரு டொமைன் பெயரை வாங்க உங்களுக்கு அதே சிறந்த சேவையை நாங்கள் இப்போதும் வழங்குகிறோம். 2006 ஆண் ஆண்டில் டொமைன் வாங்குதல் சேவையை அறிமுகப்படுத்தினோம், இத்தனை ஆண்டுகளாக, வேறொருவர் ஏற்கனவே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட டொமைன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறோம். உங்களது டொமைனை வேறொருவர் எடுத்துவிட்டால் சோர்ந்துபோக வேண்டாம். எனவே டொமைன் வாங்குதல் சேவையை முயன்று பாருங்கள்...இப்போது டொமைன் புரோக்கர் சேவை என்ற பெயரில் கிடைக்கிறோம்!