அழைக்கவும்
 • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி
feature-illu-domain-investing-need-help
டொமைன்களில் முதலீடு செய்கிறீர்களா?
உங்களிடம் பயன்படுத்தப்படாத டொமைன்கள் இருந்தால் — ஒருவேளை நீங்கள் திட்டமிட்ட ஒரு ஐடியா தொடங்கப்படாமல் போனதால் அல்லது டொமைன் பெயர் கேட்பதற்கு நன்றாக இருந்ததால் அதைப் பதிவுசெய்திருந்தால் — அது நீங்கள் கொடுத்த பணத்தை விட அதிக மதிப்புள்ளதாக இருக்கக்கூடும். பெரிய தொகை. டொமைனில் முதலீடு செய்தல் (டொமைனிங் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது வழக்கமான முதலீடுகள் போலத்தான் — குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பது — ஆனால் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்கள் போலல்லாமல், இது டொமைன்களில் செய்யப்படுவது (இதில் நீங்கள் ₹ 70.72/வருடம் என்னும் அளவுக்குக் குறைந்த விலையில் டொமைன்களைப் பெறலாம்). இது உங்களுக்கு சிறந்தவொரு உபரி வருமானமாக இருக்க முடியும், சில ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் டொமைனர்களாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர். தொடங்குவதற்குத் தயாரா?
feature-illu-domain-investing-how-much
உங்கள் பட்ஜெட் என்ன?

டொமைனில் முதலீடு செய்வது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நீங்கள் நினைத்தால், GoDaddy ஏலங்கள் என்பதை ஒருமுறை பார்வையிடுங்கள். திறந்த சந்தையில் மிகப் பெரிய விலையைப் பெறக்கூடிய சில டொமைன்களை அங்கு பார்ப்பீர்கள். உண்மையில், கடந்த சில வருடங்களில் இவற்றைப் போன்ற குறிப்பிடத்தக்க சில விற்பனைகள் நிகழ்ந்துள்ளன:

 • laba.com விற்கப்பட்ட விலை: ₹ 70,71,428.58
 • tulo.com விற்கப்பட்ட விலை: ₹ 39,28,571.43
 • 5111.com விற்கப்பட்ட விலை: ₹ 35,71,571.43
 • picstart.com விற்கப்பட்ட விலை: ₹ 30,00,000.00
 • 7777AV.com விற்கப்பட்ட விலை: ₹ 22,25,071.43

உங்களுக்குத் தேவையான கருவிகளைப் பெறுங்கள்.

நாங்கள் 78 மில்லியன் டொமைன்களுக்கு மேல் நிர்வகிப்பதால், டொமைனில் முதலீடு செய்வதைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் ஒரு வெற்றிகரமான டொமைன் உரிமையாளராக ஆவதற்கான கருவிகள் எங்களிடம் உள்ளன.

feature-illu-domain-investing-feature-illu-domain-investing-save-on-domains
டொமைன்களில் 60% வரை சேமியுங்கள். ஒவ்வொரு. தனி. நாளும்.
டிஸ்கவுன்ட் டொமைன் கிளப் மூலம், நீங்கள் விரும்பும் எந்தவொரு டொமைனையும், GoDaddy Auctions-க்கான முழு அணுகலையும் எங்கள் டொமைன் புரோக்கர் சேவையில் சேமிப்புகளையும் பெறலாம்.
feature-illu-domain-investing-are-you-investing
உதவி தேவையா? உங்களுக்கு உதவுவதற்காகக் காத்திருக்கிறோம்.
பெரிய டொமைன் விற்பனையை நடத்தியிருந்து, ஆனால் வாங்குபவருக்கு அதைப் பரிமாற்றுவதில் சிக்கல் இருக்கும் நிலையைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அல்லது மதிப்புமிக்க டொமைனைக் கண்டறிந்துவிட்டீர்கள் ஆனால் தொழில்முறை நிபுணரின் ஆலோசனை தேவைப்படுகிறது. இதற்காகவே உங்களுக்கு உதவ எங்களது ஆதரவுக் குழு காத்திருக்கிறது. அவர்களைத் தொடர்புகொண்டு, உங்கள் டொமைன் முதலீடு தொடர்பான நிபுணர் உதவியைப் பெறவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டொமைனை எவ்வாறு விற்பனை செய்வது?

இது நீங்கள் நினைத்திருந்ததை விட எளிதானது. டொமைன் ஆஃப்டர்மார்க்கெட்டில் ஒரு கணக்கை அமைத்திடுங்கள் — அங்கு GoDaddy ஏலங்கள் உட்பட, தேர்வு செய்ய ஏராளமான விருப்பத்தேர்வுகள் உள்ளன. ஆஃப்டர்மார்க்கெட் பெரிதாக இருந்தால், உங்கள் டொமைனைப் பார்ப்பவர்களும் அதிகமாக இருப்பார்கள், அதனால் (பொதுவாக) விலை அதிகரிக்கும்.

கணக்கை உருவாக்க, உங்களிடம் சொந்தமாக ஒரு டொமைன் உள்ளது, நீங்கள் அதை விற்க விரும்புகிறீர்கள் என்ற உறுதிப்பாட்டை வழங்க வேண்டியதோடு, உங்கள் டொமைனை விற்கும்போது, அதற்கான பணத்தை எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் போன்ற ஒரு சில பிற பேஸிக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் வேண்டும். அங்கிருந்து, பெரும்பாலான ஆன்லைன் ஏலங்களைப் போலவே நீங்கள் ஒரு பட்டியலை உருவாக்கலாம் மற்றும் பிறர் உங்கள் பெயரில் ஏலம் கேட்கலாம்.

ஒரு டொமைன் பெயரின் மதிப்பு என்ன?

இது ஒரு சிறந்த கேள்வி. ஒவ்வொரு டொமைனும் தனித்துவமானது – எடுத்துக்காட்டாக, ஒரேயொரு GoDaddy.com மட்டுமே இருக்கலாம் – ஆனால் அதை ஒருவர் எவ்வளவுக்கு விரும்புகிறார் என்பதைப் பொறுத்தே மதிப்பு இருக்கும். மிகப் பிரபலமான டொமைன்கள், பல லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. Wikipedia -இன் தரவுப்படி, வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனையான டொமைன்கள் இதோ:

 • Insurance.com — $3,50,00,000 USD (2010)
 • VacationRentals.com — $35,00,00,00,000 USD (2007)
 • PrivateJet.com — $30,18,00,00,000 USD (2012)
 • Internet.com — $18,00,00,00,000 USD (2009)
 • 360.com — $17,00,00,00,000 USD (2015)

ஒரு டொமைனை எது மதிப்புள்ளதாக ஆக்குகிறது?

இதற்கென பிரத்யேக விதிகள் இல்லை என்றாலும் கூட, அதன் நீளம் முக்கியமான காரணியாக இருக்கும். குறுகிய டொமைன்களை பார்வையாளர்கள் நினைவில் வைத்திருப்பது எளிது என்பதால், அவை பொதுவாக அதிக மதிப்புள்ளவை. டொமைன் நீளமாகவும், நினைவில் வைத்திருப்பது கடினமாகவும் (அல்லது எழுத்துக்கூட்டுவது கடினமாகவும்) இருந்தால், பொதுவாக அது மதிப்புள்ளது அல்ல.

எதிர்காலப் பயனாளர்கள் புதிரின் மற்றொரு மிக முக்கியமான பகுதியாக விளங்குகின்றனர். சர்வதேச அளவில் புரிந்துகொள்ளப்படும் டொமைன் உங்களிடம் இருந்தால் (அதாவது, pizza.com), உலககெங்கிருந்தும் பார்வையாளர்களைப் பெறும் ஆற்றல் அதற்கு இருப்பதால், அதிக மதிப்புள்ளது. இன்னொரு வகையில், உங்களிடம் SmallTownUSAPizza.com சொந்தமாக இருந்தால், உங்கள் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் – அதேவேளை இது உள்ளூர் பீட்சா இடத்திற்கு உண்மையில் மதிப்புள்ளதாக இருக்கலாம், அந்தக் குறிப்பிட்ட நகரத்திற்கு வெளியில் இதற்குக் குறைந்தளவு மதிப்பே இருக்கும்.

டொமைன்களிலிருந்து மக்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார்கள்?

சில மாறுபட்ட வழிகள் உள்ளன. ஒன்று, நினைவில் கொள்ளத்தக்க அல்லது பிராண்ட் செய்யத்தக்க ஒரு டொமைனை எளிதில் பதிவு செய்து, அதை இலாபத்திற்கு விற்பது. இது டொமைனில் முதலீடு செய்தல் அல்லது டொமைனிங் என்று அழைக்கப்படும்.

சிலர் பிஸினஸ்கள் மற்றும் பலவற்றுக்கான எதிர்கால வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக அவர்களது டொமைனைக் குத்தகைக்கும் விடுகிறார்கள்.

எனக்கு எப்படிப் பணம் வழங்கப்படும்?

நீங்கள் கணக்கு அல்லது பட்டியலை உருவாக்கும்போது, பணம்செலுத்தும் முறையை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படும். அது உங்கள் நேரடி வைப்பு வங்கித் தகவல் அல்லது வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம். உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விருப்பங்கள் இருந்தால், உங்கள் டொமைனைப் பட்டியலிடும்போது, உங்களுக்குப் பிடித்த முறையைத் தேர்ந்தெடுக்குமாறு உங்களிடம் கேட்கப்படும்.

உங்களுடைய டொமைன் பெயர் அதிகம் வெளியில் தெரிவதற்காக (மற்றும் அதிக பணம் கிடைப்பதற்கு), டொமைன் ஆஃப்டர்மார்க்கெட்டுகள் உங்கள் டொமைனைப் பல்வேறு சேனல்களில் பட்டியலிடக் கூடும், எனினும் பெரும்பாலான விற்பனைகளுக்கு ஆறு முதல் 20 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படும். மேலும், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் சந்தைக்குப் பிறகான உதவித் துறையை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.