உதவி தேவையா? டிரான்ஸ்பர் கான்சிரிஞ் -ஐ 040-67607600 -இல் எந்நேரத்திலும் அழையுங்கள்

டொமைன் இடமாற்றம்

உங்கள் .com டொமைனை ₹ 799.00 -க்கு இடமாற்றலாம்.
ஏற்கனவே ஒரு .in டொமைன் உள்ளதா? அதை ₹ 599.00-க்கு இடமாற்றுங்கள். ஒரு வருட நீட்டிப்பு உள்ளடங்கியுள்ளது**

பல டொமைன்களை இடமாற்றுகிறீர்களா? இப்போதே தொடங்குக.
ஏற்கனவே அங்கீகாரக் குறியீடு உள்ளதா?

ஏன் இடமாற்ற வேண்டும்?

உங்கள் நடப்பு டொமைன் வழங்குநர் நீங்கள் விரும்பும் சேவையை உங்களுக்கு வழங்குவதில்லை என்பதால், உங்கள் சொத்துகளை ஒன்றுதிரட்ட மட்டுமே விரும்புவதால் அல்லது இது வெறுமனே ஒரு மாற்றத்திற்கான நேரம் என்பதால் அனேகமாக இங்கிருக்கிறீர்கள். எங்கள் இலக்கு, நீங்கள் உங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, முன்னேறிச் செல்லக் கூடிய வகையில், இந்தச் செயலாக்கத்தை முடிந்தவரை எளிதாக்குவதாகும்.

“டொமைன் பெயர் இடமாற்றம், தள இடமாற்றம், மின்னஞ்சல் இடமாற்றம் போன்றவற்றில் எனக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டன. வாடிக்கையாளர் சேவையானது தொகுப்பை ஒன்றாக்கியது, [எனது] கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தது மற்றும் வேலையைச் செய்து முடிக்க உதவியது.”

கேமிரான் பேக்கர் & அசோஷியேட்கள்

இப்போது என்ன?

அடுத்து என்ன செய்வது என்று குழப்பமா? நீங்கள் ஸ்தம்பித்துப்போயுள்ளீர்களா, பதில்கள் விரைவில் தேவையா? எங்கள் விருது வெல்லும் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி உங்களுக்கு உதவ எப்போதும் இங்கு காத்திருக்கிறோம்.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

எனது டொமைன்களை ஏன் GoDaddy -க்கு இடமாற்ற வேண்டும்?

GoDaddy -இல், டொமைன் இடமாற்றங்களுக்கு பெயர் வாரியாகவும் நிலையான கட்டணத்திலும் கட்டணம் விதிக்கப்படுகிறது, ஆகவே நீங்கள் ஆரம்ப விலை மற்றும் பொருந்தும் ICANN கட்டணம் தவிர வேறு எதையும் செலுத்தத் தேவையில்லை. உங்கள் நடப்புப் பதிவுகளில் மீதமுள்ள காலத்தை நீங்கள் தக்கவைத்துக் கொள்ள அனுமதிப்பதோடு, ஒவ்வொரு இடமாற்றத்திற்கும் ஒரு இலவச பதிவு வருடத்தையும் உங்களுக்கு வழங்குகிறோம்*. நீங்கள் எத்தனை டொமைன்களை நகர்த்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, இது கணிசமான சேமிப்புகளை வழங்கலாம்.

எனது டொமைன்களை நான் எப்போது பதிவுசெய்யலாம் என்பதில் ஏதேனும் வரம்புகள் உள்ளனவா?

டொமைன்களை கிட்டத்தட்ட எல்லா நேரத்திலும் இடமாற்றலாம். எனினும், பதிவுசெய்த அல்லது முந்தைய இடமாற்றத்தைச் செய்த 60 நாட்களுக்குள் மீண்டும் டொமைன் டிரான்ஸ்பர் செய்யப்படுவதை ICANN தடைசெய்துள்ளது (.au விதிவிலக்கு). ICANN கொள்கை

GoDaddy -க்கு டொமைன்களை எப்படி இடமாற்றுவது?

 1. ஒவ்வொரு டொமைனிலும் நிர்வாகத் தொடர்பு நபர் (நிர்வாகி) எனத் தொடர்புக்காகப் பட்டியலிட்டுள்ள மின்னஞ்சல் முகவரி புதியதுதானா என்பதை உறுதிசெய்யவும். இடமாற்றச் செயல்பாட்டின்போது, உங்கள் நடப்புப் பதிவாளர் உங்களுடன் தகவல்தொடர்புகொள்ள இந்த முகவரியைப் பயன்படுத்தலாம். .au டொமைன்களுக்கு, நிர்வாகியின் தொடர்பு பதிவு செய்திருப்பவர் தொடர்பு என்று அழைக்கப்படுகிறது.

 2. அடுத்து, நீங்கள் இடமாற்ற விரும்பும் ஒவ்வொரு டொமைன் பெயரையும்பூட்டுநீக்கவும். இதை எப்படிச் செய்வது என்பது பற்றிய விவரங்களுக்கு உங்கள் நடப்புப் பதிவாளரைத் தொடர்புகொள்ளவும்.

 3. உங்கள் நடப்புப் பதிவாளரிடமிருந்து அங்கீகாரக் குறியீடு (சில வேளைகளில் இடமாற்ற விசை அல்லது EPP குறியீடு எனப்படும்) தேவைப்படலாம். இது எல்லா சந்தர்ப்பங்களிலும் அவசியமில்லை, எடுத்துக்காட்டாக தேசக் குறியீடுள்ள உயர் நிலை டொமைன் பெயர்களை (ccTLDகள்) இடமாற்றும்போது. உங்கள் கணக்கு நிர்வாகியில் அங்கீகாரக் குறியீடுகள் காட்டப்படாவிட்டால், அதை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு உங்கள் நடப்புப் பதிவாளரிடம் கேளுங்கள்.

 4. உங்கள் டொமைன் பெயர்களில் 500 பெயர்களுக்கு ஒரே நேரத்தில் GoDaddy டொமைன் டிரான்ஸ்பர்களை வாங்கலாம், இவை ஒவ்வொன்றும் எங்கள் திரள் டொமைன் டிரான்ஸ்பர் கருவியில் தனித்தனி வரிகளில் பட்டியலிடப்படும். நீங்கள் இடமாற்ற விரும்பும் விரிவாக்கம் பட்டியலிடப்படாவிட்டால், அந்த டொமைன் பெயரை எங்களுக்கு இடமாற்ற முடியாது.

“உங்கள் இடமாற்ற நேம்சர்வர்களைத் தேர்ந்தெடுக்கவும்” என்பதன் கீழ், இந்த விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

a) எனது நடப்பு நேம்சர்வர்களை வைத்திருக்கவும். உங்கள் டிரான்ஸ்பர் டொமைன் பெயர், செயலிலுள்ள ஓர் இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், இடமாற்றத்தின்போது தளத்தின் செயல்திறனில் குறுக்கீடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

b) GoDaddy-இன் பார்க் நேம்சர்வர்களுக்கு மாறு. டொமைன் பெயருக்காக உங்கள் மின்னஞ்சல் எங்களிடம் இருந்தால், எங்கள் ஆஃப்-சைட் DNS-ஐப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அல்லது இடமாற்றத்துக்கு முன்னர் பிரீமியம் DNS இடமாற்ற டெப்ளேட்டை உருவாக்கியிருந்தால், இந்த விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: நீங்கள் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, ஆஃப்-சைட் DNS-ஐ அல்லது பிரீமியம் DNS இடமாற்ற டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தவில்லை என்றால், எங்கள் பார்க் செய்யும் நேம்சர்வர்களில் அந்த டொமைனை பார்க் செய்து, எங்களிடம் உள்ள உங்கள் கணக்கில் இயல்புநிலை மண்டலக் கோப்பை உருவாக்குகிறோம். புதிய மண்டலக் கோப்பைத் தனிப்பயனாக்குவதற்கு DNS நிர்வாகியில் மண்டலக் கோப்புத் திருத்தியைப் பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு, உங்கள் டொமைன் பெயர்களுக்கான DNS-ஐ நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

கவனத்தில் கொள்க.uk, .ca, .eu, .es, .se மற்றும் .au டொமைன் பெயர்களை GoDaddy -க்கு இடமாற்றுவதற்கு சிறப்பு வழிமுறைகள் உள்ளன.

எனது இடமாற்றங்கள் முடிய எவ்வளவு நேரம் ஆகும்?

பெரும்பாலான டொமைன் டிரான்ஸ்பர்கள் முடிய ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும். தேர்ந்தெடுக்கும் நீட்டிப்பைப் பொறுத்து நேரம் மாறுபடும். நாட்டுக் குறியீடு உயர் நிலை டொமைன்களை (ccTLDகள்) இடமாற்றுவது குறித்த தகவலுக்கு, ccTLDகள் பற்றி என்பதற்குச் சென்று, உங்கள் டொமைன் நீட்டிப்புக்கான உதவிக் கட்டுரையைக் கிளிக் செய்க.

எனது டொமைன் டிரான்ஸ்பர்களின் செயல்நிலையை நான் சரிபார்க்க முடியுமா?

நிச்சயமாக முடியும். இந்தப் படிநிலைகளைப் பின்பற்றி, உங்கள் இடமாற்றங்களின் செயல்நிலையைக் கண்காணிக்கலாம்:

 1. GoDaddy -இல் எனது கணக்கு என்பதில் உள்நுழையவும்.

 2. டொமைன்களுக்கு அடுத்துள்ள, தொடங்கு பொத்தானைக் கிளிக் செய்யவும்.

 3. மேல் இடதுபக்கத்தில், டொமைன்கள் மெனுவை கீழே இழுத்து, நிலுவையிலுள்ள இடமாற்றங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். ஒவ்வொரு டிரான்ஸ்பர் டொமைன் பெயருக்கும் நீங்கள் பின்வரும் தகவலைப் பார்ப்பீர்கள்:

  நிலை — இது இடமாற்றச் செயல்நிலையில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கூறுகிறது. ஏதேனும் ஒரு இடமாற்றத்தின் செயல்நிலைப் பட்டியின் மீது ஹோவர் செய்து, அதைப் பற்றிய விவரங்களுக்கு ? ஐகான் அல்லது செயல் தேவை அல்லது பிழை இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  நிர்வாகி மின்னஞ்சல் — இந்தப் புலம் அந்த டொமைன் பெயருடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியைக் காட்டுகிறது.

எனது டொமைனைப் பராமரிக்க என்னிடம் எவ்வளவு, எப்போது கட்டணம் வசூலிக்கப்படும்?

உங்கள் டொமைன் காலாவதியானவுடன், டொமைனைப் பராமரிக்க வருடாந்திர அடிப்படையில் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். டொமைனுக்கு அப்போதைய வருடாந்திர சில்லறை விலை பொருந்தும்.

*,** பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.