பிரத்யேக IP

உங்கள் பிஸினஸை அதற்கென்ற பிரத்யேக IP முகவரியில் கட்டமையுங்கள்

வெறும் ₹ 347.49/மாதம்
உங்களுடைய அட்வான்ஸ்டு ஹோஸ்டிங் தேவைகளுக்கான தீர்வைப் பெறவும்.
ஒரு பிரத்யேக ஹோஸ்டிங் IP, உங்கள் ஹோஸ்டிங் கணக்கு மற்றும் இணையதளத்திற்கு ஒரு தனிப்பட்ட IP முக்வரியை வழங்குகிறது, அது அந்த சர்வரில் வேறெந்த கணக்குகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படாது. அதாவது, உங்கள் தளத்திற்கு நேரடி அணுகல் தேவைப்பட்டால், அதாவது உங்கள் DNS பதிவுகள் செயலாக்கப்படும் போது கூட அல்லது ஒரு SSL சான்றிதழைச் சேர்க்க நீங்கள் முயற்சி செய்யும்போது, ஒரு பிரத்யேக ஹோஸ்டிங் IP உங்களுக்கு உதவும்.
உங்கள் தளத்தை எந்த நேரத்திலும் அணுகலாம்
உங்கள் டொமைன் பெயர் கிடைக்கவில்லை என்றாலும் கூட உங்கள் தளத்தைப் பெறலாம், அதாவது டொமைன் செயலாக்கக் காலங்களில். உங்கள் வலை உலாவி பட்டியில், உங்கள் பிரத்யேக ஹோஸ்டிங் IP ஐத் தட்டச்சு செய்யவும்!

ஆதரவு

உதவியைப் பெறுங்கள், யோசனைகளைப் பரிமாறுங்கள். GoDaddy ஆதரவில் சமூகத்துடன் இணைந்திருங்கள்

உங்களுக்கு ஆர்வமுள்ள தகவலுக்கும் செய்திக்கும் நேரடி அணுகலைப் பெறுங்கள்
மற்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசவும்
புதிய அம்சங்களுக்கான அணுகலைப் பெறவும்
பீட்டா வெளியீடுகளைச் சோதிக்கவும்
தள்ளுபடிக் குறியீடுகளைக் கண்டறியவும்
வாக்கெடுப்புகளிலும் மற்றும் பலவற்றிலும் பங்கேற்கவும்
எங்கள் நிபுணத்துவ விற்பனை மற்றும் உதவிப் பணியாளர்கள் நேரமும் இருக்கிறார்கள்.
தொழில்நுட்ப உதவி மற்றும் விற்பனை: 040-67607600 மிகவேகமானது!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிரத்யேக IP என்றால் என்ன?

உங்களிடம் பிரத்யேக IP (இன்டர்நெட் புரோடோகால்) முகவரி இல்லையென்றால், உங்கள் ஹோஸ்டிங் கணக்கு அதன் சர்வரின் IP முகவரியை மற்ற ஹோஸ்டிங் கணக்குகளுடன் பகிர்ந்து கொள்ளும். பெரும்பாலான சூழ்நிலைகளில், அது சிக்கலை ஏற்படுத்தாது. ஆனால் உங்களிடம் SSL குறியாக்கம் உள்ள அல்லது அதிகப்படியான இணையப் போக்குவரத்து உள்ள ஒரு பிரத்யேக ஹோஸ்டிங் இணையதளம் இருந்தால், உங்களுக்கு பிரத்யேக IP - இதை நிலையான IP என்றும் சொல்வார்கள் - வழங்கும் தனித்துவமான முகவரி தேவைப்படலாம்.

மேலும் விவரங்களுக்கு, எங்களுடைய இணையதள ஹோஸ்டிங் உதவிப் பக்கத்தைப் பார்க்கவும்.

ஏன் எனக்கு ஒரு பிரத்யேக IP முகவரி தேவை?

ஒரு பிரத்யேக IP முகவரி தேவைப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக:

  • நேரடி அணுகல் - ஒரு தனிப்பட்ட IP முகவரியைக் கொண்டிருப்பதன் மூலம், உங்கள் இணையதளத்தை ஒரு ஹோஸ்டிங் IP முகவரியைப் பயன்படுத்தி பார்க்க முடியும் அல்லது உங்கள் இணையதளத்தின் கோப்புகளை FTP அல்லது இணைய உலாவி வழியாக நேரடியாக அணுக முடியும். DNS -ஐப் புதுப்பித்தல் – உங்கள் டொமைன் பெயரின் DNS -ஐப் புதுப்பிக்கும்போது, உங்கள் தளமானது 24-48 மணிநேரங்களுக்கு அணுக முடியாததாக மாறி விடும். நீங்கள் FTP செய்ய அல்லது ஏதேனும் மாற்றங்களை முன்னோட்டம் பார்க்க விரும்பினால், இது பெரிய சிக்கல்களை உருவாக்கக் கூடும். ஒரு தனிப்பட்ட முகவரி மூலம் (பிரத்யேக IP) மூலம், எந்த சிக்கலும் இன்றி நீங்கள் உள்ளடக்கத்தைப் பதிவேற்றலாம் மற்றும் முன்னோட்டம் பார்க்கலாம்! உங்கள் உலாவியில் உங்களுடைய பிரத்யேக IP முகவரியைத் தட்டச்சு செய்தால் போதும், உங்கள் தளம் காண்பிக்கப்படும்.

  • SSL சான்றிதழ்கள் – SSL சான்றிதழ்களுக்கு ஒரு பிரத்யேக IP முகவரி தேவைப்படும். தனிப்பட்ட அல்லது கட்டண விவரத்தைக் கோரும் இணையதளம், SSL பாதுகாப்பைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் SSLகள் செயல்பட, ஒரு நிலையான IP (பிரத்யேக IP) தேவைப்படும். ஒரு பிரத்யேக IP மூலமாக, குறியாக்கம் செய்த ஹோஸ்டிங் இணைப்புக்கு உங்கள் பார்வையாளர்களைத் திசைதிருப்பும் ஒரு SSL -ஐ நீங்கள் அமைக்க முடியும். (எங்கள் SSL சான்றிதழ்களில் ஒரு பிரத்யேக IP உள்ளடங்கியிருக்கும், அதனால் உங்களுடைய பகிரப்படும் ஹோஸ்டிங் கணக்கில் ஒரு சான்றிதழைச் சேர்த்தால், தனியாக ஒரு பிரத்யேக IP கிரெடிட்டை வாங்க வேண்டியதில்லை.)

பிரத்யேக IP -இன் நன்மைகள் என்னென்ன?

பிரத்யேக IP முகவரிகள், மிகவும் விசேஷமானவை மற்றும் பாதுகாப்பானவை, ஆனால் பகிரப்பட்ட IP முகவரிகள் அப்படி அல்ல. பெரும்பாலான டொமைன் பெயர்கள் தங்கள் IP முகவரிகளை, பலநூறு டொமைன் பெயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. அதனால், ஒரு டொமைன் பெயரில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், மற்ற அனைத்து டொமைன் பெயர்களும் பாதிக்கப்படலாம்.

சில தேடு பொறிகள் அல்லது ISPகள், ஒரு IP முகவரியில் உள்ள டொமைன் பெயர்களில் ஏதேனும் ஒன்று ஸ்பேம் மின்னஞ்சலை அனுப்பினால், அந்த முகவரிக்கே தண்டனை தருவார்கள். பிரத்யேக IP மூலமாக, நீங்கள் உங்கள் IP முகவரியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் ஏற்படக் கூடிய அசவுகரியங்களைத் தவிர்க்கலாம்.

ஸ்டாட்டிக் IP அல்லது பிரத்யேக IP முகவரி போன்றவை, உங்கள் தேடுபொறி தரமிடலை மேம்படுத்தும் ஆன்லைன் நிபுணர்கள் என்று நம்புகிறார்கள். தேடு பொறிகள் தனிப்பட்ட முகவரிகளே விரும்புகின்றன, ஏனென்றால் உங்கள் டொமைன் பெயரானது வேறு டொமைன் பெயர்களுடன் தொடர்புடையதாகவோ அல்லது இணைந்திருக்கவோ இல்லை.

மேலும் தகவல்களுக்கு, உங்கள் ஹோஸ்டிங் கணக்கிலிருந்து ஒரு பிரத்யேக IP முகவரியைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

என்னுடைய ஹோஸ்டிங் கணக்கிற்கு எப்படி ஒரு பிரத்யேக IP -ஐ வாங்குவது?

உங்கள் கணக்கு நிர்வாகி மூலம், ஒரு பிரத்யேக IP -ஐ எளிதாக வாங்கலாம். முதன்மை வழிசெலுத்தல் பட்டியில் இருந்து, ஹோஸ்டிங் & சர்வர்கள் என்பதைக் கிளிக் செய்து, பிரத்யேக IP என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் வாங்க விரும்பும், பிரத்யேக IP சேவையின் காலஅளவைத் தேர்வுசெய்து பிறகு, செக்அவுட் செய்யவும்.

உங்களுடைய பகிரப்படும் ஹோஸ்டிங் மற்றும் பிரத்யேக IP முகவரி இரண்டுக்கும், முன்னதாகவே ஒரே சேவை காலஅளவிற்குக் கட்டணம் செலுத்துவது சிறந்த வழிமுறை ஆகும். இதன் மூலம், புதுப்பிக்க வேண்டிய நேரம் வரும்போது, உங்கள் IPகளில் ஒன்றைப் புதுப்பிக்க மறந்துவிடுவோமோ என்று கவலைப்படத் தேவையில்லை.

உங்கள் வாங்குதலை முடித்துவிட்டால், உங்கள் கணக்கு நிர்வாகியில் இணையதள ஹோஸ்டிங் பிரிவுக்கு சென்று, கிரெடிட்டைப் பயன்படுத்தவும்.

உங்கள் SSL சான்றிதழுக்கு ஒரு பிரத்யேக IP ஐத் தேடுகிறீர்களா? அதற்கு அவசியமே இல்லை! எங்களுடைய SSLகளில், ஏற்கனவே ஒரு பிரத்யேக IP இணைக்கப்பட்டுள்ளது. ஹோஸ்டிங் கணக்குடன் SSL -ஐப் பயன்படுத்தும்போது, சர்வருக்கு அந்தப் புதிய பிரத்யேக IP -ஐ நாங்கள் ஒதுக்குவோம்.

என்னுடைய பகிரப்படும் ஹோஸ்டிங் கணக்கில், ஒரு பிரத்யேக IP ஐ எப்படிச் சேர்ப்பது?

உங்கள் ஹோஸ்டிங் கணக்குடன் ஒரு பிரத்யேக IP ஐச் சேர்க்க, உங்கள் கணக்கில் உள்நுழைந்து, இணையதள ஹோஸ்டிங் என்பதை கிளிக் செய்யவும், அதன் பிறகு நீங்கள் சேர்க்க விரும்பும் கணக்கிற்கு அடுத்துள்ள விருப்பத்தேர்வுகள் பொத்தானைக் கிளிக் செய்யவும். “தனிப்பயனாக்கு” தாவலில் இருந்து ஒரு பிரத்யேக IP -ஐ வாங்குவதற்குத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள பிரத்யேக IP கிரெடிட்டைப் பயன்படுத்தலாம்.

பிரத்யேக IP -ஐ நீங்கள் சேர்த்த பின்னர், அது உங்கள் ஹோஸ்டிங் கணக்கில் செயலுக்கு வருவதற்கு 24 - 48 மணிநேரம் ஆகலாம்.

மேலும் தகவல்களுக்கு, “உங்கள் ஹோஸ்டிங் கணக்கில் இருந்து ஒரு பிரத்யேக IP முகவரியைச் சேர்த்தல்” என்பதைப் பார்க்கவும்.