நிர்வகிக்கப்பட்ட WordPress

WordPress ஹோஸ்டிங் எளிதாகிவிட்டது — மேலும் அட்டகாசமான வேகத்திலும் கிடைக்கிறது

ஹோஸ்டிங் அமைவு மற்றும் நிர்வாகம் போன்ற தொல்லை மிக்க வேலைகளை நாங்கள் கவனித்துக்கொள்வதால், நீங்கள் அற்புதமான இணையதளத்தை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தலாம்

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது

அனைத்து திட்டங்களிலும் இருப்பவை

99.9% இயக்க நேர வாக்குறுதி மற்றும் பணம் திருப்பித் தருதல் உத்தரவாதம்
இலவச ஆதரவு
தானியங்கு WordPress கோர் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள்
விரைவான, ஒரு-கிளிக் இடப்பெயர்வுகள்
ஆயிரக்கணக்கான இலவச தீம்கள் மற்றும் பிளக்-இன்களுக்கான அணுகல்
ஆரம்பநிலையில் உள்ளவர்களுககு: முன்கூட்டி அமைக்கப்பட்ட தளங்கள், இழுத்துவிடும் வசதியுள்ள பக்க எடிட்டர்
PHP 7 -இன் சமீபத்திய பதிப்பு
SFTP அணுகல் (டீலக்ஸ் மற்றும் அல்டிமேட் திட்டங்களில் மட்டுமே)
வருடாந்தத் திட்டத்தை வாங்கினால் முதல் வருடத்திற்கு இலவச பிஸினஸ் இமெயில்
தற்காலிக டொமைன் பெயர்

செயல்திறன் நீங்கள் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டால்?

இணையதள கட்டமைப்பு

திறமைகள் இல்லையா?
நேரம் இல்லையா?
பிரச்சனை இல்லை.

  • 100க்கணக்கான தனிப்பயனாக்கக் கூடிய டிசைன்களை வைத்து விரைவில் ஆன்லைனுக்கு வந்து விடுங்கள்
  • தொழில்நுட்பத் திறமைகள் தேவையில்லை
  • இலவச டொமைன், ஹோஸ்டிங் மற்றும் பலவும் அடங்கும்

(ஹோஸ்டிங் சேர்க்கப்பட்டது.)

complex-icon-managed-wordpress-hosting-fast-secure-reliable-hosting-176px
இணையதள ஹோஸ்டிங்

உங்கள் பிஸினஸ் உடன் சேர்ந்து வளர்ச்சியடையும் வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஹோஸ்டிங்.
  • cPanel அல்லது Parallels Plesk தளங்களின் வழியே ஆன்லைனுக்கு வந்துவிடுங்கள்
  • ஒரே கிளிக்கில், உங்கள் இணையதளத்தின் வளங்கள் அதிகரிக்கும்
  • உறங்கவே உறங்காத விருது வென்ற பாதுகாப்பு
ஏன் WordPress?

WordPress என்பது, உலகிலேயே மிகப் பிரபலமான இணையதள கட்டுமான கருவி. இது பல்லாயிரக்கணக்கான இலவச தீம்கள் மற்றும் பிளக்-இன்களுக்கான அணுகலைத் தரும், இவற்றின் மூலம் வடிவமைப்பு செயல்முறை எளிதாகும், மேலும் ஒரு சில கிளிக்குகளில் திறன்மிக்க அம்சங்களைச் சேர்க்க முடியும். மேலும், GoDaddy நிர்வகிக்கும் WordPress இல், உங்களுக்குக் கிடைப்பவை:

  • தானியங்கு அமைவு, காப்புப்பிரதிகள் மற்றும் WordPress மென்பொருள் புதுப்பிப்புகள்
  • எங்களுடைய பிரீமியம் ஹோஸ்டிங் தளத்தில் முதன்மையான செயல்திறன்
  • ஹோஸ்டிங் நிபுணர்களின், விருதுவென்ற ஆதரவு,

முக்கிய அம்சங்கள்

மேலும் சிறந்த அம்சங்கள்

உங்களைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்
தினமும் இரவில் உங்கள் தளத்தைக் காப்புப்பிரதி எடுப்போம் — கோப்புகள், தரவுத்தளங்கள் அனைத்தையும் — அந்த பதிப்பை ஒரு மாதம் வரை பாதுகாப்பாக வைத்திருப்போம், அதை நீங்கள் ஒரே கிளிக்கில் மீண்டும் பெற்றுவிட முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

WordPress என்றால் என்ன?

WordPress® என்பது வலைப்பதிவு மற்றும் இணையதள வெளியீட்டுத் தளம் ஆகும். இது பயன்படுத்துவதற்கு மட்டும் எளிதானதல்ல, இணையதள உருவாக்கத்தில் ஒரு தரநிலையாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். அழகு, இணையத் தரநிலைகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய தன்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட WordPress, சிறிய தனிப்பட்ட வலைப்பதிவு முதல் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரிய வர்த்தக தளம் வரை அனைத்தையும் நிர்வகிக்க உதவும் ஓபன் சோர்ஸ் பணித்தளமாகும். லட்சக்கணக்கான தளங்கள் தங்களின் ஆன்லைனில் இருப்புக்கு WordPress-ஐ நம்புகின்றன, அதோடு GoDaddy-இன் நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங்கும் இருப்பதால் நீங்களும் அதை நம்பலாம்.

நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங் என்றால் என்ன?

தொடர்ச்சியான புதுப்பிப்புகள் மற்றும் தொழில்நுட்ப சரிசெய்தல்கள் போன்ற சிரமங்கள் இல்லாமல் WordPress-இன் எளிமையும் சக்தியும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அதிநவீன ஹோஸ்டிங் தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட GoDaddy-இன் நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங் சரியான தீர்வாக அமையும்.

எளிதான நிறுவல் மட்டுமல்லாது, WordPress உங்கள் ஹோஸ்டிங் உடன் எந்தவித சிக்கல்களும் இன்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் உள்நுழைந்த அந்த கணமே உங்கள் தளத்தை, உங்களால் கட்டமைக்க, திருத்த மற்றும் நிர்வகிக்க முடியும். வழக்கமான இணையதள ஹோஸ்டிங் திட்டத்தில் நீங்கள் பெற முடியாத வேகம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் விதத்தில், எங்கள் சர்வர்களை பிரத்யேகமாக WordPress-க்காக மாற்றியமைத்துள்ளோம்.

மேலும், எங்களுடைய விருது வென்ற உதவிக் குழு, உங்களுக்குத் தோன்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்க காத்திருக்கிறது. சுருக்கமாக சொல்வதானால், WordPress இணையதளம் அல்லது வலைப்பதிவைக் கட்டமைக்கவும் நிர்வகிக்கவும் இதைவிட ஒரு வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழி எதுவும் இல்லை.

மற்ற நிறுவல்களிலிருந்து, WordPress இன் உங்கள் பதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?

மாறுபடவில்லை. WordPress இன் சமீபத்திய பதிப்புடன் உங்களுக்குத் தொடக்கத்தைத் தருகிறோம், அதாவது இதைத்தான் நீங்கள் WordPress.org இலிருந்தும் பதிவிறக்குவீர்கள். புதுப்பிப்பு இருக்கும் ஒவ்வொரு முறையும், நாங்கள் உங்களுக்காக அதைத் தானாகவே நிறுவுவோம். இனிமேல் ஒரு புதுப்பிப்பை நிறுவுவது அல்லது காலாவதியான அல்லது WordPress இன் குறைகள் நிறைந்த பதிப்பை இயக்குகிறோமா என்பன போன்ற கவலைகள் உங்களுக்கு எப்போதுமே இருக்காது.

நான் என்னுடைய தரவுத்தளத்தை அமைக்க வேண்டுமா?

இல்லை. நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங்கில், நாங்கள் அனைத்தையும் கவனித்து கொள்வோம், அதனால் இந்தச் செயல்முறை உங்களுக்கு மிக எளிதாக இருக்கும். உங்கள் திட்டத்தை வாங்கியவுடன், உங்கள் இணையதளத்தை உடனடியாக உருவாக்கலாம் அல்லது வலைப்பதிவிடத் தொடங்கலாம்.

வேறு இடத்தில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள என்னுடைய WordPress தளத்தை GoDaddy-க்கு மாற்ற முடியுமா?

ஆம். ஒரே கிளிக்கில் உங்கள் தளத்தை GoDaddy நிர்வகிக்கப்பட்ட WordPress -க்கு இடமாற்ற முடியும். அதை உங்கள் டொமைன் பெயருக்கு நகர்த்தலாம் அல்லது தற்காலிக டொமைனில் வைக்கலாம், அங்கு அதை விரைவாக மதிப்பாய்வு செய்து உங்கள் தளத்தை வெளியிடலாம்.

நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங்கை வாங்கிய பின்னர், நான் எப்படி தொடங்குவது?

WordPress ஐப் பயன்படுத்தி எப்படி வலைப்பதிவை உருவாக்குவது அல்லது உங்கள் தளத்தைக் கட்டமைக்கத் தொடங்குவது என்று உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் ஹோஸ்டிங் திட்டம் WordPress இன் சமீபத்திய பதிப்புடன் கச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளது, இதனால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உள்நுழைந்து, உங்கள் கட்டுப்பாட்டுப் பலகத்தில் இருந்து நேரடியாக தளத்தைக் கட்டமைக்கத் தொடங்கலாம். எப்படி உள்நுழைவது என்று தெரியவில்லையா? கீழே உள்ள “என்னுடைய WordPress நிறுவலை எப்படி அணுகுவது?” என்பதைப் பார்க்கவும்.

மேலும் உங்களுக்குக் கேள்விகள் ஏதேனும் இருந்தால், எங்களுடைய விருது வென்ற உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளத் தயங்காதீர்கள். எங்களிடமே இருக்கும் WordPress நிபுணர்கள், உங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவை உருவாக்குவது, புதுப்பிப்பது அல்லது விளம்பரப்படுத்துவதில் கூட உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

என்னுடைய WordPress நிறுவலை எப்படி அணுகுவது?

உங்கள் WordPress இணையதளம் அல்லது வலைப்பதிவில் உள்நுழைய பல்வேறு வழிகள் உள்ளன.

https://in.godaddy.com/ta/-க்குச் சென்று, “எனது கணக்கு” என்பதில் உள்நுழைந்து, நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங் என்பதை உங்கள் தயாரிப்புகளின் பட்டியலிலிருந்து தேர்வுசெய்யவும். http://coolexample.com/wp-admin, என்று தட்டச்சு செய்யவும், இதில் coolexample.com என்பது உங்கள் டொமைன் பெயராகும், இது உங்களை நேரடியாக நிர்வாகி உள்நுழைவுத் திரைக்கு அழைத்து செல்லும்.

4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.