சிறு பிஸினஸ்களுக்கான ஆன்லைன் சந்தைப்படுத்தல்

உங்களுக்கான சரியான தெரிவு என்ன?

ஆன்லைன் சந்தைப்படுத்தல் என்றால் என்ன?

சிறந்த முடிவுகளைப் பெற வெவ்வேறு வழிகள்.

ஆன்லைன் சந்தைப்படுத்தல் என்ற சொல்லில், தேடல் பொறி முடிவுகளில் உங்கள் பிஸினஸை மேம்படுத்துவது முதல் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு செய்திமடல்கள் அல்லது சிறப்புச் சலுகைகளை மின்னஞ்சல் செய்வது வரை ஏராளமான விஷயங்கள் உள்ளடங்கும். உங்களைப் போன்ற பிஸினஸ் உரிமையாளர்களுக்கான நல்ல செய்தி, இந்த வெவ்வேறு உத்திகள் எல்லாம் அவற்றின் சொந்த வழியில் வேலை செய்யும் என்பதாகும்.

விழிப்புணர்வைக் கட்டமைக்க, குறிப்பாக உள்ளூர் வாடிக்கையாளர்களைச் சென்றடைய அல்லது தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் அதிக தடவைகள் மீண்டும் வர வைக்க என நீங்கள் எதை விரும்பினாலும், அதை நீங்களே செய்க என்ற கருவிகளும் புரொஃபஷனல் சேவைகளும் உள்ளன, அவை நீங்கள் நினைப்பதை விட குறைந்த காலத்திலேயே உங்கள் இலக்குகளை அடைய உங்களுக்கு உதவலாம்.

இதை-நீங்களே-செய்யலாம் சந்தைப்படுத்தல் கருவிகள்

உங்கள் சொந்த ஆன்லைன் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை நிர்வகியுங்கள்

வாடிக்கையாளர்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் சிறந்த பொருட்கள் மற்றும் சேவைகள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து, மேலும் பலரை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் எங்கள் குறைந்த விலையில் வாங்கத்தக்க, பயன்படுத்த-எளிதான விளம்பரப்படுத்தும் கருவிகளுடன் உங்களது பிஸினஸுக்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள்.

வெறுமனே அங்கு உங்கள் உள்ளடக்கத்தை இட்டு, பார்வையாளர்கள் உங்களைத் தேடி வருவதற்காகக் காத்திருக்க வேண்டாம் — அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கேற்ற நபர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரியுங்கள், இதன் மூலம் அதிக விற்பனைகளை ஈர்க்கின்ற உத்திசார் பிரச்சாரங்களுடன் நீங்கள் நேரடியாகவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் இலக்குகளை அடைய, எங்கள் சந்தைப்படுத்தல் கருவிகளில் ஒன்றை அல்லது கலவையைத் தேர்வுசெய்யவும்.

ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும்.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

ஆன்லைன் சந்தைப்படுத்தல் என்பது எனக்கு புதிய விஷயம். நான் என்னென்ன விதிமுறைகளை அறிய வேண்டும்?

நீங்கள் தொடங்குவதற்கு இங்கே ஒரு சில முக்கிய ஆன்லைன் சந்தைப்படுத்தல் விதிமுறைகள் தரப்பட்டுள்ளன:

வலைப்பதிவு: ”இணையப் பதிவு” என்பதற்கான சுருக்க வடிவமான வலைப்பதிவு என்பது, விற்பனைகளை அதிகரிக்க, வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிக்க மற்றும் உங்கள் பிராண்டின் SEO ஆற்றலை வளர்க்க உதவக் கூடிய ஆன்லைன் கட்டுரைகளின் தொகுப்பு. வலைப்பதிவிடல் என்பது உள்ளடக்கச் சந்தைப்படுத்தலின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.

உள்ளடக்கச் சந்தைப்படுத்தல்: உள்ளடக்கச் சந்தைப்படுத்தல் ஆனது உங்களைப் பின்தொடர்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள, சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை அளிப்பதன் மூலம் விற்பனைகளை ஊக்குவிக்கிறது. எடுத்துக்காட்டுகளில் வலைப்பதிவிடல் மற்றும் ஈமெயில் மார்க்கெட்டிங் ஆகியவை உள்ளடங்கும்.

CTA: CTA என்பது கால் ஃபார் ஆக்‌ஷன் (செயலுக்கு அழை) என்பதைக் குறிக்கும். வலிமையான சந்தைப்படுத்தல் உள்ளடக்கத்தில் எப்போதும், அடுத்ததாக என்ன செய்வது என வாடிக்கையாளர்களுக்குக் கூறும் செயலுக்கு அழைக்கும் அழைப்பு அடங்கும் (எ.கா. “எனது இலவச மின்புத்தகத்தை இப்போதே பெற, இங்கே கிளிக் செய்க.”)

CTR: CTR என்பது கிளிக்-த்ரூ ரேட் (கிளிக் செய்யும் விகிதம்) என்பதைக் குறிக்கும். உங்கள் கிளிக் செய்யும் விகிதம் என்பது உங்கள் CTA-ஐ கிளிக் செய்யும் தளப் பார்வையாளர்கள் அல்லது மின்னஞ்சல் பெறுநர்களின் சதவீதம் ஆகும்.

டொமைன் பெயர்: டொமைன் பெயர் என்பது GoDaddy.com போன்ற, உங்கள் தளத்திற்குச் செல்வதற்கு வாடிக்கையாளர்கள் அவர்களது உலாவியில் தட்டச்சு செய்யும் இணைய முகவரியாகும். வலிமையான ஆன்லைன் சந்தைப்படுத்தலானது மிகப் பொருத்தமான டொமைன் பெயருடன் தொடங்குகிறது. உங்கள் டொமைன் பெயர் உங்கள் பிராண்டுக்குப் பொருந்துகிறதா, உங்கள் புரொஃபஷனலிஸத்தைப் பிரதிபலிக்கிறதா மற்றும் மக்களின் கவனத்தை ஈர்க்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

இ-காமர்ஸ்: இ-காமர்ஸ் என்பது ஆன்லைனில் தயாரிப்புகளையும் சேவைகளையும் விற்பது என்று பொருள்படும். சிறிய பிஸினஸ்கள் கூட இ-கார்மஸ் திறன்களைக் கொண்ட இணையதளத்தை அமைக்கலாம்.

முக்கியச்சொல்: முக்கியச்சொற்கள் என்பவை மக்கள் உங்கள் தளத்தைக் கண்டுபிடிக்க பெருமளவில் பயன்படுத்தும் சொற்களாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் நியூயார்க் நகரத்தில் ஒரு பிளம்பராக இருந்தால், “பிளம்பர்”, “பிளம்பிங்” மற்றும் ”“NYC” போன்றவை சில சிறந்த முக்கியச்சொற்களாக இருக்கும். திறன்மிக்க ஆன்லைன் சந்தைப்படுத்தல் என்பது குறிப்பிட்ட முக்கியச்சொற்களுக்கேற்ப உங்கள் உள்ளடக்கத்தை உகந்ததாக்குதலைச் சார்ந்திருக்கும். தேடல் பொறிகள் (எ.கா. Google, Bing, Yahoo), தேடல் முடிவுகளில் எந்தெந்த இணையதளங்களை வழங்குவது எனத் தீர்மானிக்க இந்த முக்கியச்சொற்களைப் பயன்படுத்துகின்றன.

உள்ளூர் பிஸினஸ் பட்டியல்கள்: வாடிக்கையாளர்கள் அவர்களது உள்ளூர் பகுதியில் “பீட்சா” அல்லது “நெயில் சலூன்கள்” போன்ற குறிப்பிட்ட வகைகளைத் தேடுவதற்கு Yelp, Facebook மற்றும் Google போன்ற தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். அந்தத் தேடல் முடிவுகளில் உங்கள் பிஸினஸை காட்டுவதற்கு, உங்கள் உள்ளூர் பிஸினஸ் பட்டியல்களை உகந்ததாக்க வேண்டும்.

ஆப்ட்-இன்: அனுமதி அடிப்படையான சந்தைப்படுத்தல் எனவும் குறிப்பிடப்படும் ஆப்ட்-இன் சந்தைப்படுத்தல் என்பது தம்மைத் தொடர்புகொள்ள உங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கும் மட்டும் விளம்பரங்களை அனுப்புவது என்று பொருள்படும். இது மிகச்சிறந்த நடைமுறையாகக் கருதப்படுவது மட்டுமன்றி, தேவையற்ற மின்னஞ்சல்களுடன் மக்களை ‘ஸ்பேம் செய்வதில்’ இருந்து பிஸினஸ்களைத் தடுக்கின்ற சட்டங்களும் உள்ளன.

குழுப் பிரிப்பு: இது உங்கள் வாடிக்கையாளர்களையும் எதிர்கால வாடிக்கையாளர்களையும் குறிப்பிட்ட குழுக்களாக குழுப் பிரிக்கும் செயலாகும், எடுத்துக்காட்டாக பரிசு அட்டைகளை வாங்கிய மக்கள். உங்கள் பெறுநர்களைப் குழுப் பிரிப்பதன் மூலம், அதிக இலக்குள்ள (மற்றும் வெற்றிகரமான) ஈமெயில் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை நடத்தலாம்.

SEO: SEO என்பது தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதலைக் குறிக்கிறது, இது தேடல் பொறிகளுக்காக உங்கள் தளத்தை உகந்ததாக்குகிறது. Google, Bing, Yahoo! மற்றும் பிறவற்றில் மேலும் அதிக சாதகமான முடிவுகளைப் பெறுவதற்கு SEO முக்கியமானது. இதைப் போன்ற தேடல் பொறிகள் மிகப் பொருத்தமான தளங்களைத் தருவதற்கு முக்கியசொற்களையும் பிற SEO கூறுகளையும் தேடுகின்றன.

SEM: SEM என்பது தேடல் பொறி சந்தைப்படுத்தலைக் குறிக்கிறது, இது குறிப்பிட்ட தேடல் முடிவுகளில் உங்கள் பிஸினஸுக்கான விளம்பரங்களை இட தேடல் பொறிக்கு (எ.கா., Google, Bing, Yahoo) கட்டணம் செலுத்துதல் என்று பொருள்படும்.

சமூக ஊடகம்: சமூக ஊடகத் தளங்கள் (எ.கா., Facebook, Twitter, Instagram) என்பவை தனிநபர்களுக்கு மட்டுமல்ல. சமூக ஊடகத்தில் பிஸினஸ் சுயவிவரங்களை உருவாக்கி, சுவாரஸ்யமான உள்ளடக்கம், சிறப்புச் சலுகைகள், பயனுள்ள தகவல்கள் ஆகியவறறின் மூலம் உங்கள் பிராண்டால் கூடுதல் பிஸினஸை ஈர்க்க முடியும். சமூக ஊடகச் சந்தைப்படுத்தலில் இலவச மற்றும் கட்டணம் செலுத்தி பெறப்படும் வாய்ப்புகள் உள்ளடங்கும்.

ஆன்லைனில் அதிக தயாரிப்புகளை விற்க, மிகச்சிறந்த ஆன்லைன் சந்தைப்படுத்தல் உத்திகள் என்ன?

உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு அதிக விற்பனைகளை ஈர்க்க, தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் (SEO), ஈமெயில் மார்க்கெட்டிங், சமூக ஊடகச் சந்தைப்படுத்தல் போன்றவற்றில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளவும். நற்செய்தி: இந்த ஆன்லைன் சந்தைப்படுத்தல் உத்திகள் மிகவும் விலை குறைவானதாகவும் முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த வருவாயைப் பெறுபவையாகவும் உள்ளன.

இதுவரை நான் ஒருபோதும் ஆன்லைனில் சந்தைப்படுத்தவில்லை. நான் எடுக்க வேண்டிய #1 படி என்ன?

உங்கள் ஆன்லைன் சந்தைப்படுத்தல் உத்தியானது வலிமையான ஆன்லைன் இருப்பைப் பெறுவதில் சார்ந்துள்ளது. இன்னமும் உங்களிடம் இணையதளம் இல்லாவிட்டால், அதைப் பெறுவதுதான் உங்கள் முதல் செயலாக இருக்க வேண்டும். அடுத்து, ஒரு சிறந்த டொமைன் பெயரை வாங்கி, நீங்கள் ஒரு DIY இணையதள கட்டமைப்பாளரா அல்லது உங்கள் தளத்தைக் கட்டமைக்க வேறு ஒருவரை வாடகைக்கு அமர்த்த விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்கவும். நீங்கள் வலுவான ஆன்லைன் இருப்பைப் பெற்றதும், மேலும் அதிக போக்குவரத்தையும் பிஸினஸையும் அதிகரிப்பதற்கு சில ஆன்லைன் சந்தைப்படுத்தல் கருவிகளைச் சேர்க்கத் தயாராக இருப்பீர்கள்.

என்னுடைய சிறு பிஸினஸுக்கு ஆன்லைன் சந்தைப்படுத்தலில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்?

எங்கள் தயாரிப்புகளில் பல, மாதமொன்றுக்கு ₹ 709.22-ஐ விடக் குறைந்த விலையில் தொடங்குகின்றன. ஆகவே இரு காபிகள் வாங்கும் செலவில், உங்கள் வழியில் கூடுதல் பிஸினஸை இயக்கத் தொடங்கலாம்.

ஆன்லைன் சந்தைப்படுத்தலில் ஈடுபட எவ்வளவு நேரம் தேவை?

இலக்குகளை அமைப்பது, தொடர்ச்சியாக செயல்படுவது மற்றும் உங்கள் முன்னேற்றத்தை அளவிடுவது ஆகியவை ஆன்லைன் சந்தைப்படுத்தலில் வெற்றிபெறுவதற்குத் தேவையான முக்கியமான விஷயங்களாகும். உங்கள் பிஸினஸை சந்தைப்படுத்துவதற்கு வாரத்திற்கு ஒரு மணிநேரம் செலவழிக்கத் தயாராக இருந்தீர்கள் என்றால், அதற்கேற்ப கிடைக்கும் முடிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறோம்.

என்னுடைய ஆன்லைன் சந்தைப்படுத்தல் தீர்வுகளுக்கு ஏன் GoDaddy -ஐத் தேர்வுசெய்ய வேண்டும்?

எங்கள் ஆன்லைன் சந்தைப்படுத்தல் தயாரிப்புகளை எளிதில் பயன்படுத்தலாம், அவை எந்த பட்ஜெட்டிற்கும் பொருத்தமானவை, உங்களுக்குத் தேவையான கருவிகளை ஒரே இடத்தில் — ஒரே கணக்கில், ஒரே உள்நுழைவில் பெறலாம். அதோடு எப்போதும் போல, உங்கள் வணிகம் வளர்கையில் உங்களுக்குக் கேள்விகள் இருக்கும் பட்சத்தில் தேவையான உதவிகளை வழங்குகிறோம்.