தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல்

மக்கள் ஆன்லைனில் உங்கள் பிஸினஸைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குங்கள்.

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.
தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல்

தொடக்க விலை
₹ 499.00 /மாதம்
புதுப்பிக்கும்போது ₹ 499.00/மாதம்4

உங்கள் தளத்தை வாடிக்கையாளர் ஈர்ப்பு மையமாக மாற்றுங்கள்.

none
தேடலுக்கு உகந்ததாக்கு
Google மற்றும் பிற தேடல் பொறிகளில் உங்கள் தளத்தின் மதிப்பீட்டை அதிகரியுங்கள்.
none
உங்கள் தரநிலைகளைப் பின் தொடரவும்
தொடர்ந்து உங்கள் இணையதளத்தின் மதிப்பீட்டை Google இல் கண்காணிக்கலாம்.
none
கீவேர்டு பரிந்துரைகள்
உங்கள் இணையதளத்தில் பயன்படுத்துவதற்கான உயர் மதிப்பீடுள்ள, தனிப்பயனாக்கிய முக்கியச்சொற்களுக்கான பரிந்துரைகளைப் பெறுவீர்கள்.
none
உங்கள் பிஸினஸைப் பிரபலமாக்குங்கள்
’Google மை பிஸினஸ்்’ மூலம் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை மக்களுக்குச் சுருக்கமாகக் வழங்குங்கள்.

இது எப்படி வேலை செய்கிறது

SEO -ஐப் பற்றி அறிந்திருக்க வேண்டியதில்லை.

மிக எளிதாகச் செயல்படுத்துங்கள்.

உங்கள் தளத்தை எப்படி SEO உகந்ததாக்குவது என்பதை ஒரு தானியங்காக்கப்பட்ட வழிகாட்டி விளக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு சிறந்ததென தோன்றும் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை உங்கள் தளத்தில் வெளியிடுவது மட்டுமே.


SEO நிபுணராகிக் கொண்டிருக்கிறீர்கள்.

GoDaddy -இன் தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் கருவியை கொஞ்சம் பயன்படுத்திய பின்னர் பரிந்துரைகள் புரிய ஆரம்பிக்கும், அதன் பின்னர் உங்கள் இணையதளத்தின் தேடல் பொறி மதிப்பீட்டை டிராக் செய்வதற்கு சுவாரசியமாக இருக்கும்.


’Google மை பிஸினஸ்’ அம்சத்தை எளிதில் அமைக்க நாங்கள் உதவுவோம்.

’Google மை பிஸினஸில்’ உங்கள் சுயவிவரத்தைப் பட்டியலிட்டால், மக்கள் உங்கள் பிஸினஸ் செயல்படும் நேரம், முகவரி போன்ற முக்கியமான தகவல்களை விரைவாக அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல்

மக்கள் உங்களைக் கண்டுபிடிக்க உதவுங்கள்.

தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல், தேடல் பொறிகளின் மதிப்பீடுகளில் உங்கள் இணையதளம் உயர்வதற்கு உதவுகிறது. உங்கள் தேடல் மதிப்பீடு அதிகரித்தால, உங்கள் தளத்திற்கு வாடிக்கையாளர்கள் வருவதும் அதிகரிக்கும்.

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

சமந்தா எஸ்.
GoDaddy வழிகாட்டி

உங்களுக்கு உதவவே விரும்புகிறோம். தீவிரமாக.
உங்களுக்கு என்ன தேவையென்று இன்னும் சரியாகத் தெரியவில்லையா? என்ற எண்ணில் எங்களை அழைக்கவும். நீங்கள் வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும், உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு உதவுவதற்காகக் காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் அழைக்கவும். 040-67607600

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்.

’Google மை பிஸினஸ்’ என்றால் என்ன?

’Google மை பிஸினஸ்’ என்பது மக்கள் உங்களை Google அல்லது Google வரைபடம் சேவையில் தேடும்போது காண்பிக்கப்படும் உங்கள் நிறுவனத்தின் தனிப்பட்ட சுயவிவரமாகும். உங்கள் சுயவிவரம் என்பது உங்கள் பிஸினஸ் பற்றிய மிக முக்கியமான தகவல்களின் சுருக்கத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகும். அதில் உங்கள் தொலைபேசி எண், வழிகள், திறந்திருக்கும் நேரம், மதிப்பாய்வுகள், உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் படங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும். GoDaddy -இன் தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் கருவிக்குப் பதிவுசெய்யும்போது, உங்கள் டாஷ்போர்டிலிருந்து உங்கள் ‘Google மை பிஸினஸ்’ சுயவிவரத்தை அமைப்பதையும் சரிபார்ப்பதையும் எளிதாக்குகிறோம்.

SEO என்றால் என்ன, ஏன் அது முக்கியமானது?

ஆன்லைனில் தேடும்போது மக்கள் உங்கள் பிஸினஸைக் கண்டறிய வேண்டும் என்று விரும்பினால், தேடு பொறிகளில் உங்கள் இணையதளம் தெரிவதை உறுதிசெய்ய வேண்டும். SEO என்பது, உங்கள் இணையதளத்தை Google, Bing அல்லது Yahoo போன்ற தேடு பொறிகளுக்கு “நட்பானதாக” மாற்றும் ஒரு செயல்முறையாகும், இது உங்கள் தளத்தை முறையாக வகைப்படுத்தவும், தேடல் முடிவுகளில் அதை சரியான இடத்தில் காண்பிக்கவும் உதவுகிறது. உங்கள் தளத்தை உகந்ததாக்குவதன் மூலம், அதன் தேடல் முடிவுத் தரநிலையை மேம்படுத்த முடியும், இதனால் எதிர்கால வாடிக்கையாளர்கள் உங்கள் பிஸினஸுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தேடும்போது உங்கள் பிஸினஸை எளிதாகக் கண்டறிய முடியும்.

எனது SEO சேவைகளுக்கு ஏன் GoDaddy ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

நிச்சயமாக, ஏராளமான SEO கருவிகளும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்களும் உள்ளன—ஆனால் உலகின் நம்பர் 1 டொமைன் பதிவாளர் நாங்கள்தான் என்பதால், எங்களுக்கு இணையத்தைப் பற்றி முழுமையாகத் தெரியும். இதைப் பற்றி நாங்கள் பேரார்வம் கொண்டிருக்கிறோம், அதனால்தான் எங்கள் SEO சேவைகளை எந்த அளவுக்குச் சக்திவாய்ந்ததாக உருவாக்கினோமோ, அந்த அளவுக்குச் செலவு குறைவாகவும், பயன்படுத்த எளிமையாகவும் இருக்குமாறு செய்துள்ளோம். கேள்விகள் உள்ளனவா? எங்களுடைய விருது வென்ற உதவிக்குழு ஒரு தொலைபேசி அழைப்பின் தொலைவில்தான் இருக்கிறது.

இது எப்படி செயல்படுகிறது?

GoDaddy -இன் தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் கருவி உங்கள் இணையதளத்தைப் பகுப்பாய்வு செய்து, அதற்கான முக்கியச் சொற்களையும், உங்கள் குறிப்பிட்ட பிஸினஸ் வகையின் அடிப்படையில் தேடல் சொற்களையும் அடையாளம் காண உங்களுக்கு உதவும். உங்கள் தளத்தை மேலும் தேடல் பொறிக்கு இணக்கமானதாக மாற்ற, நீங்கள் செய்யக் கூடிய பிற மாற்றங்களையும் அது பரிந்துரைக்கும். இந்த ஸ்மார்ட்டான, பயன்படுத்த எளிதான கருவியானது, உங்களுக்கு செயல்முறையின் ஒவ்வொரு படிநிலையையும் விவரிக்கும். இந்த முக்கியமான பரிந்துரைகளை உங்கள் இணையதளத்தில் சேர்ப்பதால், தேடல் பொறிகளில் உங்கள் மதிப்பீடு மேம்படும், இதனால் உங்கள் பிஸினஸ் பல வாடிக்கையாளர்களின் கண்களில் படும், இதன் மூலம் கூடுதல் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

என்னுடைய தளத்தின் தேடல் பொறி மதிப்பீடு அதிகரிப்பதை என்னால் கண்காணிக்க முடியுமா?

நிச்சயமாக! உங்களுடைய தேடல் மதிப்பீட்டை நாங்கள் கண்காணிக்கிறோம், உலகின் முதன்மை தேடல் பொறிகளில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை எப்போதும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் டாஷ்போர்டில் உங்கள் இணையதளத்தின் தேடல் மதிப்பீட்டைக் கண்காணிக்க முடியும்.

தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் என்றால் என்ன?

GoDaddy -இன் தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் என்பது நீங்களே அமைத்துக் கொள்ளக் கூடிய ஒரு கருவி, இது உங்கள் இணையதள தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் (SEO) திறனை மேம்படுத்தும். இது உங்கள் இணையதளத்தின் மதிப்பீட்டைத் தேடல் பொறிகளில் உயர்த்த அனுமதிக்கிறது, மேலும் உங்கள் தளத்திற்கு கூடுதல் டிராஃபிக்கை ஈர்க்கவும், அதன் தெரியும் நிலையை உலகின் சிறந்த தேடல் பொறிகளான Google®, Bing®, Yahoo® போன்றவற்றில் உயர்த்தவும் செய்கிறது.

தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதலின் SEO சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்க நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களால் கிளிக் செய்யவும் தட்டச்சு செய்யவும் முடிந்தால், ஒரு நொடியில் அற்புதமான முடிவுகளைப் பெற முடியும். உண்மையில், எல்லா பிஸினஸ் வகைகளுக்கும் ஏற்ற பிரத்யேகமான முக்கியச் சொற்களை உருவாக்கும், பயன்படுத்த எளிதான இடைமுகத்தை தேடல் பொறி நிபுணர்கள் கூட பாராட்டுகிறார்கள். உங்கள் தளத்தில் SEO அடிப்படைகள் பூர்த்தியாகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, இன்றே தேடல் பொறிக்கு ஏற்றதாக்குதல் கருவியைப் பயன்படுத்தவும்.

4 பொறுப்புத்துறத்தல்கள் மற்றும் சட்டக் கொள்கைகள்
மூன்றாம் தரப்பினர் லோகோக்களும், குறியீடுகளும், அதனதன் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.