ஐயமும் தீர்வும்

 • காப்புப்பிரதிகளை வழங்குகிறீர்களா?

  ஆம், தரவு இழப்பைத் தடுப்பதற்கு நாங்கள் இரண்டு வழிகளை வழங்குகிறோம்: ஸ்னாப்ஷாட்கள் மற்றும் காப்புப்பிரதிகள். ஸ்னாப்ஷாட்களை எந்தவொரு நேரத்திலும் செய்யலாம், தானியங்கு காப்பு பிரதிகள், ஒவ்வொரு இரண்டு நாளுக்கு ஒருமுறை நடக்கும்.
 • DNS ஐ நீங்கள் ஹோஸ்ட் செய்கிறீர்களா?

  ஆம். டொமைன் நிர்வாக கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் தளத்தை அமைக்க முடியும்.
 • உங்களிடம் API உள்ளதா?

  ஆம், எங்களுடைய API நீங்கள் கிளவுட் சர்வர்களை உருவாக்கவும், அழிக்கவும் அனுமதிக்கிறது, மேலும் கண்ட்ரோல் பேனல் செயல்பாடுகள் அனைத்தையும் நீங்கள் நகலெடுக்கவும் செய்யலாம்.
 • உங்களிடம் இயல்புநிலை ஃபயர்வால் இயக்கப்பட்டுள்ளதா?

  இல்லை, ஆனால், எங்கள் பயனர்கள் அவர்களுடைய கிளவுட் சர்வரை அமைத்தவுடன் இதை இயக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
 • நீங்கள் கன்சோல் அணுகலை வழங்குவீர்களா?

  ஆம், நாங்கள் கன்சோல் அணுகலை SPICE கன்சோல் வழியாக (SPICE-HTML5 விட்ஜெட்) வழங்குகிறோம்.
 • என்ன வகையான விர்ச்சுவலைசேஷனை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?

  நாங்கள் KVM (கெர்னல்-சார்ந்த விர்ச்சுவல் மெஷின்) ஐப் பயன்படுத்துகிறோம்.
 • GoDaddy கிளவுட் சர்வர்கள் என்ன வகையான பிராசசர் மாடல்களில் இயங்கக் கூடும்?

  Intel Hexcore CPUகள்.
 • Windows சர்வர்களை நீங்கள் வழங்குகிறீர்களா?

  இப்போது கிடையாது, ஆனால் விரைவில் அதைச் சேர்க்க நினைத்திருக்கிறோம். எங்களுடைய VPS மற்றும் பிரத்யேக சர்வர் திட்டங்களில், நாங்கள் Windows சர்வர்களையும் கூட வழங்குகிறோம்.
 • என்ன வகையான கோப்புஅமைப்பு வடிவமைப்புகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?

  நாங்கள் LVM மற்றும் QCOW ஆகியவற்றை எங்களுடைய US தரவு மையத்தில் பயன்படுத்துகிறோம்.
 • என்னுடைய GoDaddy கிளவுட் சர்வரின் CPU வேகம் என்ன?

  நாங்கள் சர்வர் தரத்தில் உள்ள Intel Hexcore பிராசசர்களை 2.0 GHz மற்றும் 3.0 GHz இடைப்பட்ட நிலைகளில் பயன்படுத்துகிறோம். கிளாக் ஸ்பீட் மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹைப்பர்வைசரில் உள்ள CPU இன் பிற விவரங்களைக் காண, இந்தக் கட்டளையை கட்டளை வரியில் இயக்கவும்:

  cat /proc/cpuinfo

 • அதிக CPU, RAM, டிஸ்க் அல்லது SSD இடத்தைக் கொண்டதாக, தனிப்பயனாக்கிய திட்டத்தை நான் தேர்ந்தெடுக்க முடியுமா?

  தனிப்பயன் திட்டங்களை உருவாக்கும் வசதியை நாங்கள் தற்போது ஆதரிக்கவில்லை, அதாவது அந்த நிலையில், வளங்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகரித்துக் கொள்ள முடியும். இதன் பொருள், திட்டங்களுக்கு ஏற்ப தற்போது எங்களால் SSD / டிஸ்க் ஸ்பேஸ் கொள்ளளவை அதிகரிக்க முடியாது என்பதாகும்.

  நாங்கள் வழங்கும் அளவுகள், வளங்களை ஒன்று சேர்த்து, பின்புலத்தில், விர்ச்சுவல் கணினிகளை திறன் மிக்க வகையில் விநியோகிக்க எங்களை அனுமதிக்கின்றன.

 • புதிய அம்சத்தை நான் கோர முடியுமா?

  நிச்சயமாக! உங்களுடமிருந்து அறிய விரும்புகிறோம்! புதிய அம்சக் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை எங்களுடைய பயனர் குரல் தளத்தில், @devfeedback.uservoice.com இல் சமர்ப்பிக்கவும்.
 • விலையிடலும் பில்லிங்கும் எப்படி செயல்படுகின்றன?

  உங்களது கிளவுட் சர்வரை நீங்கள் அமைத்தவுடன் பில்லிங் தொடங்கும், மற்றும் உங்களது அசல் பயன்பாட்டின் அடிப்படையிலான மணிநேர பில்லிங்கானது உங்கள் கிளவுட் சர்வர் தேர்வின் மாதாந்திர வரம்பு வரை தொகுக்கப்படும். உங்கள் பில்லிங் தகவல்கள் கோப்பில் வைக்கப்பட்டு, உங்களது கிளவுட் சர்வரை நீங்கள் அழிக்கும் வரை அசல் பயன்பாட்டின்படி மாதாந்திர அடிப்படையில் தானியங்காக பில் செய்யப்படும்.
 • பயன்பாட்டின் நிறுவலுக்கு கூடுதல் கட்டணம் அறவிடப்படுமா?

  இல்லை. கூடுதல் கட்டணம் எதுவுமின்றி எங்கள் பயன்பாடுகள் அனைத்தும் கிடைக்கின்றன. நீங்கள் வாங்குவதன் படி பில்லிடும் முறையைப் பயன்படுத்தி நீங்கள் பயன்படுத்தும் கணக்கிற்கு மட்டுமே பணம் செலுத்துங்கள்.