புதுப்பிப்புக் குறியீடுகள்

அரிதான புதுப்பிப்புத் தள்ளுபடிகள் மற்றும் பிற சிறப்புச் சலுகைகளை எவ்வாறு பெறுவது என்று அறியவும்.

GoDaddy புதுப்பிப்புக் குறியீடுகளை எங்கு கண்டறியலாம்?

அதாவது சட்டப்பூர்வ GoDaddy புதுப்பிப்புக் குறியீடுகள் எங்கும் கிடைக்காது என்பதே இதற்கான சுருக்கமான பதில். ஆனால் அவை எவ்வாறு செயல்படுகிறது என்று நீங்கள் அறிந்திருக்கும்பட்சத்தில் குறியீடுகள் கிடைக்கவே கிடைக்காது என்று அர்த்தம் இல்லை.

feature-illu-renewal-codes-secondhand-codes-all-markets

மறுஉபயோகக் குறியீடுகள் என்று சொல்வதைப் போலவே அவை சிறந்தவைதான்.

இதை நீங்கள் படித்துக் கொண்டிருந்தால், நீங்கள் கற்பனை செய்யக்கூடிய எந்தவொரு தளத்திற்கும் அளிக்கப்படும் பெரியளவிலான சேமிப்பைப் பற்றி கூறும் பிற தளங்களை நீங்கள் செக் அவுட் செய்திருக்க அதிக வாய்ப்புள்ளது. அங்கு உங்களுக்குக் கிடைத்த GoDaddy புதுப்பிப்புக் குறியீடுகள் எதையும் நீங்கள் உண்மையிலேயே முயற்சித்துப் பார்க்கவில்லை எனில், அதற்கான பலன் உங்களுக்கு இனிமேல் தான் கிடைக்கும். அதற்கான காரணம் எளிமையானதுதான்…
feature-illu-renewal-codes-as-unique-as-you-all-markets

உங்களைப் போலவே (ஏறக்குறைய) தனித்துவமானது.

புதுப்பிப்புக் குறியீடுகள் என்பவை எங்களைப் பொறுத்தளவவில் மிகவும் அரிதானவை. எங்கள் தயாரிப்புகளுக்கு மிகவும் நியாயமான விலையையே நிர்ணயித்துள்ளோம் (அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைவான விலையையே இணையச் செயல்பாடுகளுக்கு அளிக்கின்றோம்) எங்கள் தயாரிப்புகளுக்கு நாங்கள் வைத்துள்ள இலாபம் ஏற்கனவே குறைவாக இருப்பதால், விலையை இன்னும் குறைப்பது சவாலானது.

அதனால்தான் மிகவும் அரிதாகவே புதுப்பிப்புக் குறியீட்டை வழங்குவோம், அவை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மட்டுமே வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். உங்கள் பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, அந்த மூன்றாம் தரப்புத் தளங்கள் வேலை செய்யாத குறியீடுகளை இடுகையிட்டு, உங்கள் நேரத்தை விரயமாக்குகின்றன.

இதோ நற்செய்தி.

நன்றி கூறும் விதமாக அவ்வப்போது புதுப்பிப்புக் குறியீடுகளையும் வழங்குவோம். நீங்கள் எங்களை உங்களின் டொமைன் பெயர் அல்லது இணையதள உருவாக்கி அல்லது ஹோஸ்டிங் திட்டத்தில் தேர்வுசெய்யவில்லை என்பதை அறிந்துள்ளோம் – அத்துடன் நாங்கள் எங்களுக்கு விசுவாசமான வாடிக்கையாளர்கள் இல்லாமல் இந்த நிலையை அடையவும் முடியாது என்பதையும் அறிந்துள்ளோம் – அதனால் உங்களுக்கு வெகுமதி அளிக்கும் ஒரு வழியாக புதுப்பிப்புக் குறியீடுகளை வழங்குகின்றோம்.

இவை மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்தாலும், உண்மையிலேயே அவற்றை வழங்குகின்றோம், அவற்றில் பயன்படுத்துவதும் எளிதானதுதான். கலர்கலரான படங்களையும், விளம்பரங்களையும் கொண்ட தளத்தில் கிடைக்கும் குறியீடு வேலை செய்யும் என்று நம்பிப் போக வேண்டியதில்லை (இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்). எங்கள் இணையதளத்தின் எந்தப் பக்கத்திலும் அடிப்பகுதிக்கு ஸ்க்ரோல் செய்து சென்று, எங்கள் மின்னஞ்சல் பட்டியலில் பதிவுசெய்யவும். புதுப்பிப்புத் தள்ளுபடிக்காகத் தகுதி பெற்றிருந்து, எங்கள் அஞ்சல் பட்டியலில் பதிவுசெய்திருந்தால், அவற்றை நாங்கள் உங்கள் இன்பாக்ஸில் நேரடியாக வழங்குவோம்.

feature-illu-renewal-codes-pro-tips-all-markets

அத்துடன் சில நிபுணர் குறிப்புகளும் கிடைக்கும்…

உங்கள் டொமைன்களைப் புதுப்பிக்கும்போது பணத்தைச் சேமிக்க வேண்டுமா? எங்கள் டிஸ்கவுன்ட் டொமைன் கிளப் ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் புதிய டொமைன்கள் மற்றும் டொமைன் புதுப்பிப்புகளுக்குக் கிடைக்கும் குறைவான விலைகளைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. அத்துடன், ஏலங்கள் மெம்பர்ஷிப் மற்றும் எங்கள் டொமைன் புரோக்கர் சேவை போன்ற இலவச சேவைகளையும் பெறுவீர்கள்.

டொமைன்கள் உங்களுக்கானவை இல்லை என்றால் அல்லது ஒரு தயாரிப்பு காலாவதியாகும் நேரத்தில் சலுகையைத் தேடுகிறீர்கள் என்றால், எங்கள் விருது வென்ற உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளவும். அவர்கள் உங்கள் கணக்கில் தேடி, உங்கள் மின்னஞ்சலில் நீங்கள் தவறவிட்டிருக்கக்கூடிய தகுதிவாய்ந்த சலுகைகளைக் கண்டறிவார்கள். தள்ளுபடி இருந்தால், அதைக் கண்டுபிடிக்க அவர்கள்தான் வேகமான, எளிதான வழி.