அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி
.in கொண்டு உலகம் அறியட்டும்
domain-in-logo-02-v02

.in டொமைன் பெயர்கள் என்றால் என்ன?

எந்தவொரு இடத்தில் இருப்பவர்களும் பதிவுசெய்யலாம், .in டொமைன் பெயர்கள் இந்தியாவைச் சார்ந்த எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்தையும் குறிப்பிடக்கூடியவை. நீங்கள் பிஸினஸ் அல்லது அறக்கட்டளை நடத்தினாலும், வலைப்பதிவாளர் அல்லது புகைப்படக் கலைஞராக இருந்தாலும், இந்தியாவிலுள்ள மக்களுடன் மேலும் தனிப்பட்ட இணைப்பைப் பெறுவதற்கு .in டொமைன் உதவ முடியும். இருப்பினும், அனைவருக்கும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு சுருக்கமான டொமைனை நீங்கள் தேடிக் கொண்டிருந்தாலும், அவை சிறந்த தேர்வுகள்தான்.

இதை மின்னஞ்சலுக்குப் பயன்படுத்தினால் உங்களிடம் கவர்ச்சிகரமான ஒரு முகவரி இருக்கும், அத்துடன் நீங்கள் உள்ளூர்காரர் என்பதையும் அது இந்தியர்களுக்குத் தெரிவிக்கும். அத்துடன் நீங்கள் புகழ்பெற்ற ஒரு டொமைனை ஏற்கனவே பயன்படுத்தினால், dot in -ஐச் சேர்ப்பது உங்கள் இலக்குப் பயனாளர்களை விரிவாக்கி, நீங்கள் உள்ளூர் மொழியையும் நாணயத்தையும் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்வையாளர்களுக்குக் காண்பிக்கும். (இது Google -க்கு மிக விருப்பமானது, உங்கள் வாடிக்கையாளர்களும் இதை விரும்புவார்கள்)

எப்போது ஒரு .in டொமைன் பெயரைப் பதிவுசெய்ய வேண்டும்?

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் சந்தைப்படுத்த விரும்பினாலோ அல்லது ஒரு புதிய தயாரிப்பை விளம்பரப்படுத்துவதற்கு ஒரு கவர்ச்சிகரமான டொமைன் விரிவாக்கம் தேவைப்பட்டாலோ, பின்வருவனவற்றுக்கு ஒரு .in டொமைன் உங்களுக்கு உதவும்:

  • இணைக்க. இந்தியாவில் ஏறக்குறைய ஐம்பது கோடி இணையப் பயனாளர்கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
  • கவனம்செலுத்த. ஒரு .in டொமைன், உங்களுக்கான உலகளாவிய இருப்பை உருவாக்கும் அதேநேரத்தில் குறிப்பிட்ட பயனாளர்களுக்கான ஒரு தளத்தை அல்லது பிராந்திய அடையாளத்தை உருவாக்குவதற்கும் மிகப் பொருத்தமானது.
  • பாதுகாக்க. உங்களுடைய பிற டொமைன்களால் உருவாக்கப்பட்ட பெயர் அங்கீகாரத்தைச் சாதகமாக்கிக் கொள்ள விரும்புகின்ற போட்டியாளர்களிடமிருந்து உங்களுடைய பிராண்டைப் பாதுகாத்திடுங்கள்.
  • உருவாக்க. "மக்கள் கூட்டம்" பேசுவதை நிறுத்த முடியாத அனைத்து முக்கியமான தலைப்புகளாகிய இசை, திரைப்படங்கள், ஃபேஷன் மற்றும் பலவற்றின் பிரபலமான போக்குகளைக் காண்பிப்பதற்கு டாட் in டொமைனை ஒரு வலைப்பதிவு அல்லது பாட்காஸ்ட்டால் பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் நீங்கள் தொழில் செய்ய நினைக்கவில்லை என்றாலும் கூட, .in-ஐ வாங்கினால், அதன் அட்டகாசமான சாத்தியக்கூறுகள் வேறு பல துறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

.in டொமைன் என்றால் வாய்ப்பு என்று பொருள்.

.in -ஐப் பதிவுசெய்து, இந்தியாவிலுள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கு மேலும் பலர் முன்வருகின்றனர். அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றான இந்தியாவில் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் — அவர்களுடைய வாங்கும் சக்தியிலிருந்து கிடைக்கக்கூடிய பலநூறு கோடி டாலர்களில் உங்கள் பங்கையும் பெறுவதற்கு .in டொமைன்கள் உதவ முடியும்.

கலாசாரரீதியாக, இந்தியாவில் நீங்கள் ஒரு பெரிய ஆனால் பலதரப்பட்ட குழுவான மக்களை சென்றடையும் வகையில் ஒரு நாடாக அது உருவாகியுள்ளது. உலகின் பெரிய மதங்கள் அனைத்தையும் பின்பற்றும் மக்கள் இந்தியாவில் உள்ளனர், இந்த நாடு உலகின் மிகப் பிரபலமான சில கலை, இலக்கிய மற்றும் கட்டிடக்கலைப் பணிகளின் பிறப்பிடமாக உள்ளது. உங்கள் .in டொமைனை இந்தியாவின் திரைப்படத் துறைக்குக் கூடச் சமர்ப்பிக்கலாம் — அதன் திரைப்படங்கள் உலகில் மிக அதிகமாகப் பார்க்கப்படுபவை.

.in -ஐ வாங்கும்போது, நீங்கள் வெறுமனே ஒரு டொமைன் விரிவாக்கத்தை மட்டும் பெறவில்லை. அது உலகின் மிக உயிர்ப்பான கலாசாரமுள்ள ஒரு நாட்டுடனும் அதில் வசிக்கும் அற்புதமான மக்களுடனும் இணைவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

மேலும் அதிக சாத்தியக்கூறுகள், மேலும் அதிக டிமாண்ட். .in -ஐ இன்றே பதிவுசெய்யுங்கள்.

இந்தியாவில் இன்னும் பல லட்சக்கணக்கான இணைப்புகள் செய்யப்பட வேண்டும், துரதிருஷ்டவசமாக அந்தளவு சிறந்த ஐடியாக்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே சொந்தமாக ஒரு சிறந்த ஐடியா தோன்றினால், அதை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். இந்தியாவில் தொழில் தொடங்க நீங்கள் திட்டமிடவில்லை என்றாலும், உங்கள் .in டொமைன் பெயரைப் பெறுங்கள்.