அழைக்கவும்
 • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.org டொமைன் பெயர்கள்

இந்த பிரபலமான மற்றும் மதிக்கப்படும் டொமைனுடன் நம்பிக்கையைக் கட்டமையுங்கள்.

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 1,399.00* ₹ 649.00*/1ஆம் வருடம்

Img Dot Org Leaf

.org டொமைன் பெயர்கள் என்றால் என்ன?

புகழ்பெற்ற, நம்பகத்தன்மை வாய்ந்த, உண்மையான பிராண்டை நீங்கள் நிறுவுவதற்கு ஒரு .org டொமைன் பெயர் உதவும். அசல் உயர்-நிலை டொமைன்களில் (TLDs) ஒன்றான இது, பொதுமக்கள் நலனுக்குச் சேவைகள் வழங்குவதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நிறுவனங்களின் விருப்பத்தேர்வாகிவிட்டது. இன்று, .org டொமைன்கள் இணையத்தின் மிகவும் நம்பகமான டொமைன்களில் ஒன்றாக, பின்வருபவை போன்ற வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டொமைன்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன:

 • இலாபநோக்கற்ற நிறுவனங்கள்
 • அறக்கட்டளைகள்
 • கலாசார நிறுவனங்கள்
 • மதம் சம்பந்தமான நிறுவனங்கள்

இவற்றில் ஒன்றை நீங்கள் நடத்தி வந்தால், மக்கள் உங்களை .org சமூகத்தில் கண்டுபிடிப்பதற்கு விழைவார்கள். இருப்பினும், வர்த்தக நிறுவனங்களின் பிற டொமைன் பெயர்கள் அவர்களுடைய பிராண்டைப் பாதுகாக்கும் அதேவேளையில், அந்த பிஸினஸின் அறக்கட்டளைப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு .org டொமைன் மூலமும் அவர்கள் பலன் பெற முடியும்.

.org டொமைனால் என்னென்ன செய்ய முடியும்?

நீங்கள் .org -ஐ வாங்க விரும்பினால், ஆன்லைனில் உள்ள பிற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது உங்களிடம் பிரத்யேகமான இலக்குகள் இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. இது லாப நஷ்டங்களைப் பற்றியதோ வாங்கி, விற்பதைப் பற்றியதோ அல்ல. நீங்கள் சேவை வழங்கும் ஒவ்வொரு தனிநபரின் வாழ்விலும் நன்மை செய்வதை அளவிடும் ஒரு கருவியாக .org டொமைன் இருக்கும். அது உங்களுக்கு இவற்றில் உதவ முடியும்:

 • நம்பிக்கையை வளர்க்கும். .org நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும். இது தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர இலாபநோக்கற்ற நிறுவனங்களுடன் மக்கள் மிகவும் பொதுவாகத் தொடர்புப்படுத்தும் டொமைன்.
 • மக்களுக்கு அறிவூட்டும். .org இணையதளங்கள், மக்கள் முக்கியமான சிக்கல்களைப் பற்றி புரிந்துகொள்ள உதவக்கூடிய மதிப்புமிக்க, நடுநிலையான தகவல்களைக் கொண்டிருப்பதற்காக அறியப்பட்டவை.
 • நிதிதிரட்டலை அதிகரிக்கும். .org விரிவாக்கம் உள்ள தளத்தை வைத்திருப்பது, ஆன்லைனில் நிதி திரட்டுவதற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
 • பார்வையாளர்களை இலக்கிடுவதற்கு அனுமதிக்கும். பெரும்பாலான இணையப் பயனர்கள் .org டொமைன்களை இலாபநோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் மனிதநேயப்பணிகளுடன் தொடர்புபடுத்துகின்றனர்.

இலாபநோக்கற்ற ஒரு நிறுவனத்தை நடத்தும் எவரும், உதவி கோரும்போது கிடைக்கும் எந்தவொரு சிறிய உதவியும் உதவிகரமானதே என்று உங்களிடம் கண்டிப்பாகக் கூறுவார்கள். அதற்கான கூடுதல் ஊக்கத்தை .org டொமைன் விரிவாக்கம் வழங்க முடியும். இது ஒரு டார்ச்லைட்டைப் போல, இணையத்தின் மூலைமுடுக்கெங்கும் சென்று ஒரு நல்ல நோக்கத்திற்கு உதவக்கூடிய மக்களை நீங்கள் கண்டுபிடிக்க உதவும்.

.org டொமைன்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறோம்.

.org டொமைன் 1985 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, அதுவும் பிற ஆறு டொமைன்களும் (.com, .us, .edu, .gov, .mil மற்றும் .net) இணைய முகவரிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட எண் வரிசைகளுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டன. .org -ஐ (1985 ஜூலையில்) முதன்முதலாக அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வந்த, அரசாங்க நிதியுதவி பெற்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனம் பதிவுசெய்தது.

அந்த முதல் பதிவு தொடங்கியதிலிருந்து, 1990களில் ஒரு மில்லியனுக்குக் குறைவாக இருந்த மொத்த .org டொமைன் பெயர்களின் எண்ணிக்கை, அடுத்த பத்து ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்தது. இன்று .org -ஐ இலாபநோக்கற்ற நிறுவனங்கள் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை, எனினும் இது பொதுவாக சமூகத்தொண்டுப் பணிகளுடன் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ளப்படுகிறது.

ஒரு .org இணைய முகவரி மூலம் உங்கள் நல்ல நோக்கத்தை முன்னேற்றுங்கள்

உலகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்குவதற்கு உங்களுடையதைப் போன்ற நிறுவனங்கள் ஓய்வின்றி உழைக்கவில்லை என்றால், உலகம் தற்போது எப்படி இருக்கும்? நல்ல விஷயம் என்னவென்றால் உங்களைப் போன்றவர்கள் இருப்பதுதான். .org -ஐப் பதிவுசெய்யும்போது, சில விஷயங்களை நினைவில்கொள்ளுங்கள்:

 1. உங்களைப் பாராட்டுகிறோம். உங்களுடையதைப் போன்ற ஒரு நல்ல நோக்கத்திற்காக மக்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது சிறந்த விஷயம். எனவே உங்களுடைய .org டொமைன் பெயர் மூலம் நீங்கள் செய்யவிருக்கும் அற்புதமான விஷயங்களுக்காக முன்கூட்டியே உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
 2. தயக்கம் வேண்டாம். நன்மை செய்வது என்பது பிரபலமான ஒன்றுதான். உங்களுடைய ஐடியாவைப் போன்ற ஒன்றைக் கொண்டுள்ள ஒருவர் இருக்கலாம், அவர் தனக்காக .org -ஐ வாங்கத் தயாராகிக் கொண்டு இருக்கலாம். நீங்கள் அதை முதலில் பெறுங்கள்.
 3. சமூகத்திற்கு வரவேற்கிறோம். நீங்கள் தற்போது 10 மில்லியனுக்கு அதிகமானவர்கள் இருக்கும் ஓர் உலகளாவிய குழுவில் இணையப் போகிறீர்கள், அவர்கள் அனைவரும் சிறந்த விஷயங்களைச் செய்யவும் இந்த உலகத்தை சிறந்த இடமாக ஆக்கவும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். உங்கள் மெம்பர்ஷிப்புக்கு வாழ்த்துகள்.
* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.