அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

.store டொமைன் பெயர்கள்

உங்களது .store -ஐ எப்போதும் திறந்து வைத்திருங்கள்.

இப்பொழுது கிடைக்கிறது! தொடக்க விலை

₹ 5,519.00* ₹ 499.00*/1ஆம் வருடம்

none

இந்த இணையதள முகவரி “இப்போதே வாங்குங்கள்” என்று வாடிக்கையாளர்களுக்குச் சொல்கிறது.

இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது: இணையதள ஷாப்பிங் ஏறக்குறைய உலகின் ஒவ்வொரு மூலையையும் அடைந்துவிட்டது. எனவே “இப்போதே வாங்குங்கள்” என்று வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய .store என்னும் புதிய டொமைன் பெயரை அறிமுகம் செய்கிறோம். .store .com போன்று வேலைசெய்யும் – ஆனால் உங்கள் இணையதள முகவரியில் dot store இருப்பது, உங்களிடம் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும். ஆன்லைனில் மற்றொரு டொமைன் பெயரின் கீழ் ஏற்கனவே பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்கிறீர்களா? வாடிக்கையாளர்களை நேரடியாக உங்கள் இணையதளத்தின் ஷாப்பிங் பிரிவுக்கு அழைத்துச் செல்லும் இரண்டாவது இணையதள முகவரியாக .store -ஐப் பதிவுசெய்யுங்கள். உங்கள் இணையதளத்திற்குள் மேலும் அதிக “கதவுகளை” திறக்கும்போது, மேலும் அதிக நபர்கள் உங்களைக் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

ஆஃப்லைனில் விற்பனை செய்யும் சிறு வணிகங்கள் இணையத்தில் தங்களது பரவலை விரிவாக்கவும், மேலும் அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவும் .store -ஐப் பயன்படுத்தலாம். ஒரு .store இணையதளம், உலகம் முழுவதிலும் இருக்கும் வாடிக்கையாளர்களை ஈர்த்து, அவர்களுடைய ஆர்டரை நீங்கள் எடுத்துக்கொள்ள தயாராக இருப்பதை ஒரே பார்வையில் தெரிவிக்கும். தற்போது ஆன்லைனில் இல்லாத எந்தவொரு பிஸினஸும் தங்களது பிஸினஸை ஆன்லைனில் ஆழம் பார்ப்பது இயல்பான விஷயம்தான். உங்கள் சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்கள், காட்சிப்படுத்தல் விளம்பரங்கள் மற்றும் மின்னஞ்சல் கையெழுத்தில் உங்கள் புதிய இணையதள முகவரியை விளம்பரப்படுத்துங்கள்.

உங்கள் Etsy®, Facebook® அல்லது Amazon® ஸ்டோரை விளம்பரப்படுத்துங்கள்.

ஆனால் ஒரு .store டொமைன் பெயரைப் பயன்படுத்த உங்களுக்கு இணையதளம் தேவையில்லை. இகாம்ர்ஸ் சந்தை வழியாக விற்பனை செய்யும் எவரும் வாடிக்கையாளர்களை அவர்களது கடைக்கு நேரடியாக அழைத்துச் செல்ல .store -ஐப் பயன்படுத்தலாம். நினைவில் நிற்கும் ஒரு முகவரியை வைத்திருப்பது பார்வையாளர்கள் உங்கள் பக்கத்தைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது. இது அவர்கள் மனதிலும் உங்கள் நிறுவனப் பெயரைப் பதிய வைக்கும். அடுத்த முறை அவர்களுக்கு உங்கள் சேவைகள் தேவைப்பட்டால், உங்களை எங்கே கண்டுபிடிப்பது என்று அவர்களுக்கு நினைவிருக்க பெருமளவு வாய்ப்புள்ளது.

.store சேமிப்பக பிஸினஸுக்கும் நன்றாக வேலை செய்யும்.

நீங்கள் டிஜிட்டல் சேமிப்பகச் சேவையை வழங்கினால், அந்தத் துறை தலைதெறிக்கும் வேகத்தில் வளர்ந்து கொண்டிருப்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். கிளவுட் வழங்குனர்களுக்கு .store ஒரு சிறந்த தேர்வு, இவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை:

  • ஹார்ட் டிரைவ்கள், மெமரி கார்டுகள், வொயிட்-பாக்ஸ் சேமிப்பகம், போன்றவற்றை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள்.
  • சர்வர் இடத்தை வாடகைக்கு விட்டு, நிர்வகிக்கும் ஹோஸ்டிங் நிறுவனங்கள்
  • சேமிப்புக்கிடங்கு வழங்குநர்கள்

நீங்கள் கையால் பின்னப்பட்ட ஸ்கார்ஃப்கள், ஆர்கானிக் உணவு, பர்னிச்சர் அல்லது கிளவுட் சேமிப்பகம் என எதை விற்பனை செய்தாலும், .store தான் ஆன்லைனில் உங்களுக்கான சிறந்த இடம்.

* தயாரிப்பு மறுதலிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகள்.
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.