GoDaddy நம்பிக்கை மையம்

“நாங்கள் செய்யும் அனைத்திலும் பத்திரத்தன்மை, பாதுகாப்பு, தனியுரிமை ஆகியவை முதன்மையாக இருக்கும்.”

— Scott Wagner, தலைமைச் செயல் அதிகாரி

none
தனியுரிமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உங்கள் தரவை விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது, நாங்கள் உங்களுடைய நம்பிக்கையை அதை விட அதிக மதிப்புமிக்கதாகக் கருதுகிறோம். ஆன்லைனில் உங்களுக்கென ஒரு பெயரை உருவாக்க உதவுவதில்தான் எங்கள் பிஸினஸ் கட்டமைக்கப்பட்டுள்ளது — உங்கள் பெயரை வேறு நிறுவனங்களுக்கு விற்பதில் அல்ல.

பாதுகாப்புக்கு உறுதிபூண்டுள்ளது.

ஹேக்கர்கள். தீம்பொருள். சமூகப் பொறியியல். ஃபிஷ்ஷிங். உங்கள் தரவு தவறானவர்களின் கைகளில் சென்று சேர்வதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன — எங்கள் தளத்தில் நீங்கள் நுழையும் கணத்திலிருந்து அவை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும் வகையில் எங்கள் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

none
இணக்கத்தன்மைக்கான கருவிகள்.
உங்களிடம் ஒரு பிஸினஸ் இருந்தால் நீங்கள் தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்க வேண்டும். அது இன்றைய காலத்தின் கட்டாயம். அதிர்ஷ்டவசமாக, உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையும் அவற்றுக்கு இணக்கமாக வைப்பதற்கான விருப்பத்தேர்வுகள் எங்களிடம் உள்ளன.

தொழில்நுட்பமும் மனிதமும் சந்திக்கின்றன.

நாங்கள் பெயர்களைக் குறிப்பிட மாட்டோம், ஆனால் உலகின் சில மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நீங்கள் நிஜமான மனிதர்களிடம் பேசுவதைத் தடுக்க பெருமுயற்சி செய்கின்றன. எங்கள் 5,500 ஆதரவுப் பிரதிநிதிகள் அதைப் பணிவோடு ஏற்க மறுக்கின்றனர்.