சரியான இணையதளப் பாதுகாப்பு தேர்வுசெய்தல்

உங்களை மற்றும் உங்கள் கஸ்டமர்களை எவ்வாறு பாதுகாப்பது.

இணையதளப் பாதுகாப்பு என்றால் என்ன?

“இணையப் பாதுகாப்பு” என்னும் வார்த்தை, வைரஸ் பாதுகாப்பில் தொடங்கி தரவுக் குறியாக்கம் மற்றும் பல விஷயங்கள் வரை அனைத்தையும் குறிப்பிடுகிறது. உங்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க – மற்றும் நீங்கள் Google மற்றும் Wikipedia -இல் செலவழிக்கும் பல மணிநேரத்தைச் சேமிக்க – நாங்கள் இந்த அனைத்து பேஸிக்குகளையும் விளக்கும் எளிதில்-புரிந்துகொள்ளக் கூடிய வழிகாட்டியை உருவாக்கியுள்ளோம். ஏதேனும் ஓர் உருப்படியைப் பற்றி மேலும் விரிவான தகவல்கள் வேண்டுமெனில், எங்களுடைய தனிப்பட்ட தயாரிப்புகள் பக்கத்தை கிளிக் செய்தால் போதும்.

உங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாத்திடுங்கள்.
வாடிக்கையாளர்களிடம் உங்கள் இணையதளம் உணர்ச்சிகரமான தகவல்களை - பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு எண்கள், போன்றவை - கேட்கும் என்றால், அந்த தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பதில்தான் உங்கள் நம்பகத்தன்மை அடங்கியுள்ளது. உங்கள் தளத்திற்குள் வரும் அல்லது அதிலிருந்து வெளியே செல்லும் எந்தத் தரவையும் ஹேக்கர்கள் படிப்பதிலிருந்து தடுப்பதற்காக SSL சான்றிதழ்கள் மேம்பட்ட குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றன.
பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்ய பலவிதமான SSL சான்றிதழ்கள்.
உங்கள் தளத்திலிருந்து வைரஸ்களையும் தீம்பொருட்களையும் ஒதுக்கி வையுங்கள்

PC -களைப் போலவே, இணையதளங்களும் வைரஸ்கள் மற்றும் தீம்பொருட்களால் பாதிக்கப்படக்கூடியவை. அதிர்ஷ்டவசமாக, உங்களால் உங்கள் தளத்தைப் பாதுகாக்க முடியும். எங்கள் இணையதளப் பாதுகாப்பு திட்டங்கள் உங்கள் தளத்தை தினசரி ஸ்கேன்கள் மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் பாதுகாக்கிறது. தீமபொருளைக் கண்டறிந்தால், 100% சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் உங்கள் தளத்தைச் சரிசெய்ய முயற்சிப்போம்.

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

ஏற்கனவே ஹேக் செய்யப்பட்ட தளத்தைச் சரிசெய்யவும்.

சில நேரங்களில், நீங்கள் இணையதளப் பாதுகாப்பு பற்றி கடினமான வழிகளில்தான் அறிந்து கொள்ள நேரிடும். இணையதளப் பாதுகாப்பு Express என்பது உங்கள் தளத்தின் ஸ்கேனிங் மற்றும் சுத்தப்படுத்தும் செயல்பாட்டை துரிதப்படுத்தும் அவசரகால தீம்பொருள் அகற்றுதல் சேவையாகும். அச்சுறுத்தல் புகாரளிக்கப்பட்ட 30 நிமிடங்களில், எங்கள் நிபுணர்கள் குழு ஏதாவது பாதிப்புகள் இருந்தால் அதனை அகற்றத் தொடங்குவதுடன், உங்கள் தளத்தையும் சரிசெய்கிறது – மேலும் அவர்கள் 100% சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாறும் வரை நிறுத்தமாட்டார்கள். அத்துடன், மீண்டும் பாதிக்கப்படுவதை தடுக்க, உங்கள் தளத்தை இணையப் பயன்பாட்டுத் தடுப்புச்சுவர் (WAF) மூலம் பாதுகாப்போம்.

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

உங்கள் குறியீட்டை வாடிக்கையாளர்கள் நம்புவதை உறுதிசெய்யுங்கள்.
நீங்கள் ஒரு டெவலப்பராக இருந்தால், புதிய அல்லது எதிர்கால வாடிக்கையாளர்கள் உங்களை நம்ப வைப்பதே நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகப் பெரிய சவால்களில் ஒன்று. ஒரு குறியீடு அல்லது டிரைவர் கையொப்பமிடல் சான்றிதழ், உங்கள் குறியீட்டைப் பாதுகாத்து, புதிய வாடிக்கையாளர்களை பயமுறுத்தக்கூடிய “அடையாளம் தெரியாத பதிப்பீட்டாளர்” எச்சரிக்கைகளை அகற்றி, நீங்கள் ஒரு சட்டப்பூர்வமான டெவலப்பர் என்பதையும், உங்கள் குறியீடு பாதுகாப்பானது என்பதையும் அவர்களுக்குக் காண்பிக்கிறது.