எங்கள் நிபுணர்களில் ஒருவரை அழைக்கவும்: 040-67607600

குறியீடு மற்றும் டிரைவர் கையொப்பச் சான்றிதழ்கள்

உங்களது குறியீட்டை பாதுகாத்து உங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிடுங்கள்.

உங்களுடையதை இன்றே பெற 040-67607600-ஐ அழைக்கவும்.

குறியீடு மற்றும் டிரைவர் கையொப்பச் சான்றிதழ்கள்

உங்களது குறியீட்டை பாதுகாத்து உங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிடுங்கள்.

உங்களுடையதை இன்றே பெற 040-67607600-ஐ அழைக்கவும்.

குறியீடு மற்றும் டிரைவர் கையொப்பச் சான்றிதழ்கள்

உங்களது குறியீட்டை பாதுகாத்து உங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிடுங்கள்.

உங்களுடையதை இன்றே பெற 040-67607600-ஐ அழைக்கவும்.
உங்களது குறியீட்டை பாதுகாக்காமல் விட முடியாத அளவுக்கு நீங்கள் கடுமையாக உழைத்துள்ளீர்கள்.
ஒரு சுதந்திரமான உருவாக்குபவர் அல்லது புரோகிராமர் என்ற முறையில், உங்களது குறியீடுதான் உங்களது புகழாகும். உங்களது வெளியீடு கடத்தப்பட்டால், தொற்று ஏற்பட்டால், அல்லது ஏதாவது வகையில் மாற்றம் செய்யப்பட்டால், உங்களுக்கு ஒரு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க்கூடிய வகையில் வாடிக்கையாளர்கள் உங்களை நம்ப மாட்டார்கள். ஒரு குறியீடு அல்லது டிரைவர் கையொப்பமிடல் சான்றிதழின் சக்தி-மிக்க பாதுகாப்பின் உதவியுடன் உங்களை, உங்களது வாடிக்கையாளர் மற்றும் உங்களது நற்பெயரை பாதுகாத்திடுங்கள்.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

 • ஒரு குறியீடு கையொப்பச் சான்றிதழ் என்றால் என்ன?

  இணையதளத்தில் அதிகமான செயல்மிக்க உள்ளடக்கம் இருக்கும் சூழ்நிலையில், இறுதிப் பயனர்களுக்கு அவர்கள் பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைய உள்ளடக்கத்தின் சட்டப்பூர்வ தன்மையை சரிபார்ப்பதற்கு ஒரு முறை தேவை.

  குறியீடு கையொப்பமிடம் என்பது மின்பொருள் மற்றும் இதர செயல்படுத்தக்க கோப்புகள் மற்றும் ஸ்கிரிப்டுகள் ஆகிவற்றின் மீது வைக்கப்படும் ஒரு டிஜிட்டல் கையொப்பமாகும். குறியீட்டு கையொப்பங்கள் மென்பொருள் எழுதிவோரின் அடையாளத்தை நிரூபிக்கிறது மேலும் அதன் அசல் விநியோகிக்கப்பட்ட பின்னர் அந்த மென்பொருள் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்கிறது.

  குறியீட்டுச் சின்னங்கள் மென்பொருளை மாற்றிவிடாது - இது உங்களது இறுதிப் பயனர்களுக்கு ஒரு கூடுதல் உறுதிநிலை மட்டுமே.

  ஒரு கடையில் இருந்து மென்பொருள் வாங்கப்படும் போது, யார் மென்பொருளை வெளியிட்டது - மேலும் அந்த பேக்கேஜ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை எளிதாக சொல்லிவிடலாம். துரதிர்ஷ்டவசமாக, ஆன்லைனில் மென்பொருள் வாங்கும்போது இந்த காரணிகள் அந்த அளவுக்கு தெளிவாக இருப்பதிலலை. அதன் விளைவாக, இணையதளம் வழியாக Java applets, plugins, Microsoft® ActiveX® கட்டுப்பாடுகள் மற்றும் இதர செயல்படுத்தத்தக்கவற்றை பதிவிறக்கம் செய்யும்போது இறுதிப் பயனர்கள் சிறிதளவு ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்.

  உங்களது மென்பொருளை ஒரு கடையில் வாங்கியிருந்தால் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய அதே அளவு நம்பிக்கையைப் பெற குறியீடு கையொப்பச் சான்றிதழ்கள் உதவுகின்றன.

  ஒரு டிஜிட்டல் கையொப்பம் மூலமாக உங்களது மென்பொருள் பாதுகாப்பினை மேம்படுத்துங்கள். ஒரு GoDaddy குறியீடு கையொப்பச் சான்றிதழ் மூலமாக உங்களது குறியீட்டின் மூலம் மற்றும் நேர்மையை உறுதிப்படுத்துவதன் மூலமாக பயனர் நம்பிக்கையைப் பெற்றிடுங்கள்.

  கூடுதல் தகவல்களுக்கு, எங்களது குறியீடு கையொப்பச் சான்றிதழ் பொருள் ஆதரவுப் பக்கத்தைப் பாருங்கள்.

 • யாருக்கு ஒரு குறியீடு கையொப்பச் சான்றிதழ் தேவை?

  ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. நீங்கள் அதனை சட்டத்திற்கு உட்பட்டது என்று நிரூபிக்க முடிந்தாலே ஒழிய பெரும்பாலான இணைய பயனர்கள் மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய மாட்டார்கள். குறியீடு கையொப்பச் சான்றிதழ்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும், அதோடு உங்களது குறியீட்டை உறுதிசெய்வதற்கு உங்களுக்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும்.

  மென்பொருள் உருவாக்குனர்கள், யார் அதன் உள்ளடக்கத்தைத் தயார் செய்தார்கள் மற்றும் அது மாற்றம் செய்யப்படவில்லை என்பதைப் பற்றி தங்களது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் உறுதிமொழியை அளிப்பதற்கு குறியீடு கையொப்பச் சான்றிதழைப் பயன்படுத்தலாம். விநியோகம் செய்யப்படுவதற்கு முன்னால் அடையாளம் தெரியாத மூன்றாம் தரப்பினர் குறியீட்டை மாற்றம் செய்வதை கையொப்பமிட்ட குறியீடு தடுக்கிறது.

  உள்ளடக்க வெளியீட்டாளர்கள்மென்பொருள் கூறுகள், மேக்ரோக்கள், சாதனநிரல் படங்கள், வைரஸ் புதுப்பிப்புகள், கட்டமைப்புக் கோப்புகள் அல்லது மற்ற வகையான உள்ளடக்கம் உள்ளிட்டவற்றை இணையம் அல்லது மற்ற வழிமுறைகள் மூலமாக பாதுகாப்பாக வினியோகிப்பதற்கு டிஜிட்டல் கையொப்பமிடலாம்.

  ஒரு கொடுக்கப்பட்ட குறியீட்டின் மூலம் - உதாரணமாக Active X கட்டுப்பாடுகள், Java ஆப்லெட்டுகள், மற்றும் இதர செயலிலுள்ள இணைய ஸ்கிரிப்டிங் குறியீடுகள் தெளிவாக இல்லாதபோது குறியீடு கையொப்பமிடுதல் குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.

  பெரும்பாலான இணையப் பயனர்கள் இணையதளத்தில் இருந்து உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்வதில் உள்ள ஆபத்துக்களை அறிந்துள்ளனர். நீங்கள் இணையதளத்தில் வெளியிடும் குறியீட்டை உங்களது இறுதிப் பயனர்கள் நம்புவது முக்கியமாகும். குறியீடு கையொப்பச் சான்றிதழ்கள் உங்களது வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் பாதுகாப்பு மற்றும் உறுதிமொழியை உறுதிப்படுத்த உதவுகின்றன.

  கூடுதல் தகவல்களுக்கு, எங்களது குறியீடு கையொப்பமிடுதல் குறித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பாருங்கள்.

 • குறியீடு கையொப்பமிடுவது எப்படி செயல்படுகிறது?

  புதிய இயக்க முறைகள் மற்றும் இணையதள உலாவிகள் பெரும்பாலும் உயர்ந்த ஆன்லைன் பாதுகாப்பு நிலைகளில் நிர்ணயிக்கப்படுகின்றன, இதற்கு பெரும்பாலான நேரங்களில் கையொப்பமிடப்பட்ட உள்ளடக்கம் தேவைப்படுகிறது. உதாரணமாக, Internet Explorer® கையொப்பமிடப்பட்ட மென்பொருளை வெளியிட்வரை அடையாளம் கண்டு அவை திருத்தம் செய்யப்படவில்லை என்பதை சரிபார்க்க Authenticode®தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

  ஒரு குறியீடு கையொப்பமிடப்பட்ட கோப்பு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும்போது, அந்த கோப்பில் இருந்து சான்றிதழ் பிரித்தெடுக்கப்படுகிறது. உலாவி இந்த தகவலை சான்றிதழ் அதிகாரிகளைப் பற்றிய ஒரு உள் பட்டிலுடன் சரி-பார்க்கிறது, மேலும் பின்னர் சான்றிரழில் உள்ள கையொப்பத்தை சரிபார்க்கிறது.

  எந்த வகையிலாவது கையொப்பம் இடப்பட்ட சான்றிதழ் மாற்றப்பட்டிருந்தால், டிஜிட்டல் கையொப்பம் உடைந்து குறியீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது மேலும் அது நம்பத்தகுந்தது இல்லை என்பதை வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கிறது.

  கூடுதல் தகவல்களுக்கு, உங்களது குறியீடு கையொப்பச் சான்றிதழைப் பயன்படுத்துவதைப் பாருங்கள்.

 • எனது கையொப்பத்தை அவர்கள் நம்பலாம் என்று யாருக்காவது எப்படி தெரியும்?

  கையொப்பமிடப்படாத குறியீட்டை யாராவது பதிவிறக்கம் செய்ய அல்லது இயக்க முயற்சி செய்தால் அவர்களது உலாவி பதிவிறக்கப்பட்ட உள்ளடக்கத்தின் பாதுகாப்பினை சரிபார்க்க முயற்சி செய்கிறது. உலாவியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏற்ப, ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை மேல் தோன்றுகிறது அல்லது இணையப் பக்க உள்ளடக்கம் இறக்கப்படுவது தவறிவிடுகிறது. இந்த எச்சரிக்கைகள் பயனருக்கு சந்தேகம் மற்றும் குழப்பதை ஏற்படுத்துகிறது.

  இறுதிப் பயனர்கள் கையொப்பமிடப்பட்ட பயன்பாடு அல்லது இயங்கக்கூடிய கோப்பினை இயக்க முற்படும் போது டிஜிட்டல் முறையில் கையொப்பமிடும் குறியீடு தேவையற்ற எச்சரிக்கை உரையாடல்களைத் தடுக்கிறது.

 • நான் ஒரு கையொப்பச் சான்றிதழை வாங்கிய பின்னர், நான் என்ன செய்ய வேண்டும்?

  நீங்கள் ஒரு குறியீடு கையொப்பச் சான்றிதழை வாங்கிய பின்னர், அந்த குறியீட்டை கையொப்பமிடும் கணினியில் இருந்து நீங்கள் ஒரு சான்றிதழ் கையொப்பமிடும் கோரிக்கையை (CSR) வழங்க வேண்டும். சான்றிதழின் பயனுக்கு ஏற்ப, நீங்கள் தாமாகவே CSR -ஐ உருவாக்கலாம், அல்லது நீங்கள் CSR -ஐ உருவாக்க OpenSSL போன்ற கருவியைப் பயன்படுத்தலாம்.

  உங்களது கோரிக்கையை சமர்ப்பித்த பின்னர், நீங்கள வழங்கிய நிறுவனத் தகவலை நாங்கள் சரிபார்ப்போம். பதிவுசெய்யும் அதிகாரி (RA) தேவைப்பட்டால் கூடுதல் தகவல் வழங்குவதற்காக உங்களைத் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் சரிபார்க்கும் செயல்முறையை உங்களது கணக்கின் மூலமாக கண்காணிக்கலாம்.

  குறியீடு கையொப்பச் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன், சான்றிதழ் கோப்பினையும் மற்றும் ஏதேனும் சம்மந்தப்பட்ட இடைப்பட்ட சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து நிறுவுவதற்கான ஒரு இணைப்பினைக் கொண்ட ஒரு மின்னஞ்சலை அனுப்புவோம்.

  குறியீடு கையொப்பமிடப்பட்ட நேரத்தில் உங்களது சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மையை காட்டுவதற்காக உங்களது கையொப்ப தொகுதியை Authenticode-ஐப் பயன்படுத்தி நேர-முத்திரை கூட இடலாம்.

  மேலும் தகவலுக்கு ஒரு குறியீடு கையொப்பச் சான்றிதழைக் கோருதல் என்பதைப் பார்க்கவும்.

4 தயாரிப்பு பொறுப்புத்துறத்தல்கள் மற்றும் சட்டக் கொள்கைகள்
மூன்றாம் தரப்பினர் லோகோக்களும், குறியீடுகளும், அதனதன் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.