டொமைன் சரிபார்ப்பு (DV) SSL சான்றிதழ்

உங்கள் இணையதளத்தை அங்கீகரிக்கவும் – டொமைன் சரிபார்த்தல் SSL சான்றிதழ் மூலம்.
அதாவது, உங்கள் ரசிகர்கள், சந்தாதாரர்கள், உங்கள் இணையதளததைப் பார்ப்பவர்களுக்கு - அதிக நம்பிக்கை.
தொடக்க விலை ₹ 2,639.00/வருடம்
புதுப்பிக்கும்போது ₹ 4,399.00/வருடம்4

DV SSL சான்றிதழ்கள்: டொமைன் சரிபார்ப்பின் நம்பக நிலை.

அது சரி, உங்கள் தளத்தின் உரிமை கவனமாக ஆராயப்பட்டது மற்றும் உங்கள் இணையதளத்திற்கு வருகை தரும் எவருக்கும் சரிபார்க்கக் கூடியது என்பதால் DV SSL சான்றிதழைக் கொண்ட இணையதளமானது அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கைக் காட்டி ஆகும்.

DV SSL சான்றிதழ்கள் உங்கள் Google தேடல் தரவரிசையை மேம்படுத்தும்
உங்களுக்கு அதிஷ்டமான நேரம். நிறுவப்பட்டுள்ள SSL சான்றிதழ்கள் உள்ள தளங்களை Google தேடல் அடையாளங்கண்டு, அவற்றுக்கு SSL சான்றிதழ் இல்லாத தளங்களை விட அதிக தேடல் முடிவுகள் தரவரிசையை அளிக்கிறது. இப்போது, அதில் இரு தரப்புக்குமே வெற்றி.
போக்குவரத்தையும் விற்பனையையும் அதிகரித்திடுங்கள்.
சான்றளிக்கும் ஆணையம் (CA) பாதுகாப்புச் சபை ஆய்வின்படி, 2% வாடிக்கையாளர்கள் மட்டுமே “நம்பிக்கையற்ற இணைப்பை்” மேலும் தொடர்கின்றனர். வாடிக்கையாளர்களை வெளியேறச் செய்யும் பாதுகாப்புப் பிழைகளின் இந்த வகைகளை DV SSL சான்றிதழ் தடுக்கும்.
none

ஏன் GoDaddy?

நீங்கள் சரியான SSL சான்றிதழைத் தேர்ந்தெடுப்பதை நாங்கள் எளிதாக்கியுள்ளோம்.

டொமைன் சரிபார்ப்பு (DV) SSL
சான்றிதழ்

நிறுவனச் சரிபார்ப்பு OV SSL
சான்றிதழ்

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL
சான்றிதழ்

இதற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியது:
இதற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியது:
தனிப்பட்ட இணையதளங்கள்
நிறுவனங்கள் மற்றும் பிஸினஸ் இணையதளங்கள்
இ-காமர்ஸ் இணையதளங்கள் (அவசியம்)
முகவரிப் பட்டியில் நம்பிக்கை சுட்டியை காட்டுகிறது
முகவரிப் பட்டியில் நம்பிக்கை சுட்டியை காட்டுகிறது
தானியங்கு சரிபார்ப்பு, நிமிடங்களில் வழங்கல்
தானியங்கு சரிபார்ப்பு, நிமிடங்களில் வழங்கல்
பதிவு அதிகாரம் (RA) கைமுறை சரிபார்ப்பு, 5-7 நாட்களுக்குள் வழங்கப்படுதல் *
பதிவு அதிகாரம் (RA) கைமுறை சரிபார்ப்பு, 5-7 நாட்களுக்குள் வழங்கப்படுதல் *
Google® தரமிடலை மேம்படுத்துகிறது
Google® தரமிடலை மேம்படுத்துகிறது
வலிமையான SHA-2 & 2048 பிட் குறியாக்கம்
வலிமையான SHA-2 & 2048 பிட் குறியாக்கம்
முகவரிப் பட்டியில் பூட்டு
முகவரிப் பட்டியில் பூட்டு
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது (பல-டொமைன் SAN SSL)
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது (பல-டொமைன் SAN SSL)
எல்லா துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது (வைல்ட்கார்ட SSL)
எல்லா துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது (வைல்ட்கார்ட SSL)
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை

வேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது?

SSL சான்றிதழ்கள் பற்றி அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்.

டொமைன் சரிபார்ப்பு (DV) SSL சான்றிதழ் என்றால் என்ன?

டொமைன் சரிபார்ப்பு (DV) SSL சான்றிதழ் என்பதே SSL சான்றிதழ்களின் மூன்று வகைகளிலும் மிகவும் அடிப்படையானது. நிறுவன சரிபார்ப்பு (OV) மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சரிபார்ப்பு (EV) ஆகியவற்றுக்கு பல சரிபார்ப்புப் படிகள் தேவைப்படுகின்ற அதேவேளை, SSL சான்றிதழ்களுக்கு ஒற்றைப் படியே தேவை. அதோடு, நாங்கள் DV சான்றிதழை வழங்க முன்னர், DNS டொமைன் மீது சிறிதளவு கட்டுப்பாட்டை வழங்குவதன் மூலம், விண்ணப்பதாரர் சரிபார்க்கப்பட்டுள்ளாரா என்று உறுதிப்படுத்துகி்றோம். இதோ ஓர் எடுத்துக்காட்டு: https://www.godaddy.com/help/verify-my-certificate-request-standard-assurance-23838

DV SSL சான்றிதழ் எனக்குச் சரியானதா?

நம்பிக்கையை உருவாக்கவும், தங்கள் பார்வையாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் தங்கள் தளம் குறித்த சான்றிதழை விரைவாகப் பெற விரும்புபவர்களுக்கு DV SSL சான்றிதழ் மிகவும் அனுகூலமானது.

DV SSL சான்றிதழ் வைத்திருப்பதன் நன்மை என்ன?

DV SSL சான்றிதழ்கள் மூலம் சரிபார்ப்பது விரைவானது மற்றும் எளிதானது. உங்கள் டொமைனுக்கான DNS கட்டுப்பாட்டை உங்களால் நிரூபிக்க முடிந்தால், நீங்கள் சில நிமிடங்களில் வழங்கப்படும் முழுதாகச் செயல்படும் ஒரு சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம், இதற்காகச் சரிபார்ப்பு ஆவணங்கள் எதையும் வழங்க வேண்டியதில்லை.

DV SSL சான்றிதழ் எப்படி இருக்கும்?

DV SSL சான்றிதழ் மூலம் பாதுகாக்கப்பட்ட எந்தவொரு இணையதளமும் பார்வையாளரின் உலாவிப் பட்டியில் ஒரு சிறிய பூட்டையும் https முன்சேர்க்கையையும் காண்பிக்கும். அது EV சான்றிதழின் பச்சைப் பட்டி போல பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இல்லாமலிருந்தாலும், தங்களது தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் பகிர்வதற்கு முன்பு அதைப் பார்ப்போருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். இந்தச் சின்னங்கள், பார்வையாளர்கள் ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட தளத்தில் உள்ளதையும் அவர்களது தரவுப் பாதுகாப்பாக உள்ளதையும் உறுதிசெய்யும்.

நிறுவனச் சரிபார்ப்பு (OV), நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) மற்றும் டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்களுக்கிடையிலான வித்தியாசங்கள் எவை?

டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்கள்தான் இருப்பதிலேயே பெறுவதற்கு எளிதானவை. இதில் எந்த கைமுறை அடையாளச் சோதனையும் இல்லை, இணையதளத்திற்குப் பின்னால் உள்ள டொமைன் விண்ணப்பதாரருக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் தானியங்காக்கப்பட்ட சரிபார்ப்பு மட்டுமே இருக்கும். உங்களிடம் ஒரு தனிப்பட்ட இணையதளம் அல்லது வலைப்பதிவு இருந்தால், உங்களுக்கு ஒரு DV SSL சான்றிதழே பொருத்தமானது. நிறுவனச் சரிபார்ப்பு (OV) சான்றிதழ்கள் பாதுகாப்பை ஒரு படி மேலே எடுத்துச் செல்கின்றன, இதில் நிறுவனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்க மனிதர்கள் சரிபார்ப்பு செய்யும் தேவை உள்ளது. இது நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழ்களுக்கும் பொருந்தும், இதில் டொமைன் உரிமை மட்டுமல்லாது பிஸினஸ் அடையாளம், சட்டப்பூர்வ நிலை மற்றும் முகவரி ஆகியவையும் சரிபார்க்கப்படும். EV சான்றிதழுக்கான ஆய்வுச் செயல்பாடு பிற சான்றிதழ்களை விட விரிவானது, எனவே EV SSL சான்றிதழ்கள், உங்கள் தளத்தைப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிக நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
முழுமையான விவரங்கள்

GoDaddy SSL சான்றிதழ்கள் ஏன் தேவை?

CA/உலாவி மன்ற வழிகாட்டுதல்களுடன் இணங்கும் சான்றிதழ்களின் முழுமையான வரம்பை வழங்குகிறோம். அனைத்து GoDaddy SSL சான்றிதழ்களிலும் பின்வருபவை உள்ளடங்கியிருக்கும்:

  • SHA-2 ஹேஷ் அல்காரிதம் மற்றும் 2048-பிட் குறியாக்கம்

  • மிகச் சிறந்த பாதுகாப்பு உதவி

4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள், குறிகள் போன்றவை அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.