நிர்வகிக்கப்பட்ட SSL சேவை*

உங்கள் சர்வரை நிர்வகிக்க எங்கள் வல்லுநர்களை அனுமதிக்கவும்.

உங்கள் SSL சான்றிதழை அமைத்து, வரிசைப்படுத்தி பராமரிக்கிறோம் – இது உங்கள் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது.

*GoDaddy-இன் இணைய ஹோஸ்டிங் மற்றும் WordPress தளங்களை ஆதரிக்கிறது


அளவுக்கு குறைந்த விலை ₹ 6,499.00/வருடம்
விற்பனையில் - சேமிப்பு 7%
₹ 6,999.00நீங்கள் புதுப்பிக்கும்போது /வருடம்4


பல டொமைன்கள் அல்லது வைல்டு கார்டு திட்டங்கள் மற்றும் விலைகள் ஆகியவற்றிற்காக -ஐ அழைக்கவும்.

நிர்வகிக்கப்பட்ட SSL சேவை என்றால் என்ன?

இது உங்கள் சான்றிதழைத் தானாக நிறுவுகின்ற, உள்ளமைக்கின்ற மற்றும் பயன்படுத்துகின்ற SSL சான்றிதழ்களுக்கான சிறப்புக் கவனமுள்ள ஒரு சேவையாகும். நம்பகமான பிற SSL சான்றிதழ்களைப் போல அதே உலகத் தரமான பாதுகாப்பைப் பெறுவீர்கள், ஆனால் நிறுவல் மற்றும் பராமரிப்புத் தொந்தரவு இருக்காது. இது எப்படி வேலைசெய்கிறது...

உங்கள் டொமைனை சரிபார்க்கிறோம்.

உங்கள் தளத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதை அங்கீகரிப்பது SSL பாதுகாப்பின் முக்கயத் தகுதியாகும். நாங்கள் உங்கள் டொமைனை சரிபார்த்து, உங்கள் தளத்திற்கு பாதுகாப்பான இணைப்புகள் மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்த ஒரு SSL சான்றிதழை வழங்குகிறோம்.

உங்கள் SSL சான்றிதழை நிறுவுகிறோம்.

எங்கள் தானியங்கு செயல்முறை சரியான, தடையற்ற நிறுவலை உறுதி செய்கிறது. நீங்கள் குறியீட்டைத் தேட வேண்டியதில்லை அல்லது சரியாக நிறுவியிருக்கிறீர்களா என்று சந்தேகப்பட வேண்டியதில்லை.

உங்கள் டொமைனை உள்ளமைக்கிறோம்.

எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு நிறுவலும் கூட சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் பார்வையாளர்கள் ஒருபோதும் கஷ்டப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த சாத்தியமான பிழைகள் எதையும் நாங்கள் சரிசெய்கிறோம்.

கலப்பு உள்ளடக்க பகுதிகளைச் சரிசெய்கிறோம்.

ஒவ்வொரு வலைப்பக்கத்திலும் SSL சான்றிதழ் சரியாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறோம், எனவே உங்கள் தளம் பிழை செய்திகளையும் எச்சரிக்கைகளையும் தவிர்க்கலாம்.

உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்.

நீங்கள் ஒருபோதும் பாதுகாப்பு இல்லாமல் இல்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் சான்றிதழை மேம்படுத்தி புதுப்பிக்கிறோம்.
Ftr What Is Mssl

நிர்வகிக்கப்பட்ட SSL சேவை உங்களுக்கு ஏன் தேவை?

எங்கள் நிர்வகிக்கப்பட்ட SSL சேவை பின்வரும் பொதுவான பிழைகளைத் தடுக்கிறது:

SSL சான்றிதழ் இல்லை

உங்கள் SSL தவறாக நிறுவப்பட்டிருந்தால், உங்கள் பார்வையாளர்கள் “சான்றிதழ் இல்லை” என்ற பிழையைக் காணலாம். அது ஒருபோதும் நடக்காது என்பதை எங்களது தானியங்கு நிறுவல் உறுதி செய்கிறது.

SSL சான்றிதழ் பொருத்தமின்மை

உங்கள் SSL-ஐ நிறுவுவதற்கு முன்பு உங்கள் தளம் சரியாக சரிபார்க்கப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறோம், இது உங்கள் தளத்தை பிழை இல்லாமல் வைத்திருக்கும்.

HTTPS திசைதிருப்பல் செயலற்ற நேரம்

SSL-க்கு சரியாக உள்ளமைக்கப்படாத ஒரு தளம் இந்தப் பிழைக்கு வழிவகுக்கும் (மேலும் உங்கள் தளத்தை அடைய முடியாத குழப்பமான பார்வையாளர்களுக்கும்). எங்கள் தானியங்கு செயல்முறை மூலம், உங்கள் பார்வையாளர்கள் அதை ஒருபோதும் பார்க்க மாட்டார்கள்.
Ftr Common Errors

உங்கள் பாதுகாப்பு மும்மடங்கு இயக்கத்தைப் பூர்த்தி செய்யவும்.

நிர்வகிக்கப்பட்ட SSL சேவையைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.


எந்த வகையான SSL சான்றிதழை நான் நிர்வகிக்கப்பட்ட SSL சேவையுடன் பெறுகிறேன்?

எங்கள் நிர்வகிக்கப்பட்ட SSL சேவையுடன் டொமைன் சரிபார்ப்பு (DV) SSL சான்றிதழ்களை வழங்குகிறோம். ஒரு சான்றிதழ், பல டொமைன்களின் சான்றிதழ் (SAN SSL, 5 டொமைன்கள் வரை) அல்லது ஒரு வைல்டுகார்டு சான்றிதழ் (10 துணை டொமைன்கள் வரை) நீங்கள் வாங்கலாம். எதிர்காலத்தில் கூடுதல் பல டொமைன் மற்றும் துணை டொமைன் சான்றிதழ்கள், மேலும் கூடுதல் சான்றிதழ் வகைகளை ஆதரிக்க திட்டமிட்டுள்ளோம். நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம், எனவே இங்கே தொடர்ந்து கண்காணியுங்கள்.


எனது SSL தயாராக இருப்பது எனக்கு எப்படித் தெரியும்?

எல்லா கோரிக்கைகளையும் செயல்படுத்த டிக்கெட் முறையைப் பயன்படுத்துகிறோம். உங்கள் இணையதளத்தில் நாங்கள் SSL சான்றிதழை அமைத்து, எல்லாம் சரியாக செயல்படுகிறதா என்று சரிபார்த்த பிறகு, எல்லாம் சரியாக செயல்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு மின்னஞ்சலை எங்களிடமிருந்து பெறுவீர்கள். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.


SSL சான்றிதழை அமைக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?

நாங்கள் பெரும்பாலான கோரிக்கைகளை 48 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் செயலாக்குகிறோம். எனினும், உங்களிடம் பல டொமைன்கள் அல்லது துணை டொமைன்கள் இருந்தால், நீண்ட நேரமாகலாம்.

4,* பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம் தரப்பு லோகோக்களும் குறிகளும் அவரவர் உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகக்குறிகள் ஆகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.