அழைக்கவும்
  • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

OV SSL சான்றிதழ்

உங்கள் தளம் அதிகாரப்பூர்வமானது என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்.
தொடக்க விலை ₹ 5,939.00/வருடம்
நீங்கள் புதுப்பிக்கும்போது ₹ 6,599.00/வருடம்4

OV SSL சான்றிதழ்

உங்கள் தளம் அதிகாரப்பூர்வமானது என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்.
தொடக்க விலை ₹ 5,939.00 /வருடம்
நீங்கள் புதுப்பிக்கும்போது ₹ 6,599.00/வருடம்4

பிஸினஸ்கள், இலாப-நோக்கற்ற
மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது.


உங்களிடம் தகவல் அளிக்கும் (இகாமர்ஸ்-அல்லாத) இணையதளம் இருந்தால், உங்களுக்கு நிறுவன சரிபார்ப்பு (OV) SSL சான்றிதழ் பொருத்தமாக இருக்கும். இந்த SSL -கள் உங்கள் பிஸினஸின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றன. இவை பார்வையாளரின் முகவரிப் பட்டியில் ஒரு பூட்டைக் காண்பிக்கின்றன, இதன் மூலம் அவர்களுக்கு இதில் கடவுச்சொற்கள், தொடர்புத் தகவல்கள் அல்லது நன்கொடைகளை வழங்குவது பாதுகாப்பானது என்று தெரியவரும்.

பார்வையாளர்கள் கிளிக் செய்வதற்கான நம்பிக்கையைக் கொடுங்கள்.

நிறுவன சரிபார்ப்பு (OV) SSL சான்றிதழ்கள், பார்வையாளர்களுக்கு நீங்கள் யார் என்று சொல்கிறீர்களோ அது உண்மையிலேயே நீங்கள்தான் என்பதையும், அவர்கள் ஒரு போலியான தளத்தில் இல்லை என்பதையும் உறுதியளிக்கின்றன.

தெளிவான பாதுகாப்புச் சின்னங்களைக் காண்பியுங்கள்.

OV SSL சான்றிதழ் பார்வையாளரின் உலாவிப் பட்டியில் ஒரு சிறிய பூட்டையும் HTTPS முன்சேர்க்கையையும் காண்பிக்கும், இது அவர்கள் ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட தளத்தில் இருப்பதைச் சொல்லும்.

தேவைப்படும்போதெல்லாம் உதவி பெறுங்கள்.

கேள்வி அல்லது கவலை உள்ளதா? விரைவுத் தீர்வுக்கு GoDaddy பாதுகாப்பு வல்லுநரை 040-67607600 -இல் அழையுங்கள்.

நீங்கள் சரியான SSL சான்றிதழைத் தேர்ந்தெடுப்பதை நாங்கள் எளிதாக்கியுள்ளோம்.

டொமைன் சரிபார்ப்பு (DV) SSL
சான்றிதழ்

நிறுவனச் சரிபார்ப்பு OV SSL
சான்றிதழ்

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL
சான்றிதழ்

இதற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியது:
தனிப்பட்ட இணையதளங்கள்
நிறுவனங்கள் மற்றும் பிஸினஸ் இணையதளங்கள்
இ-காமர்ஸ் இணையதளங்கள் (அவசியம்)
முகவரிப் பட்டியில் நம்பிக்கை சுட்டியை காட்டுகிறது
தானியங்கு சரிபார்ப்பு, நிமிடங்களில் வழங்கல்
பதிவு அதிகாரம் (RA) கைமுறை சரிபார்ப்பு, 5-7 நாட்களுக்குள் வழங்கப்படுதல்*
Google® தரமதிப்பீட்டை மேம்படுத்துகிறது
வலிமையான SHA-2 & 2048 பிட் குறியாக்கம்
முகவரிப் பட்டியில் பூட்டு
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது (பல-டொமைன் SAN SSL)
எல்லா துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது (வைல்ட்கார்ட SSL)
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை

வேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது?


Web Backup Green 217
வெப்சைட் பேக்அப்


உங்கள் இணையதளம் மற்றும் தரவின் காப்புப்பிரதியை சேமிக்கும். ஒருவேளை தேவைப்பட்டால்.

தொடக்க விலை
₹ 129.00/மாதம்

Web Secrity Green 217
இணையதளப் பாதுகாப்பு


உங்கள் இணையதளத்தைப் பாதுகாக்கிறது. ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கிறது.

தொடக்க விலை
₹ 396.46/மாதம்

Ssl Cert Green 217
SSL சான்றிதழ்கள்


பச்சைப் பூட்டைப் பெற்றிடுங்கள் & உங்கள் பார்வையாளர்களைப் பாதுகாத்திடுங்கள்.

தொடக்க விலை
₹ 3,519.00/வருடம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நிறுவனச் சரிபார்ப்பு (OV) SSL சான்றிதழ் என்றால் என்ன?

நிறுவனச் சரிபார்ப்பு (OV) SSL சான்றிதழ்கள், பார்வையாளர்கள் ஒரு சட்டப்பூர்வமான பிஸினஸால் இயக்கப்படும் இணையதளத்தில் இருப்பதை அவர்களுக்குச் சொல்லும். நாங்கள் ஒரு OV சான்றிதழை வழங்கும் முன்னர், விண்ணப்பத்தில் பட்டியலிட்டுள்ள பிஸினஸ் குறித்த பின்வருவனவற்றை எங்களது ஊழியர்களில் ஒருவர் சரிபார்ப்பார்:

  • அந்தப் பெயரில் இருப்பதை
  • பட்டியலிடப்பட்டுள்ள முகவரியில் இருப்பதை
  • சொந்தமாக டொமைன் பெயர் உள்ளதை

உரிமையாளர்கள் உண்மையிலேயே SSL சான்றிதழைக் கோரியுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த பிஸினஸையும் நாங்கள் தொடர்புகொள்வோம். எங்களது நேரடியான சரிபார்ப்பு, OV சான்றிதழை திருடர்கள் அல்லது ஃபிஷர்கள் எப்போதுமே பெற முடியாதபடி செய்கிறது.


ஒரு OV SSL சான்றிதழ் எப்படி இருக்கும்?

OV SSL சான்றிதழ் மூலம் பாதுகாக்கப்பட்ட எந்தவொரு இணையதளமும் பார்வையாளரின் உலாவிப் பட்டியில் ஒரு சிறிய பூட்டையும் HTTPS முன்சேர்க்கையையும் காண்பிக்கும். அது EV சான்றிதழின் பச்சைப் பட்டி போல பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இல்லாமலிருந்தாலும், தங்களது தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் பகிர்வதற்கு முன்பு அதைப் பார்ப்போருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும். இந்தச் சின்னங்கள், பார்வையாளர்கள் ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட தளத்தில் உள்ளதையும் அவர்களது தரவுப் பாதுகாப்பாக உள்ளதையும் உறுதிசெய்யும்.

உங்கள் பிஸினஸுக்கு ஒரு OV SSL வழங்கும் நன்மைகள் என்ன?

OV சான்றிதழ் என்பது கைமுறையாக ஆய்வுசெய்யப்படுகிறது, எனவே இது திருடர் அல்லது ஹேக்கருக்கு வழங்கப்படும் சாத்தியம் இல்லை. டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்களுக்கான சரிபார்ப்புச் செயல்பாடு தானியங்காக்கப்பட்டுள்ளதால் அவை இந்த அளவு உத்தரவாதம் அளிப்பதில்லை.

நிறுவனச் சரிபார்ப்பு (OV), நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) மற்றும் டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்களுக்கிடையிலான வித்தியாசம் என்ன?

டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்கள்தான் இருப்பதிலேயே பெறுவதற்கு எளிதானவை. இதில் எந்த கைமுறை அடையாளச் சோதனையும் இல்லை, இணையதளத்திற்குப் பின்னால் உள்ள டொமைன் விண்ணப்பதாரருக்குச் சொந்தமானதா என்னும் தானியங்காக்கப்பட்ட சரிபார்ப்பு மட்டுமே இருக்கும். உங்களிடம் ஒரு தனிப்பட்ட இணையதளம் அல்லது வலைப்பதிவு இருந்தால், உங்களுக்கு ஒரு DV SSL சான்றிதழே போதுமானது.

நிறுவனச் சரிபார்ப்பு (OV) சான்றிதழ்கள் பாதுகாப்பை ஒரு படி மேலே எடுத்துச் செல்கின்றன, இதில் நிறுவனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்க மனிதர்கள் சரிபார்ப்பு செய்யும் தேவை உள்ளது. இது நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழ்களுக்கும் பொருந்தும், இதில் டொமைன் உரிமை மட்டுமல்லாது பிஸினஸ் அடையாளம், சட்டப்பூர்வ நிலை மற்றும் முகவரி ஆகியவையும் சரிபார்க்கப்படும். EV சான்றிதழுக்கான ஆய்வுச் செயல்பாடு பிற சான்றிதழ்களை விட விரிவானது, எனவே EV SSL சான்றிதழ்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிக நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

முழுமையான விவரங்கள்


ஏன் GoDaddy SSL சான்றிதழ்கள் தேவை?
CA/உலாவி மன்றம் வழிகாட்டுதல்களுடன் இணங்கும் சான்றிதழ்களின் முழுமையான வரம்பை நாங்கள் வழங்குகிறோம். எங்களுடைய சான்றிதழ்கள் அனைத்திலும் உள்ள அம்சங்கள்:

  • SHA-2 ஹேஷ் அல்காரிதம் மற்றும் 2048-பிட் குறியாக்கம்
  • மிகச் சிறந்த பாதுகாப்பு உதவி
4,* பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம் தரப்பு லோகோக்களும் குறிகளும் அவரவர் உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகக்குறிகள் ஆகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.