நிபுணர் உதவியை 040-67607600
mrq-sitelock-cdn-background

சைட்லாக் இணையதள பாதுகாப்பு

உங்கள் இணையதளத்தைச் சுத்தமாகவும் வேகமாக இயங்குமாறும் வைத்திருங்கள்.

 • தீம்பொருளை ஸ்கேன் செய்து, அகற்றும்
 • தீம்பொருள் உங்கள் இணையதளத்தை அடையும் முன்னர் அதைத் தடுத்து நிறுத்துங்கள்
 • எங்கெங்கு பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன என்பதை, அவை தவறாகப் பயன்படுத்தப்படும் முன்பு கண்டறியுங்கள்

  ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது

சைட்லாக் இணையதள பாதுகாப்பு

உங்கள் இணையதளத்தைச் சுத்தமாகவும் வேகமாக இயங்குமாறும் வைத்திருங்கள்.

 • தீம்பொருளை ஸ்கேன் செய்து, அகற்றும்
 • தீம்பொருள் உங்கள் இணையதளத்தை அடையும் முன்னர் அதைத் தடுத்து நிறுத்துங்கள்
 • எங்கெங்கு பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன என்பதை, அவை தவறாகப் பயன்படுத்தப்படும் முன்பு கண்டறியுங்கள்

  ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது

சைட்லாக் இணையதள பாதுகாப்பு

உங்கள் இணையதளத்தைச் சுத்தமாகவும் வேகமாக இயங்குமாறும் வைத்திருங்கள்.

 • தீம்பொருளை ஸ்கேன் செய்து, அகற்றும்
 • தீம்பொருள் உங்கள் இணையதளத்தை அடையும் முன்னர் அதைத் தடுத்து நிறுத்துங்கள்
 • எங்கெங்கு பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன என்பதை, அவை தவறாகப் பயன்படுத்தப்படும் முன்பு கண்டறியுங்கள்

  ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது

SiteLock எசன்ஷியல்ஸ், டீலக்ஸ் மற்றும் அல்டிமேட் திட்டங்களும் அடங்கும்

ஸ்பேம் கருப்புப்பட்டியல் கண்காணிப்பு
தேடல் பொறி கருப்புப்பட்டியல் கண்காணிப்பு
சைட்லாக் நம்பிக்கை முத்திரை
30- நாள் பணம்-திரும்பப் பெறும் உத்தரவாதம்2

பாதுகாப்பான வாடிக்கையாளர்களே மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்.

featuremodule-sitelock-dailyscans
பிழைகளை தினசரி ஸ்கேன்கள் அகற்றுகின்றன
ஹேக்கர்கள் ஸ்மார்ட்டானவர்கள்தான், ஆனால் SiteLock அவர்களை விட ஸ்மார்ட்டானது. இது தீம்பொருள், வைரஸ்கள், சந்தேகத்திற்கிடமான குறியீடு, பயன்பாட்டின் பலவீனங்கள் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக உங்கள் இணையதளத்தை நாளொன்றுக்கு ஒருமுறை ஸ்கேன் செய்கிறது. தீங்கிழைக்கும் விஷயங்கள் உங்கள் தளத்திற்கு சேதத்தை விளைவிக்கும் முன்னர், SMART கருவி அதைத் தானாக அகற்றும். SiteLock, SQL-இன்ஜெக்‌ஷன்கள் (SQLi) மற்றும் குறுக்கு-தள ஸ்கிரிப்டுகளை (XSS) கண்டுபிடிக்கும்போது உங்களுக்குத் தெரியப்படுத்தவும் செய்கிறது. ஸ்கேனைப் பார்த்து, உங்கள் SiteLock டேஷ்போர்டிலிருந்து எந்த நேரத்திலும் நிலையைச் சரிசெய்யுங்கள்.
featuremodule-sitelock-thebestdefense
சிறப்பான தற்காப்பே சிறந்த தாக்குதல்
இணையப் பயன்பாட்டுத் தடுப்புச்சுவர் (WAF), உள்வரும் போக்குவரத்து இணையதளத்தை அடையும் முன்னர் அதை வடிகட்டும். SiteLock-இன் TrueShieldTM WAF ஆனது போக்குவரத்து எங்கிருந்து வருகிறது, அது எவ்வாறு நடந்துகொள்கிறது மற்றும் அதற்கு என்ன தகவலைக் கோருகிறது என்பனவற்றை மதிப்பாய்வு செய்யும். அது வாடிக்கையாளர்களையும் தேடு பொறிகளையும் அனுமதிக்கும், ஆனால் தீங்கிழைக்கும் பாட்களையும் ஹேக்கர்களையும் தடுக்கும்.
featuremodule-sitelock-lightningfastloadtimes
மின்னல்-வேக ஏற்றும் நேரங்கள்
சராசரிப் பார்வையாளர் வெளியே செல்வதற்கு கிளிக் செய்யும் முன்னர் இணையதளம் ஏற்றப்படுவதற்காக ஒரு சில வினாடிகள் காத்திருப்பார். இதனால்தான் அல்டிமேட் திட்டத்தில் உலகளாவிய உள்ளடக்க வழங்குதல் நெட்வொர்க்கை (CDN) சேர்த்துள்ளோம். SiteLock-இன் TrueSpeedTM CDN, வாடிக்கையாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதையோ அவர்கள் என்ன சாதனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையோ பொருட்படுத்தாமல் வேகத்தைக் கணிசமான அளவுக்கு அதிகரிக்கிறது. வேகமான ஏற்றுதல்கள் என்றால் அதிக பிஸினஸ் என்று பொருள். போக்குவரத்து அதிகரிப்பு இருக்கும் பட்சத்தில், CDN ஆனது உங்கள் இணையதளம் தொடர்ந்து செயலில் இருப்பதற்கும் இயங்குவதற்கும் உத்தரவாதமளிக்கிறது, எனவே உங்கள் பிஸினஸுக்கு இடைஞ்சல் இருக்காது.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

 • TrueShield WAF மற்றும் TrueSpeed CDN ஆகியவை எவ்வாறு வேலை செய்கின்றன?

  உங்கள் இணையதளத்தின் DNS பதிவுகளில் எளிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் (மற்றும் வன்பொருள் அல்லது மென்பொருள் தேவையின்றி), உங்கள் இணையதளப் போக்குவரத்தானது SiteLock-இன் உயர்-ஆற்றல்மிக்க சர்வர்களின் உலகளாவிய நெட்வொர்க் வழியாக சிக்கலின்றி செலுத்தப்படும். WAF, உங்கள் உள்வரும் போக்குவரத்தை நிகழ்நேரத்தில் ஸ்கிரீன் செய்யும், இதனால் சமீபத்திய இணைய அச்சுறுத்தல்களை (எ.கா SQL இன்ஜெக்‌ஷன் தாக்குதல்கள், ஸ்கிராப்பர்கள், தீங்கிழைக்கும் பாட்கள், கருத்து ஸ்பேமர்கள்) தடுக்கிறது மற்றும் மூன்று இலக்க ஜிகாபிட் DDoS தாக்குதல்களைத் தடைசெய்கிறது.

  மேம்பட்ட WAF அமைப்புகள் மூலம், பார்வையாளர்கள் உங்கள் இணையதளத்துடன் கொண்டிருக்கக் கூடிய ஊடாடல்களைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் பெரும்பாலான தாக்குதல்களைத் தடுக்கலாம். WAF-ஐ அமைக்க ஐந்து நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும்.

  ஏன் எனக்கு TrueShield WAF தேவை?

  • SQLi மற்றும் XSS போன்ற பொதுவாக ஹேக்குகளைத் தடுக்கும்

  • உங்கள் இணையதளக் கோப்புகளுக்கான பின்கதவு அணுகலை மூடும்

  • வாடிக்கையாளர் தகவல்களையும் இணையதள தரவுத்தளங்களையும் பாதுகாக்கும்

  • ஸ்பேம் கருத்துகளைத் தடுக்கும்

  இதனிடையே CDN, வேகமான ஏற்றுதல் நேரங்களுக்காக வெளிச்செல்லும் போக்குவரத்தை வேகப்படுத்தி, உங்கள் தளத்திலுள்ள பார்வையாளர்களை நீண்ட நேரம் தக்க வைக்கிறது.

  SiteLock-இன் TrueSpeedTM CDN ஆனது இந்த புத்திசாலித்தனமான உள்ளடக்கத் தேக்ககத் திறன்களைக் கொண்டுள்ளது:

  நிலையான உள்ளடக்கத்தைத் தேக்ககப்படுத்துதல்
  CDN, நிலையான உள்ளடக்கத்தை உங்கள் இணையதளம் முழுவதும் தேக்ககப்படுத்துகிறது - இதில் HTML கோப்புகள், JavaScript மூலங்கள் மற்றும் இமேஜரி ஆகியவை அடங்கும் - எனவே அவை வேகமாகவும் அதிக செயல்திறனுடனும் வழங்கப்படும்.

  இயங்குநிலை உள்ளடக்கத்தைத் தேக்ககப்படுத்துதல்
  சில இணையதளப் பக்கங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாறும், மற்றவை அரிதாக அல்லது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் மாறும். SiteLock, தொடர்ந்து இணையதள வளங்களின் விவரத்தைப் பதிவுசெய்து, உள்ளடக்கம் எவ்வாறு காண்பிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களைச் சேகரிக்கிறது. இது தேவைக்குகந்த தேக்ககப்படுத்துதலைச் செயல்படுத்தி, பயனருக்கு வழங்கப்படும் உள்ளடக்கம் இன்று வரை புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யும்.

  நினைவகத்திலிருந்து பக்கங்களை அளித்தல்
  SiteLock-இன் CDN-ஆல், அடிக்கடி அணுகப்பட்ட பக்கங்களை அடையாளம் கண்டு, நினைவகத்திலிருந்து அவற்றை நேரடியாக வழங்க முடியும். இது கோப்பு அமைப்பையும் பஃபர் தேக்ககம் போன்ற பிற பொதுவான கருவிகளையும் தவிர்க்கிறது.

  முழுமையான தேக்ககப்படுத்துதல் கட்டுப்பாடு
  உங்கள் இணையதளத்தின் ஒரு பகுதியை அல்லது முழுவதையும் மாற்றினால் அல்லது மறுவடிவமைத்தால், தேக்ககப்படுத்திய உள்ளடக்கத்தை நீக்க CDN அனுமதிக்கிறது. SiteLock-இன் சர்வர்கள் அல்லது குறிப்பிட்ட பக்கங்களிலிருந்து மட்டும் உங்கள் தளக் கோப்புகள் அனைத்தையும் அழிக்கலாம். இது புதுப்பிக்கும் செயல்பாட்டை விரைவாக்கி, உங்கள் இணையதளத்தை உடனடியாகப் புதுப்பிக்க அனுமதிக்கிறது.

  எனக்கு ஏன் TrueSpeed CDN தேவை?

  • வேகமான ஏற்றுதல் நேரங்களுடன் செயல்திறனையும் வாடிக்கையாளர் திருப்தியையும் மேம்படுத்த
  • உங்கள் தேடல் தரவரிசையை மேம்படுத்த – வேகமான தளங்களுக்கு தேடல் முடிவுகளில் உயர் தரவரிசை கிடைக்கும்
  • குறைவான திரும்பிவரும் விகிதம்
  • போக்குவரத்து மிகையாக இருக்கும் பட்சத்தில் தளச் செயலிழப்பைத் தடுக்கும்
 • என்னிடம் ஒரு SSL சான்றிதழ் இருக்கும்போது, எனக்கு சைட்லாக் ஏன் தேவை?

  பார்வையாளர்களுக்கும், உங்கள் இணையதளத்திற்கும் இடையே பரிமாறப்படும் தகவல்களை (உதா. கிரெடிட் கார்டு தகவல்கள், உள்நுழைவுப் பெயர் மற்றும் கடவுச்சொல்) ஒரு SSL சான்றிதழ் பாதுகாக்கிறது, ஆனால் ஹேக்கர்கள் உள்நுழைந்து, சேதமேற்படுத்த பயன்படுத்தும் தீம்பொருளையோ பலவீனங்களையோ அதனால் கண்டுபிடிக்க முடியாது.

  SiteLock பலவீனங்களையும் தீம்பொருட்களையும் கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாது, அவற்றை எங்களது SMART தீம்பொருள் அகற்றுதல் கருவியைப் பயன்படுத்தி உங்கள் இணையதளத்திலிருந்து தானியங்காக அகற்றிவிடுகிறது. இது உங்கள் இணையதளத்தை ஹேக்கர்கள்-உள்நுழையாதபடி செய்து, உங்கள் SSL சான்றிதழுக்கு துணை நிற்கும்.

 • SMART தானியங்கு தீம்பொருள் அகற்றுதலை எவ்வாறு அமைப்பது?

  SiteLock-ஐ அமைக்க வெறும் ஐந்து நிமிடங்களே ஆகும். உங்கள் GoDaddy கணக்கில் உள்நுழைந்து, SiteLock என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கிற்கு அடுத்துள்ள தொடங்கு என்பதை கிளிக் செய்து, கோரப்பட்டுள்ள தகவல்களை வழங்கவும். தானியங்கு தீம்பொருள் அகற்றுதலுக்கு SMART -ஐ இயக்கவும். தானியங்கு அகற்றுதல் கருவியை அமை
 • சைட்லாக் எப்படி செயல்படுகிறது?

  எங்களது 360°இணையப் பாதுகாப்பு ஸ்கேனர், உங்கள் இணையதளத்தில் ஃபிஷிங் திருட்டுகள், SQL இன்ஜக்‌ஷன் குறைபாடுகள், மற்றும் குறுக்கு-தள ஸ்கிரிப்டிங் (XSS) உள்ளிட்ட பொதுவான பலவீனங்களை சோதிக்கும். இது ஹேக்கர்கள் உள்நுழையப் பயன்படுத்தும் பயன்பாட்டுப் பலவீனங்களைக் கண்டறிய உங்கள் URL -களைச் சோதிக்கிறது, படிவங்களைச் சமர்ப்பிக்கிறது, கருத்துரைகளை இடுகையிடுகிறது மற்றும் பிற சோதனைகளை நடத்துகிறது.

  SiteLock -இன் SMART தீம்பொருள் அகற்றுதல் கருவி தீம்பொருட்களை தானியங்காக அகற்றுகிறது - நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. எங்களது பாதுகாப்பு முறைமை உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தேடு பொறிகள் உங்களது தளத்தை கருப்புப் பட்டியலில் சேர்க்காமல் இருக்கவும் வைக்கிறது.

  உங்களது சமீபத்திய ஸ்கேன் முடிவுகளை எந்நேரத்திலும், எங்களது படிப்பதற்கு-எளிதான ஆன்லைன் டேஷ்போர்ட் மூலம் சரிபார்க்கலாம். இது ஆங்கிலம், ஸ்பானிஷ், ஃபிரெஞ்ச், ஜெர்மன், டச்சு, இத்தாலியன், போலிஷ் மற்றும் போர்ச்சுகீஸ் (பிரேசில் மற்றும் போர்ச்சுகல்) மொழிகளில் நிகழ்-நேர அறிக்கைகளை வழங்குகிறது, விரைவில் மேலும் பல மொழிகளில் வரவிருக்கிறது. மிகவும் சிக்கலான பிரச்சனைகளுக்கு, உங்களை மீண்டும் விரைவாக ஆன்லைனில் கொண்டு செல்ல உங்களுக்கு உதவத் தயாராக ஆன்லைன் பாதுகாப்பு புரொஃபஷனல்கள் உள்ள ஒரு விருது-வென்ற குழுவை SiteLock கொண்டுள்ளது.

 • தீம்பொருட்களை SMART எந்த அளவுக்கு விரைவாக அகற்றும்?

  எங்கள் எசன்ஷியல்ஸ், டீலக்ஸ் மற்றும் அல்டிமேட் திட்டங்களின் மூலம், SMART -இல் “தானியங்கு-சுத்தப்படுத்துதலை” இயக்கினால், பிழைத்தீர்வு உடனடியாக நடக்கும். தானியங்கு-சுத்தப்படுத்துதல் அணைக்கப்பட்டிருந்தால், SiteLock கண்டுபிடிக்கும் எதையும் ஒரு பொத்தானைக் கிளிக் செய்து பிழைத் தீர்க்கும் அல்லது SMART விவரங்கள் திரையில் நீங்கள் பார்க்கும் ஸ்கேன் அறிவிப்பின் அடிப்படையில் உங்கள் தளத்தை நீங்களே சுத்தம் செய்யும் விருப்பம் உங்களுக்குக் கிடைக்கும்.
 • எனது தளத்தில், சிக்கல்களை SiteLock உண்மையில் சரிசெய்து விட்டதா என்பதை நான் எப்படி சொல்ல முடியும்?

  SiteLock டேஷ்போர்டில் உள்நுழைந்து, SMART -இன் விவரங்கள் பிரிவுக்கு செல்லவும். SiteLock கண்டறிந்த, மற்றும் சரிசெய்த விஷயங்களைக் கூறும் ஒரு அறிக்கையை அங்கே காணலாம்.
 • SiteLock எனது தளத்தின் வேகத்தைக் குறைத்து விடுமா?

  எல்லா ஸ்கேனிங்கும் உண்மையில் SiteLock சர்வர்களில் தான் நடைபெறும், அதனால் ஸ்கேன் செய்யும்போது உங்கள் தளம் பாதிக்கப்படாது.

  SiteLock ஒரு தளத்தை முதல் முறையாக ஸ்கேன் செய்யும்போது, கோப்புகளை SiteLock-இன் சர்வர்களில் பதிவிறக்க சிறிது நேரமெடுத்துக் கொள்ளும். இது உங்கள் தளத்தின், குறிப்பாகப் பெரிய தளங்களின், செயல்திறனில் சிறியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, SiteLock குறைவான கோப்புகளையே தொடர்ந்து பதிவிறக்கும், ஏனென்றால் இது புதிய மற்றும் மாற்றப்பட்டக் கோப்புகளை மட்டுமே சர்வருக்கு பதிவிறக்கம் செய்யும். இது ஸ்கேன் செய்யும்போது SiteLock -கின் தாக்கத்தைக் குறைக்கும்.

 • ஸ்கேன் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

  இது தளத்தின் அளவு மற்றும் கோப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்தது. ஒவ்வொரு கோப்பும் மிகவும் வேகமாக ஸ்கேன் செய்யப்படும், உண்மையான ஸ்கேனிங் SiteLock -இன் சர்வர்களில் நடைபெறுகிறது, அதனால் உங்களுடைய மொத்த காத்திருக்கும் நேரமானது: பதிவிறக்குவதற்காகும் நேரம் + ஸ்கேன் செய்வதற்காகும் நேரம் + ஏற்றுவதற்காகும் நேரம்.
 • SiteLock ஆனது மறுபிரதிக் கோப்புகளை உருவாக்குகிறதா?

  ஆம், மாற்றப்பட்ட கோப்புகளைக் SiteLock மறுபிரதி எடுக்கும். இந்தக் கோப்புகள், சுருக்கமான காலஅளவுக்கு வைத்திருக்கப்படும், பிறகு நீக்கப்படும்.
 • SiteLock என்னுடைய தரவுத்தளத்தை ஸ்கேன் செய்யுமா?

  இல்லை, சைட்லாக் இணையதள பாதுகாப்பானது உங்கள் தரவுத்தளங்களின் உள்ளடக்கத்தை ஸ்கேன் செய்வதில்லை.
 • எந்த கால இடைவெளியில் ஸ்கேன் நடக்கும்?

  உங்கள் டேஷ்போர்டின் SMART அமைப்புகள் பிரிவில், ஸ்கேன் நிகழ்த்தப்படும் காலத்தை தினசரி, வாராந்திரம் அல்லது மாதாந்திரம் என்று அமைக்கலாம்.
 • SiteLock தீம்பொருளைத் தானாக அகற்றுகிறது என்றால், எதற்காக கைமுறையான பழுதுபார்ப்பையும் வழங்குகிறீர்கள்?

  தினமும் புதிய வகையான தீம்பொருள் உருவாக்கப்படுகின்றன. புதியதொரு தாக்குதலைப் பற்றி SiteLock அறிந்திருக்காத 24 - 48 மணிநேர குறைந்த காலஅளவுகள் இருக்கலாம். ஆனால், நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம், ஏனெனில் SiteLock தீம்பொருள் பாதுகாப்புத் தொழில்நுட்பவியலாளர்கள் எப்போதுமே சமீபத்திய அச்சுறுத்தல்கள் குறித்து நன்கு தெரிந்தவர்களாக உள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் உங்கள் தளத்தைக் கைமுறையாகச் சரிசெய்வதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு நிலையை வழங்குகின்றனர்.
 • என்னென்ன வகையான இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக TrueShield WAF பாதுகாப்பை அளிக்கிறது?

  SiteLock-இன் WAF ஆனது SQL உட்செலுத்தல், குறுக்கு-தள ஸ்கிரிப்டிங், சட்டவிரோத மூல அணுகல் மற்றும் பிற OWASP -இன் முதன்மையான 10 அச்சுறுத்தல்கள் உட்பட பயன்பாட்டு அடுக்கு ஹேக்கிங் முயற்சியின் எந்தவொரு வகையிலிருந்தும் உங்கள் பயன்பாட்டைப் பாதுகாக்கிறது. பயன்பாட்டு DDoS தாக்குதல்கள், ஸ்கிராப்பிங் மற்றும் பலவீனங்களுக்கான ஸ்கேனிங் போன்றவற்றுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் தீங்கிழைக்கின்ற பாட்களை மேம்பட்ட கிளையண்ட் வகைப்படுத்தல் தொழில்நுட்பம் கண்டறிந்து தடுக்கிறது.
 • SiteLock எனது இணையதளத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்துமா?

  இல்லை. SiteLock ஒவ்வொரு பார்வையாளருக்கும் மிக நெருக்கமாக இருக்கும் தரவு மையங்களிலிருந்து சேவை வழங்குவதை உறுதிசெய்வதற்கு, உலகளாவிய வகையில் பரந்துள்ள தரவு மையங்களின் நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது. இது பெரும்பாலான பெரிய இணையதளங்கள் உள்ளடக்க வழங்கல் நெட்வொர்க் (CDN) மூலம் உள்ளடக்க வழங்கலை வேகப்படுத்துவதற்கு பயன்படுத்தும் அதே தொழில்நுட்பமாகும். உண்மையில், SiteLock தளத் தரவைத் தேக்கப்படுத்துதல் மற்றும் பிற முடுக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் இணையதளத்தை வேகமாக இயங்கச் செய்து, குறைவான கணக்கீட்டையும் அலைக்கற்றை மூலங்களையும் பயன்படுத்தப்ச் செய்கிறது. எங்களது நெட்வொர்க் வழியாக போக்குவரத்தை திசைதிருப்புவதன் மூலம், இணையதளத்தின் செயல்திறனானது கூடுதல் ஹாப்பை ஈடுசெய்வதை விட CDN -இன் மேம்பாட்டு இயல்புகளை அதிகரிக்கிறது. இதனால் குறைவான செயலற்ற நிலையும் இணையப்பக்கங்கள் விரைவாக ஏற்றப்படுதலும் நிகழும்.
2 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.