அழைக்கவும்
 • காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600
தொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்
உதவி மையம்

எங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்

உதவி

SSL சான்றிதழ்கள்

SSL சான்றிதழைப் பெறவும்.
பார்வையாளர்களுக்கு நீங்கள் நம்பகமானவர்கள் மற்றும் உண்மையானவர்கள் என்பதைக் காண்பிக்கவும்.

அனைத்து SSL சான்றிதழ்களிலும் இவை உள்ளடங்கியிருக்கும்

SHA-2 மற்றும் 2048-பிட் குறியாக்கம் – சந்தையில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது.
Google தேடல் தரவரிசையை உயர்த்துகிறது
30- நாள் பணம்-திரும்பப் பெறும் உத்தரவாதம்
எல்லையற்ற பாதுகாப்பு ஆதரவு
எல்லையற்ற சர்வர்களைப் பாதுகாக்கிறது
இலவசமாக வரம்பற்ற மறுவழங்கல்கள்
அனைத்து முக்கிய உலாவிகளுக்கும் ஏற்றதாகும்
உங்களது தளத்தில் ஒரு பாதுகாப்பு முத்திரையை காட்சிப்படுத்துகிறது.
USD 1 மில்லியன் வரையிலான பொறுப்புப் பாதுகாப்பு

நீங்கள் சரியான SSL சான்றிதழைத் தேர்ந்தெடுப்பதை நாங்கள் எளிதாக்கியுள்ளோம்.

டொமைன் சரிபார்ப்பு (DV) SSL
சான்றிதழ்

நிறுவனச் சரிபார்ப்பு OV SSL
சான்றிதழ்

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL
சான்றிதழ்

இதற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியது:
இதற்குச் சிறப்பாகப் பொருந்தக்கூடியது:
தனிப்பட்ட இணையதளங்கள்
நிறுவனங்கள் மற்றும் பிஸினஸ் இணையதளங்கள்
இ-காமர்ஸ் இணையதளங்கள் (அவசியம்)
முகவரிப் பட்டியில் நம்பிக்கை சுட்டியை காட்டுகிறது
முகவரிப் பட்டியில் நம்பிக்கை சுட்டியை காட்டுகிறது
தானியங்கு சரிபார்ப்பு, நிமிடங்களில் வழங்கல்
தானியங்கு சரிபார்ப்பு, நிமிடங்களில் வழங்கல்
பதிவு அதிகாரம் (RA) கைமுறை சரிபார்ப்பு, 5-7 நாட்களுக்குள் வழங்கப்படுதல் *
பதிவு அதிகாரம் (RA) கைமுறை சரிபார்ப்பு, 5-7 நாட்களுக்குள் வழங்கப்படுதல் *
Google® தரமிடலை மேம்படுத்துகிறது
Google® தரமிடலை மேம்படுத்துகிறது
வலிமையான SHA-2 & 2048 பிட் குறியாக்கம்
வலிமையான SHA-2 & 2048 பிட் குறியாக்கம்
முகவரிப் பட்டியில் பூட்டு
முகவரிப் பட்டியில் பூட்டு
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது (பல-டொமைன் SAN SSL)
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது (பல-டொமைன் SAN SSL)
எல்லா துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது (வைல்ட்கார்ட SSL)
எல்லா துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது (வைல்ட்கார்ட SSL)
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை

உங்களின் SSL சான்றிதழுக்கு எதற்கு GoDaddy தேர்வுசெய்ய வேண்டும்?

75Pxl Customer Service Blue

தனித்துவமான வாடிக்கையாளர் சேவையைப் பெறுவீர்கள்.
நீங்கள் எப்போதும் எங்கள் GoDaddy வழிகாட்டிகள் பாதுகாப்பு வல்லுநர்களிடமிருந்து மிகவும் நட்பான, அறிவுப் பூர்வமான, உடனடி ஆதரவைப் பெறலாம். தற்புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை, ஆனால் நாங்கள் பல பெருமை வாய்ந்த Stevie® விருதுகளைப் பெற்றுள்ளோம் (சிறந்த சேவையை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விருது).
75Pxl Certificate Blue

உண்மையில், நாங்கள் தான் உங்கள் சான்றிதழ் ஆணையம்.
GoDaddy, சான்றிதழ் ஆணையம் (CA)/உலாவி மன்றத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும், இதன் நோக்கம் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் அதீத அங்கீகரிக்கப்பட்ட இணைய அனுபவத்திற்கு வழிவகுக்கும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். எங்கள் சான்றளிக்கப்பட்ட சேவைகளை உலகளாவிய தரவு மையங்கள், பேரிடர் மீட்பு, மிகைமை மற்றும் அதிக கிடைக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்ட ஒரு வலுவான PKI உள்கட்டமைப்பு மூலம் நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் ஆன்லைன் டிரஸ்ட் ஹானர் ரோல் மற்றும் வெப்ட்ரஸ்ட் விருதுகளையும் வென்றுள்ளோம்.

GoDaddy SSL சான்றிதழைப் பெறுவதற்கான கூடுதல் காரணங்கள்.

SSL சான்றிதழ்கள் எப்படி வேலை செய்கின்றன.

SSL சான்றிதழ்கள், பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் பிற மதிப்புமிக்க தரவை ஹேக்கர்கள் மற்றும் திருடர்களிடமிருந்து தடுக்கக்கூடிய ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் சுரங்கப்பாதையை உருவாக்குகிறது.

முதலில், SSL ஒப்பந்தம்.
ஒரு பார்வையாளர் உங்களது SSL-பாதுகாக்கப்பட்ட இணையதளத்திற்குள் நுழையும்போது, பார்வையாளரின் உலாவியுடன் உங்களது SSL சான்றிதழ் தானாகவே ஒரு குறியாக்கப்பட்ட இணைப்பினை உருவாக்கும். உங்கள் தளத்தின் பக்கங்கள் மற்றும் துணை டொமைன்களில் SSL பயன்படுத்தப்பட்டால் அது மிகவும் பாதுகாப்பாக மாறும்.
பேட்லாக் படவுரு தோன்றும்.

இணைக்கப்பட்டவுடன், உங்கள் இணையதளம் உலாவவும், ஷாப்பிங் செய்யவும், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் மற்றும் உங்கள் அஞ்சல் பட்டியலுக்கு குழுசேர்தல் போன்ற இன்னும் பலவற்றுக்குப் பாதுகாப்பானது என்பதைப் பார்வையாளர்களுக்குக் காட்டுவதற்காகப் பார்வையாளரின் உலாவிப் பட்டியில் ஒரு பேட்லாக் ஐகான் மற்றும் https முன்னொட்டு தோன்றும். பாதுகாப்பானது அல்ல என்ற குறி முன்னாடி இருந்தது எனில், பூஃப் இப்போது அது இருக்காது. நீங்கள் EV (நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு) SSL-ஐ நிறுவினால், உங்கள் சட்டப்பூர்வ நிலையை நிரூபிக்க உங்கள் நிறுவனத்தின் பெயரைக் காட்டும்.

நீங்கள் செயல்படத் தயாராகிவிட்டீர்கள்.
உங்கள் இணையதளத்திலிருந்து வெளியே செல்லும் மற்றும் உள்வரும் தகவல்கள் அனைத்தும் இப்போது குறியாக்கம் செய்யப்படுகின்றன, இதனால் உங்களின் முக்கியமான தரவை ஹேக் செய்வது என்பது இயலாத விஷயம்.
Ftr Ssl Cert Non Eng

இணையதளப் பாதுகாப்பின் பிற வகைகள்.

உங்கள் இணையதளம் தாக்கப்படுவதைத் தடுப்பதன் மூலம் விரிவான பாதுகாப்பை நோக்கி அடுத்த அடியை எடுத்துவைக்கிறது, ஹேக்கர்களிடமிருந்து உங்களைப் பாதுகாப்பதில் GD எப்படி உதவும் என்பது குறித்து மேலும் அறிய கீழுள்ள தயாரிப்புகளைப் பார்க்கவும்.

SSL சான்றிதழ்கள் பற்றி அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்.

என்னுடைய SSL சான்றிதழை எப்படி நிறுவுவது?

SSL சான்றிதழ் வழங்கப்படும்போது, அதை உங்களிடம் தெரிவிக்க நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம். உங்கள் தளம் எங்கே ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது மற்றும் சான்றிதழைக் கொண்டு வந்த போது நீங்கள் எந்தெந்த விருப்பங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதைப் பொறுத்துதான் அடுத்து வரும் செயல்கள் தீர்மானிக்கப்படும்.

நீங்கள் இணையதள ஹோஸ்டிங், இணையதள கட்டமைப்பு அல்லது ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றைத் தேர்வு செய்தால், உங்களுக்காக நாங்கள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நீங்கள் உங்களது இணையதளத்தை மற்றொரு நிறுவனத்துடன் ஹோஸ்ட செய்தால் அல்லது எங்களது VPS அல்லது பிரத்யேக சர்வர்களை பயன்படுத்தினால், இங்கே மேலும் தெரிந்துகொள்ளவும்.

Parallels Plesk Panel, cPanel மற்றும் Microsoft IIS போன்றவற்றில் SSL சான்றிதழை நிறுவுவதற்கு, தயவுசெய்து இங்கே பார்க்கவும்.

SSL சான்றிதழ் என்பது என்ன?

SSL என்பது செக்யூர் சாக்கெட் லேயர் என்பதன் சுருக்கமாகும். சிக்கலானது போலத் தோன்றலாம், ஆனால் உண்மை அதுவல்ல. SSL சான்றிதழ்கள் உங்கள் இணையதளத்தின் தனித்துவத்தை சரிபார்த்து, பார்வையாளர்கள் உங்கள் தளத்திலிருந்து அனுப்பும் அல்லது தளத்திலிருந்து பெறும் தகவல்களை குறியாக்கம் செய்கிறது. உங்களுக்கும் உங்கள் ஷாப்பர்களுக்கும் இடையே நடக்கும் பரிமாற்றங்களை விஷமிகள் எவரும் அறிந்துகொள்ளாதபடி இது காக்கிறது.

உங்கள் இணையதளத்தை பாதுகாக்க ஒரு SSL சான்றிதழ் உங்களிடம் இருந்தால், அவர்கள் ஏதேனும் ஒரு பாதுகாப்பான பக்கத்தில் உள்ளிடும் தகவல்கள் தனிப்பட்டதாகவே இருக்கும் என்றும் சைபர் குற்றவாளிகளால் அவற்றைப் பார்க்க முடியாது என்றும் உங்களது வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் நிம்மதியாக இருக்கலாம். உங்களது சான்றிதழை நிறுவுவதை மற்றும் உங்களது செர்வரை பாதுகாப்பதை GoDaddy எளிமையாக்குகிறது.

மேலும் தகவலுக்கு, SSL சான்றிதழ்களை வரையறுத்தல் என்பதைப் பார்க்கவும்.

என் இணையதளத்தில் SSL சான்றிதழை வைத்திருப்பதன் நன்மைகள் என்ன?

GoDaddy SSL சான்றிதழ்கள் ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன், பார்வையாளர்களுக்கு அவர்களின் தனியுரிமைக்கு நீங்கள் மதிப்பளிக்கிறீர்கள் என்று காட்டுகின்றன. ஒரு SSL சான்றிதழ் உங்கள் வாடிக்கையாளர்கள் தமது கணினியிலிருந்து உங்கள் இணைய சர்வருக்கு தரவைப் பரிமாற்றும்போது, குறியாக்கம் செய்து பெயர், முகவரி, கடவுச்சொல் அல்லது கிரெடிட் கார்டு எண் போன்ற அவர்களின் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கிறது. SSL என்பது இணையப் பாதுகாப்புக்கான இயல்பானதாகும், மேலும் ஒரு சர்வர் சான்றிதழ் என்பது பெரும்பாலான வர்த்தகக் கணக்கு சேவைகளுக்கு அவசியமாகும் – உங்கள் இணையதளத்தில் கிரெடிட் கார்டுகளை ஏற்கும் வசதி அமைக்கத் திட்டமிட்டால் உங்களுக்கும் இந்தச் சான்றிதழ் அவசியமாகும்.

மேலும் தகவலுக்கு SSL சான்றிதழ் எப்படி செயல்படுகிறது? என்பதைப் பார்க்கவும்

என் இணையதளம் பாதுகாப்பானது என்று மக்கள் எப்படி அறிந்துகொள்வார்கள்?

உங்கள் இணையதளத்தை எப்படி உருவாக்குகிறீர்கள் என்பது முற்றிலும் உங்கள் விருப்பமே. உண்மையைச் சொல்வதானால், மிகவும் பேஸிக்கான, பாதுகாப்பான இணையதளங்களை HTML-ஐப் பயன்படுத்தி கையினால் எழுதும் குறியீட்டின் மூலமே உருவாக்க முடியும்.

ஒரு பார்வையாளர் உங்கள் இணையதளத்தில் ஒரு SSL பாதுகாப்பு கொண்ட பக்கத்திற்குச் செல்லும்போது, உலாவிப்பட்டியானது ஒரு பேட்லாக் சின்னத்தையும் URL முகவரியில் https:// என்ற முன்னொட்டையும் காண்பிக்கும். இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோருக்கு, இதுபோன்ற SSL அடையாளங்களைக் கவனிக்கத் தெரியும், உங்கள் இணையதளம் சரிபார்க்கப்பட்டது மற்றும் பாதுகாப்பானது என்று உங்கள் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பதற்காக உங்கள் இணையதளத்திற்கு ஒரு தள முத்திரையையும் நீங்கள் சேர்க்கலாம். பார்வையாளர்கள் அந்த முத்திரையைக் கிளிக் செய்தால், அவர்கள் உங்கள் சான்றிதழின் நிலையயும் விவரங்களையும் காண முடியும், இதனால் அவர்கள் தமது முக்கியமான தகவல்களை உங்கள் இணையதளத்தில் வழங்குவது பாதுகாப்பானது தான் என்று நம்புவார்கள்.

மேலும் தகவலுக்கு உங்களது கணினியில் உள்ள சான்றிதழின் செல்லுபடி நிலையைச் சரிபார்த்தல் என்பதைப் பார்க்கவும்.

இயல்பான SSL சான்றிதழ், பிரீமியம் SSL சான்றிதழ் ஆகிய இரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன?

SSL பாதுகாப்பு கொண்ட தளங்கள் அனைத்தும் URL முகவரிப் பட்டியில் https:// என்ற முன்னொட்டைக் காண்பிக்கும். பிரீமியம் EV SSL சான்றிதழால் பாதுகாக்கப்பட்டுள்ள தளங்கள் பச்சை நிற உலாவிப் பட்டியைக் காண்பிக்கும், இதைக் கொண்டு பார்வையாளர்கள் இந்த நிறுவனம் சட்டப்பூர்வமானது என்றும் தொழிற்துறையின் கண்டிப்பான தரநிலைகளுக்கு இணங்க அதன் அசல் இருப்பிடம் சரிபார்க்கப்பட்டது என்றும் விரைவாக அறிந்துகொள்வார்கள்.

GoDaddy-இன் பிரீமியம் EV SSL சான்றிதழில் மிக விரிவான தணிக்கை செயல்முறை உள்ளது. நாங்கள் டொமைனின் கட்டுப்பாட்டையும், உங்கள் நிறுவனத்தின் சட்டப்பூர்வப் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் பிற பிஸினஸ் தகவல்களைச் சரிபார்ப்பதன் மூலம் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்போம். இந்தச் செயல்முறை நிறைவடைய சுமார் 30 நாட்களாகும், ஆனால் இந்த காத்திருப்புக் காலத்திலும் எங்கள் சான்றிதழ் செயல்படும். EV SSL சான்றிதழ்களுடன் ஒரு இலவச இயல்பு SSL சான்றிதழும் கிடைக்கிறது, அதை தணிக்கைச் செயல்முரையின்போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே காத்திருக்கும் அந்தச் சமயத்திலும் உங்கள் பரிமாற்றங்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

மேலும் தகவலுக்கு, உங்கள் பிஸினஸுக்கு ஒரு பிரீமியம் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியாக்கம் (EV) SSL சான்றிதழ் இருப்பதன் நன்மைகள் என்ன? என்பதைப் பார்க்கவும்

GoDaddy -இன் SSL சான்றிதழை ஏன் வாங்க வேண்டும்?

எங்கள் SSL சான்றிதழ்கள், எண்ணற்ற பாதுகாப்பான சர்வர்களைப் பாதுகாக்கும். அவை 2048-பிட் வரையிலான குறியாக்கத்தை ஆதரிக்கும், அவை சந்தையில் உள்ள முக்கியமான அனைத்து டெஸ்க்டாப் மற்றும் மொபைல் உலாவிகளால் அங்கீகரிக்கப்படுபவை. அத்துடன், அவற்றுக்குத் துறையிலேயே சிறந்த தொலைபேசிவழிச் சேவை மற்றும் உதவி கிடைக்கிறது. GoDaddy SSL சான்றிதழுக்கும் மற்ற நிறுவனங்கள் வழங்கும் SSL சான்றிதழ்களுக்கும் தொழில்நுட்பரீதியாக எந்த வேறுபாடும் இல்லை – அவை விலை குறைவானவை. உலகில் நெட் நியூ SSL சான்றிதழ்களை வழங்கும் மிகப் பெரிய நிறுவனம் நாங்கள் தான் என்பதில் வியப்பென்ன?

மேலும் தகவலுக்கு உங்கள் SSL சான்றிதழ்களின் குறியாக்க வலிமை என்ன?என்பதைப் பார்க்கவும்

எனக்கு எந்த வகையான SSL சான்றிதழ் தேவை?

உங்களுக்குத் தேவையான SSL சான்றிதழைக் கண்டுபிடிக்க உதவிட, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவும்:

 1. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?

  எங்கள் சான்றிதழ்கள் உலகளவில் ஒருசில விதிவிலக்குகளுடன் வழங்கப்படுகின்றன. உங்களுக்குக் கிடைக்குமா என்பதை அறிய இந்தப் பட்டியலைசரிபார்க்கவும்.

 2. உங்களுக்கு ஒரு பிஸினஸ் அல்லது தனிப்பட்ட இணையதளம் உள்ளதா?

  உங்களது தனிப்பட்ட இணையதளத்தில் நீங்கள் பொருட்களை விற்றால் தவிர, ஒரு இயல்பான SSL சான்றிதழ் (DV) போதுமானது. இது தகவலளிக்கக்கூடிய பிஸினஸ் தளங்களுக்கும் பொருந்தும். இ-காமர்ஸ் இணையதளங்கள் ஓர் ஒற்றை-டொமைன் இயல்பான SSL சான்றிதழ் (DV) அல்லது பிரீமியம் SSL சான்றிதழ் (EV) -ஐப் பயன்படுத்த வேண்டும்.

 3. எந்த வகையான இணையதள ஹோஸ்டிங்கைப் பயன்படுத்துகிறீர்கள்?

  எங்களது SSL சான்றிதழ்கள் பெரும்பாலான ஹோஸ்டிங் மற்றும் சர்வர் கட்டமைப்புகளில் பணியாற்றும். Microsoft’s Exchange Server 2007, Exchange Server 2010 அல்லது Live® Communications Server ஆகியவற்றில் பல டொமைன்களைப் பாதுகாக்க, ஒரு பல டொமைன் UCC SSL-ஐப் பயன்படுத்துங்கள்.

 4. வெவ்வேறு வகையான எத்தனை டொமைன்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும்?

  வைல்ட்கார்ட் SSL சான்றிதழ்கள் பல துணைடொமைன்களைப் பாதுகாக்கின்றன. எடுத்துக்காட்டாக, *.coolexample.com என்பதைப் பாதுகாக்க ஒரு வைல்ட்கார்டைப் பயன்படுத்துங்கள், அது shop.coolexample.com, www.coolexample.com மற்றும் ஏதேனும் பிற துணை டொமைன்களையும் பாதுகாக்கும்.

  UCC SSL சான்றிதழ்கள் பல டொமைன்கள், துணைடொமைன்கள் மற்றும் இணையதளங்களைப் பாதுகாக்கின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் www.coolexample.com, mail.coolexample.com மற்றும் www.awesomeexample.com ஆகியவற்றைப் பாதுகாக்க முடியும்.

 5. தொலைநிலைக் கணினி நிர்வாகத்திற்கான Intel vPro தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் SSL சான்றிதழ் வேண்டுமா?

  உங்களுக்கு எங்களுடைய OV டீலக்ஸ் சான்றிதழ் தேவை.

SSL சான்றிதழைப் பெறுவதற்கு நான் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும்?

இயல்பான SSL (DV) பொதுவாக 5 நிமிடங்கள் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளும். டீலக்ஸ் SSL (OV) கிடைக்க 3-5 வர்த்தக நாட்கள் ஆகும், ஏனென்றால் அதில் நாங்கள் டொமைன் உரிமையை மட்டும் சரிபார்ப்பதில்லை, SSL விண்ணப்பத்தில் உள்ள நிறுவனம் அல்லது பிஸினஸின் இருப்பையும் சரிபார்க்கிறோம்.

பிரிமியம் (EV) சான்றிதழ்களுக்கு, விரிவான சரிபார்ப்பு செயல்முறை உள்ளது, அது மிகவும் விரிவான ஒரு விண்ணப்பத்துடன் தொடங்கும். நீங்கள் தொடங்குவதற்கு முன்பு, பதிவு எண், ஒருங்கிணைத்தல் அல்லது பதிவு ஏஜெண்ட் மற்றும் ஏதேனும் தொடர்புடைய அதிகார வரம்பு விவரங்கள் போன்ற உங்களின் பிஸினஸைப் பற்றிய தகவல் அனைத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு சான்றிதழ் கையொப்பமிடுதல் கோரிக்கையை (CSR) நான் எப்படி உருவாக்குவது?

இது உங்களது இணைய சர்வரில் நீங்கள் பயன்படுத்தும் மென்பொருளைப் பொறுத்து அமையும். மேலும் அறிக

Plesk Panel, cPanel மற்றும் Microsoft IIS இல் ஒரு CSR-ஐ எப்படி உருவாக்குவது என்பதைக் கற்க தயவுசெய்து இங்கே பார்க்கவும்.

ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்தொடர்புகள் சான்றிதழ் (UCC) என்றால் என்ன?

ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்தொடர்புகள் சான்றிதழ் (UCC) என்பது பல டொமைன் பெயர்களையும் ஒரு டொமைன் பெயரில் உள்ள பல ஹோஸ்ட் பெயர்களையும் பாதுகாக்கும் ஒரு SSL சான்றிதழாகும். ஒரு UCC SSL, உங்களுடைய முதன்மை டொமைன் பெயரையும் மேலும் 99 கூடுதல் சப்ஜெக்ட் ஆல்டர்நேட்டிவ் நேம்ஸ் (SANs) ஐயும் ஒரே SSL சான்றிதழ் மூலமாகப் பாதுகாக்க உங்களை அனுமதிக்கும். எடுத்துக்காட்டாக, www.domains1.com, www.domains2.net மற்றும் www.domains3.org ஆகியவற்றைப் பாதுகாக்கு நீங்கள் ஒரு UCC ஐ பயன்படுத்தலாம்.

பகிரப்படும் ஹோஸ்டிங்கிற்கு UCCகள் இணக்கமானவை, மேலும் Microsoft® Exchange Server 2007, Exchange Server 2010 மற்றும் Microsoft Live® Communications Server ஆகியவற்றுக்குச் சிறந்தவை. ஆனாலும், தள முத்திரை மற்றும் சான்றிதழ் “இதற்கு வழங்கப்பட்டது” தகவல்களில், முதன்மை டொமைன் பெயர் மட்டுமே இருக்கும். இரண்டாம் நிலை ஹோஸ்டிங் கணக்குகள் அனைத்தும், சான்றிதழில் பட்டியலிடப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவும், அதனால் தளங்கள் ஒன்றுடன் ஒன்று ’இணைந்ததாக’ தோன்றக் கூடாது என்று நீங்கள் நினைத்தால், இந்த வகையான சான்றிதழை நீங்கள் பயன்படுத்தக் கூடாது.

வைல்டுகார்டு SSL சான்றிதழ் என்றால் என்ன?

ஒரு வைல்டுகார்டு SSL சான்றிதழ், உங்கள் முதல்நிலை டொமைன் மற்றும் அதன் எண்ணற்ற துணைடொமைன்களைப் பாதுகாக்கும். உதாரணமாக, ஒரு ஒற்றை வைல்டுகார்டு சான்றிதழ் www.coolexample.com, மற்றும் blog.coolexample.com ஆகிய இரண்டையும் பாதுகாக்கும்.

வைல்டுகார்டு சான்றிதழ்கள், பொதுவான பெயர் மற்றும் அதன் எல்லா துணைடொமைன்களையும் உங்களது SSL கோரிக்கையை நீங்கள் சமர்ப்பித்தபோது குறிப்பிட்ட தரநிலையில் பாதுகாக்கும்.

HTTPS மூலமாக எத்தனை தனித்தனி டொமைன்களை நான் பாதுகாக்க முடியும்?

உங்கள் இணையதளம் எப்படி உள்ளமைக்கப்பட்டுள்ளது என்பதைச் சார்ந்து, ஒற்றை டொமைன் SSL சான்றிதழைத் தவிர்த்து வேறொன்றை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம்.

 • வைல்டுகார்டு SSL சான்றிதழ்கள் ஒரு டொமைன் பெயரின் எல்லா துணைடொமைனையும் பாதுகாக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் *.coolexample.com என்பதைப் பாதுகாப்பதன் மூலம், shop.coolexample.com, www.coolexample.com மற்றும் பிற துணை டொமைன்களையும் பாதுகாக்கலாம்.

 • UCC SSL சான்றிதழ்கள் பல துணைடொமைன்கள், பிரத்யேக டொமைன் பெயர்கள் மற்றும் இணையதளங்களைப் பாதுகாக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் www.coolexample.com, mail.coolexample.com மற்றும் www.awesomeexample.com ஆகியவற்றை நீங்கள் பாதுகாக்க முடியும்.

SSL சான்றிதழ்களைப் பற்றி இன்னும் அதிகம் அறிந்துகொள்ள வேண்டுமா?

SSL சான்றிதழ் அமைவு, பயன்பாடு மற்றும் நிர்வாகத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்களுடைய அறிவுத் தளத்திற்கு செல்லவும்.
*,4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம் தரப்பு லோகோக்களும் குறிகளும் அவரவர் உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகக்குறிகள் ஆகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.