எங்கள் நிபுணர்களில் ஒருவரை இப்போதே அழையுங்கள்: 040-67607600

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு SSL சான்றிதழ்கள்

பாதுகாப்பான பணம் செலுத்துதல்கள், அதிகமான விற்பனை.

தொடக்க விலை
₹ 6,499.00/வருடம்
விற்பனையில் - 50% சேமியுங்கள்
₹ 12,999.00/நீங்கள் புதுப்பிக்கும்போது வருடத்திற்கு

ஒரு EV SSL சான்றிதழ் மூலம் விற்பனையை அதிகரியுங்கள்.

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த வகை SSL சான்றிதழாகும். இது பிற SSL -களைப் போன்று அதே சக்திவாய்ந்த குறியாக்கத்தைப் பயன்படுத்துகிறது என்றாலும் இதைப் பெறுவதற்கு தீவிரமான ஆய்வுச் செயல்பாட்டுக்கு உட்பட வேண்டும். பார்வையாளர்களை உடனடியாக பாதுகாப்பாக உணரச் செய்யும் ஓர் உயர்-தெரியும்நிலை கொண்ட பச்சைநிற முகவரிப் பட்டியைப் பெறுவீர்கள். நீங்கள் பணம் செலுத்துதல்களை ஆன்லைனில் ஏற்றுக் கொண்டால், EV தான் உங்களுக்கு மிகப் பொருத்தமானது.

நீங்கள் ஒரு உண்மையான பிஸினஸை நடத்துகிறீர்கள் என்று ஷாப்பர்களுக்குச் சொல்லுங்கள்.
ஒரு EV SSL சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் எவர் ஒருவரும், ஹேக்கரோ அல்லது திருடரோ தேர்ச்சி பெற இயலாத ஒரு தீவிரமான ஆய்வுச் செயல்பாட்டில் தேர்ச்சி பெற வேண்டும். உங்களிடம் ஒரு நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு EV SSL சான்றிதழ் இருந்தால், உங்கள் பிஸினஸ் சட்டப்பூர்வமானது என வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்வார்கள்.
ஷாப் செய்வதற்கான பச்சைவிளக்கு.
பார்வையாளரின் உலாவிப் பட்டியை பச்சை நிறத்திற்கு மாற்றும் ஒரே SSL சான்றிதழ் EV மட்டுமே. இது ஷாப்பர்கள் தங்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு எண்ணை முழு நம்பிக்கையுடன் உள்ளிடுவதற்கான பச்சை விளக்கைக் காட்டுகிறது.
தேவைப்படும்போதெல்லாம் உதவி பெறுங்கள்.
கேள்வி அல்லது கவலை உள்ளதா? விரைவுத் தீர்வுக்கு GoDaddy பாதுகாப்பு வல்லுநரை 040-67607600 -இல் அழையுங்கள்.

SSL சான்றிதழ்களின் வகைகளை ஒப்பிடவும்.

டொமைன் சரிபார்ப்பு
(DV) SSL

நிறுவன சரிபார்ப்பு
(OV) SSL

நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு
(EV) SSL

டொமைன் உரிமையை நிரூபிக்கிறது
டொமைன் உரிமையை நிரூபிக்கிறது
நிறுவனத்தைச் சரிபார்க்கிறது
நிறுவனத்தைச் சரிபார்க்கிறது
பிஸினஸ் சட்டப்பூர்வமானது என்பதைக் காட்டுகிறது
பிஸினஸ் சட்டப்பூர்வமானது என்பதைக் காட்டுகிறது
Google ® தரமதிப்பீட்டை மேம்படுத்துகிறது
Google ® தரமதிப்பீட்டை மேம்படுத்துகிறது
மிக வலிமையான SHA-2 & 2048-பிட் குறியாக்கம்
மிக வலிமையான SHA-2 & 2048-பிட் குறியாக்கம்
முகவரிப் பட்டியில் பூட்டு
முகவரிப் பட்டியில் பூட்டு
பச்சை முகவரிப் பட்டி
பச்சை முகவரிப் பட்டி
1 இணையதளத்தைப் பாதுகாக்கிறது
1 இணையதளத்தைப் பாதுகாக்கிறது
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது
(பல-டொமைன் SAN SSL)
பல இணையதளங்களைப் பாதுகாக்கிறது
(பல-டொமைன் SAN SSL)
அனைத்து துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது
(வைல்ட்கார்டு SSL)
அனைத்து துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது
(வைல்ட்கார்டு SSL)
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை
பாதுகாப்பு நம்பிக்கை முத்திரை

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

  • நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL சான்றிதழ் என்றால் என்ன?

    நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்புதான் இருப்பதிலேயே மிக உயர்ந்த வகை SSL சான்றிதழாகும். இது பிற SSL -களைப் போன்று அதே சக்திவாய்ந்த குறியாக்கத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் இதைப் பெறுவதற்கு விண்ணப்பதாரரின் பிஸினஸ் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்தச் செயல்முறையில் தேர்ச்சி பெறும் பிஸினஸ்கள் மட்டுமே ஒரு EV SSL சான்றிதழைப் பெறும். உங்கள் தளத்தில் இருக்கும்போது பச்சை முகவரிப் பட்டியைப் பார்க்கும் எவர் ஒருவரும் அவர்கள் ஒரு சட்டப்பூர்வமான இணையதளத்தில் இருப்பதை உடனடியாகத் தெரிந்துகொள்வார்கள்.

    நாங்கள் ஒரு EV சான்றிதழை வழங்கும் முன்னர், விண்ணப்பத்தில் பட்டியலிட்டுள்ள பிஸினஸ் குறித்த பின்வருவனவற்றை எங்களது ஊழியர்களில் ஒருவர் சரிபார்ப்பார்:

    • சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதை
    • தற்போது செயல்பாட்டில் இருப்பதை
    • பட்டியலிடப்பட்டுள்ள முகவரியில் இருப்பதை
    • பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் இருப்பதை
    • இணையதள டொமைன் பெயரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதை

    உங்களது நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL -ஐ தொடர்ந்து வைத்திருக்க, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆய்வுச் செயல்பாட்டில் தேர்ச்சி பெற வேண்டும். தயாரிப்புகளை விற்கக்கூடிய மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்துதல் தகவல்களை ஏற்கக்கூடிய எந்தவொரு பிஸினஸும் ஒரு நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL சான்றிதழைப் பயன்படுத்த வேண்டும்.

  • உங்கள் பிஸினஸுக்கு ஒரு EV SSL சான்றிதழ் வழங்கும் நன்மைகள் என்ன?

    பிற SSL சான்றிதழ்கள் போலல்லாமல், நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழ்கள் பார்வையாளர்களால் விரைவாக கவனிக்கப்படக்கூடிய முக்கியமான விஷுவல் சின்னத்தைக் காண்பிக்கின்றன. அவர்கள் ஒரு EV-பாதுகாக்கப்பட்ட இணையதளத்தில் இருக்கும்போது அவர்களது உலாவியில் முகவரிப் பட்டி பச்சை நிறமாக மாறி, உங்களது பிஸினஸ் சட்டப்பூர்வமானது என்பதை அவர்களுக்குக் காண்பிக்கிறது.
  • ஒரு EV SSL -ஐ யார் பெற முடியும்?

    நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) SSL சான்றிதழ்கள், பின்வரும் நிறுவனங்கள், பிஸினஸ்கள் மற்றும் கார்ப்பொரேஷன்களுக்கு மட்டுமே வழங்கப்படும்:

    • சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட, “நல்ல நிலையிலுள்ளது,” “செயலிலுள்ளது,” அல்லது சமமான நிலை உள்ள குழுமமாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட கடப்பாடுள்ள நிறுவனங்கள்.
    • பொதுப் பங்குதாரர்கள், குழுமமாக்கப்படாத சங்கங்கள், DBA -க்கள் மற்றும் தனி உரிமையாளர்கள் போன்ற பிஸினஸ் அமைப்புகள்.
  • எனது தளம் ஒரு நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு SSL மூலம் பாதுகாக்கப்படுவதை எனது வாடிக்கையாளர்கள் எவ்வாறு அறிந்துகொள்வார்கள்?

    ஆன்லைனில் ஏறக்குறைய ஏதாவது ஒன்றை வாங்கிய அனுபவம் கிட்டத்தட்ட அனைவருக்குமே இருக்கும், அப்போது அவர்கள் போதுமான பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்ததால் தங்களது ஆர்டரைச் சமர்ப்பிக்கும் முன்பு தளத்தை விட்டு விலகியிருப்பார்கள்.

    EV SSL மூலம் பாதுகாக்கப்படும் எந்தவொரு இணையதளத்திலும், கூடுதலாக பூட்டு மற்றும் HTTPS முன்சேர்க்கையுடன் ஒரு பச்சைநிற முகவரிப் பட்டி காண்பிக்கப்படும். இது ஷாப்பர்கள் ஒரு குறியாக்கம் செய்யப்பட்ட இணையதளத்தில் இருப்பதையும், அவர்கள் சமர்ப்பிக்கும் கிரெடிட் கார்டுத் தகவல்கள் மற்றும் பிற முக்கியத் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களுக்குக் காண்பிக்கும்.

  • நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழுக்கும் நிறுவன சரிபார்ப்பு (OV), மற்றும் டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

    டொமைன் சரிபார்ப்பு (DV) சான்றிதழ்கள்தான் இருப்பதிலேயே பெறுவதற்கு எளிதானவை. இதில் எந்த கைமுறை அடையாளச் சோதனையும் இல்லை, இணையதளத்திற்குப் பின்னால் உள்ள டொமைன் விண்ணப்பதாரருக்குச் சொந்தமானதா என்னும் தானியங்காக்கப்பட்ட சரிபார்ப்பு மட்டுமே இருக்கும். உங்களிடம் ஒரு தனிப்பட்ட இணையதளம் அல்லது வலைப்பதிவு இருந்தால், உங்களுக்கு ஒரு DV SSL சான்றிதழே போதுமானது.

    நிறுவன சரிபார்ப்பு (OV) சான்றிதழ்கள் பாதுகாப்பை ஒரு படி மேலே எடுத்துச் செல்கின்றன, இதில் நிறுவனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்க மனிதர்கள் சரிபார்ப்பு செய்யும் தேவை உள்ளது. இது நீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு (EV) சான்றிதழ்களுக்கும் பொருந்தும், இதில் டொமைன் உரிமை மட்டுமல்லாது பிஸினஸ் அடையாளம், சட்டப்பூர்வ நிலை மற்றும் முகவரி ஆகியவையும் சரிபார்க்கப்படும். EV சான்றிதழுக்கான ஆய்வுச் செயல்பாடு பிற சான்றிதழ்களை விட விரிவானது, எனவே EV SSL சான்றிதழ்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிக நம்பிக்கையைக் கொடுக்கின்றன. மேலும் நுட்பமான ஆய்வானது, EV சான்றிதழை ஒரு ஹேக்கர் அல்லது ஃபிஷர் பெறும் வாய்ப்பு இல்லாமல் செய்துவிடுகிறது.

    முழுமையான விவரங்கள்

  • GoDaddy SSL சான்றிதழ்கள் ஏன் தேவை?

    CA/உலாவி மன்றம் வழிகாட்டுதல்களுடன் இணங்கும் சான்றிதழ்களின் முழுமையான வரம்பை வழங்குகிறோம். எங்களுடைய சான்றிதழ்கள் அனைத்திலும்:

    • SHA-2 ஹேஷ் அல்காரிதம் மற்றும் 2048-பிட் குறியாக்கம்
    • மிகச் சிறந்த பாதுகாப்பு உதவி
    • USD $1M வரை காப்புறுதி
    • 30- நாள் பணம்-திரும்பப் பெறும் உத்தரவாதம்