040-67607627-இல் நிபுணர் உதவி பெறலாம்
உங்கள் தளத்தை தீம்பொருள் இல்லாமலும், பார்வையாளர்களைப் பாதுகாப்பாகவும் வைத்திடுங்கள்.
*இணையதளப் பாதுகாப்பு தயாரிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கின்றன.

அனைத்து திட்டங்களிலும் இருப்பவை

ஒரு இணையதளத்திற்குள் இருக்கும் எண்ணற்ற பக்கங்களுக்குப் பாதுகாப்பு
சிக்கலான பிரச்சனைகளுக்கு பாதுகாப்புப் பகுப்பாய்வாளர்கள்
மேம்பட்ட பாதுகாப்புக் கண்காணிப்பு
Google தடைப்பட்டியல் கண்காணிப்பு & அகற்றம்
பிராண்ட் நற்பெயர் கண்காணிப்பு
வரம்பற்ற தீம்பொருள் அகற்றுதல் & ஹேக் செய்தவற்றை சரிசெய்தல்
நம்பகமான தள முத்திரை
நிபுணர்களிடமிருந்து எந்நேரமும் கிடைக்கும் வாடிக்கையாளர் ஆதரவு
30- நாள் பணம்-திரும்பப் பெறும் உத்தரவாதம்

இணையதளப் பாதுகாப்பு ஏன் தேவை?

img-sucuri-security-malware-doesnt-discriminate-gen2
தீம்பொருளுக்கு பாகுபாடு கிடையாது.

அது பிரபலமான தளங்களை மட்டும் பாதிப்பதில்லை. சொல்லப் போனால், பெரும்பாலான மால்வேர் தாக்குதல்கள் தானியங்காக்கப்பட்டவை, அதாவது வேறு யாரையும் போலவே நீங்களும் அதற்கு ஒரு இலக்குதான். அத்துடன் நீங்கள் பாதிக்கப்படும்போது, அது உங்கள் தளத்தைச் செயலிழக்க வைப்பதை விட அதிகமானவற்றைச் செய்யக்கூடும் - அது உங்கள் நற்பெயரை அழித்துவிடலாம்.

உங்கள் தளத்தைப் பாதுகாப்பது என்பது இரவில் உங்கள் வீட்டுக் கதவுகளைப் பூட்டுவதைப் போன்றது. ஏதேனும் தவறான நிகழ்ந்துவிடும் என்பதால் நீங்கள் அதைச் செய்வதில்லை - ஏதேனும் தவறாக நிகழ்ந்துவிட்டால், அது மிக மோசமாக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைச் செய்கிறீர்கள்.

img-sucuri-security-complete-protection-gen
முழுமையான மனநிம்மதி தரும் முழுமையான பாதுகாப்பு.
Sucuri வழங்கும் இணையதளப் பாதுகாப்பு என்பது எளிமையாக்கப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பாகும். இதற்கு எந்த மென்பொருளையும் நிறுவத் தேவையில்லை, தினசரி ஸ்கேன்கள் தானியங்காக இயங்கும், அத்துடன் எங்களுடைய தானியங்கு அகற்றல் கருவிகளால் சரிசெய்ய முடியாத சிக்கல் எதுவும் ஏற்பட்டால், அதற்கு எத்தனை நேரமானாலும், உங்களுக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவுமின்றி எங்களுடைய பாதுகாப்பு நிபுணர்கள் அதை கைமுறையாகச் சரிசெய்வார்கள்.

அதில் தீம்பொருள் ஸ்கேனிங்கை விடவும் அதிகம் உள்ளது.

உங்கள் தளத்தை பல வழிகளில் சோதித்துக் கொண்டிருக்கிறோம்.

img-sucuri-security-better-performance-gen
இன்னும் சிறந்த செயல்திறன்

உங்கள் தளத்தின் ஏற்றுதல் நேரத்தை குறைந்தபட்சம் 50% அளவுக்கு மேம்படுத்துங்கள் எங்கள் உள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) உங்கள் உள்ளடக்கத்தை உலகெங்கிலும் உள்ள பல சர்வர்களில் சேமித்து வைக்கிறது, இதனால் உங்கள் உள்ளடக்கம் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு அருகாமையிலிருந்தே கிடைக்கும். எசன்ஷியல் திட்டத்தில் இல்லை.

குறிப்பு : மஞ்சள் நிறத்திலுள்ள தரவு மையங்கள் விரைவில் வருகின்றன.

மிக மோசமான அச்சுறுத்தல்களிலிருந்து சக்தி வாய்ந்த பாதுகாப்பு.

பெரும்பாலான தள உரிமையாளர்களுக்கு இந்த பல்வேறு வகையான அச்சுறுத்தல்களைப் பற்றித் தெரியாது, ஆனால் எங்களுக்குத் தெரியும் - நாங்கள் இவை அனைத்திலிருந்தும் மேலும் பலவற்றிலிருந்தும் உங்கள் தளத்தைப் பாதுகாப்போம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


இணையதளப் பாதுகாப்பு எப்படி வேலை செய்கிறது?

எங்கள் இணையதளப் பாதுகாப்பு ஸ்கேனர், உங்கள் இணையதளத்தில் தீம்பொருள், தடைப்பட்டியல்கள் மற்றும் இயங்கும் நேரம் ஆகியவற்றை முன்கூட்டிய திட்டமிடப்பட்ட இடைவெளிகளில் சரிபார்க்கிறது, எனவே நீங்கள் இவற்றைச் சரிபார்க்க வேண்டியதில்லை. ஏதேனும் சிக்கல்களைக் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதற்காக அதைப் பற்றி உங்களுக்கு உடனடியாக விழிப்பூட்டல் அனுப்புவோம். உங்கள் தளத்தில் தீம்பொருள் கண்டறியப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை அகற்றுவதற்காக ஒரு அகற்றல் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதுதான், சிக்கலைச் சரிசெய்ய எங்களுடைய நிபுணர் குழு களத்தில் இறங்கும். இணையதளப் பாதுகாப்புக் கண்காணிப்பு உங்களையும் உங்கள் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு வகையான தடைப்பட்டியல்களைச் சரிபார்த்து உங்கள் இணையதளத்தின் மதிப்பீடுகளையும் பாதுகாக்கும், அத்துடன் அவற்றில் ஒன்றில் உங்கள் இணையதளம் இடம்பெற்றிருந்தால் அதைப் பற்றியும் உங்களுக்குத் தெரிவிக்கும்.


இணையதளப் பாதுகாப்பு எக்ஸ்பிரஸ் மற்றும் இணையதளப் பாதுகாப்பு டீலக்ஸ் - இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?

உங்கள் தளம் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்டிருந்தால், அதை நீங்கள் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றால், எக்ஸ்பிரஸ்தான் உங்களுக்குத் தேவையான தயாரிப்பு. அது தீம்பொருள் அகற்றுதல் மற்றும் சரிசெய்தலில் உங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது, மற்றும் அதில் வருடம் முழுவதற்குமான இணையதளப் பாதுகாப்பு டீலக்ஸின் காப்புறுதியும் உள்ளது. இணையதளப் பாதுகாப்பு எக்ஸ்பிரஸை வாங்கும்போது, உங்கள் தளத்தை உடனடியாக ஸ்கேன் செய்யத் தொடங்குவோம், அதில் தீம்பொருள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், நீங்கள் அகற்றல் கோரிக்கையைச் சமர்ப்பித்த 30 நிமிடங்களுக்குள் தீம்பொருளைச் சரிசெய்யத் தொடங்குவோம். இணையதளப் பாதுகாப்பு டீலக்ஸ் என்பது, அவர்களுடைய இணையதளம் இதுவரை பாதிக்கப்படாத, ஆனால் இணையதளத்தை நாங்கள் அவர்களுக்காகக் கண்காணித்துப் பாதுகாக்கிறோம் என்ற மனநிம்மதியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கானது.


தீம்பொருளைக் கண்டறிய, இணையதளப் பாதுகாப்பு எனது தளத்தை எப்போதெல்லாம் ஸ்கேன் செய்யும்?

இணையதளப் பாதுகாப்பு உங்கள் இணையதளத்தை தினசரி ஸ்கேன் செய்யும். உங்கள் இணையதளப் பாதுகாப்புத் திட்டத்தைப் பொறுத்து, 30-நிமிடம், 12-மணிநேரம் அல்லது தினசரி பாதுகாப்புக் கண்காணிப்பு மற்றும் ஸ்கேன் செய்யும் காலத்தைத் தேர்வுசெய்யலாம். தீம்பொருள் கண்டறியப்பட்டால், உங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும்.


மறுபிரதிக் கோப்புகளை இணையதளப் பாதுகாப்பு உருவாக்குமா?

சுத்தப்படுத்தும்போது மாற்றியமைக்கப்படும் கோப்புகளை இணையதளப் பாதுகாப்பு மறுபிரதி எடுக்கும். இவை குறைந்த காலத்திற்கு வைத்திருக்கப்படும். உங்கள் இணையதளம் மற்றும் தரவுத்தளங்களில் வழக்கமாக எடுக்கப்படும் மறுபிரதிகளுக்கான உங்கள் விருப்பத்தேர்வுகளைப் பற்றி விவாதிக்க, 040-67607627 -இல் ஹோஸ்டிங் உதவியைத் தொடர்புகொள்ளவும்.


என்னிடம் ஒரு SSL உள்ளது, இன்னமும் எனக்கு இணையதளப் பாதுகாப்பு தேவையா?

ஆம்! உங்கள் தளத்திலிருந்து உள்ளேயும் வெளியேயும் பரிமாறப்படும் தரவை SSL குறியாக்கம் செய்கிறது - அது உங்கள் இணையதளத்தை தீம்பொருள், SQL இன்ஜெக்‌ஷன்கள் அல்லது DDoS தாக்குதல்கள் போன்ற பிற பலவீனங்களிலிருந்து பாதுகாக்காது. SSL மற்றும் இணையதளப் பாதுகாப்பு இரண்டையும் பயன்படுத்தினால், உங்கள் இணையதளம், உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களுடைய தரவு அனைத்தையும் பாதுகாக்க ஒரு முழுமையான பாதுகாப்புக் கவசத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று பொருள்.


வெப் அப்ளிகேசன் ஃபயர்வால் (WAF) எப்படி எனது தளத்தைப் பாதுகாக்க உதவுகிறது?

WAF என்பது உங்களுடைய நிகழ்-நேர இணையதளப் போக்குவரத்தில் நிகழக்கூடிய SQL இன்ஜெக்‌ஷன் தாக்குதல்கள் மற்றும் கருத்துரை ஸ்பேமர்கள் போன்ற அச்சுறுத்தல்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்குகின்ற, DDoS தாக்குதல்களையும் முறியடிக்கும் கிளவுட்-அடிப்படையிலான தடுப்புச்சுவர் சேவையாகும். WAF -ஐ அமைக்க சில நிமிடங்களே ஆகும், இது இணையதளப் பாதுகாப்பு ஸ்கேன்களுக்கு மத்தியில் உங்கள் இணையதளத்தைப் பாதுகாக்கக்கூடிய முன்நிலைக் கவசமாகும்.


இணையதளப் பாதுகாப்பு உள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) எனது தளத்தை வேகப்படுத்த எவ்வாறு உதவுகிறது?

CDN என்பது அனைத்து உள்ளடக்கமும் வேகமாகவும் நம்பகமாகவும் வழங்கப்படுவதற்காக, மாறக்கூடிய மற்றும் நிலையான இடைமாற்றத்தைப் பயன்படுத்தும் உலகெங்கும் உள்ள சர்வர்களின் நெட்வொர்க்காகும். அதாவது அமெரிக்காவில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள உங்கள் இணையதளத்தை ஜப்பானில் இருக்கும் ஒருவர் பார்வையிடும்போது, ஜப்பானில் ஹோஸ்ட் செய்யப்பட்ட ஒரு இணையதளத்தைப் போலவே உங்கள் தளமும் வேகமாக ஏற்றப்படும்.

4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம் தரப்பினர் லோகோக்களும், குறியீடுகளும், அதனதன் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.