WordPress SSL சான்றிதழ்கள்

WordPress உடன் எந்த SSL சான்றிதழ் சிறப்பாக வேலை செய்யும்?

none
WordPress SSL சான்றிதழ் என்றால் என்ன?

WordPress -க்கெனப் பிரத்யேகமாக ஒரு SSL சான்றிதழ் உருவாக்கப்படவில்லை என்றாலும், எந்தவொரு நம்பகமான SSL சான்றிதழும் WordPress வலைப்பதிவுகளுடனும் தளங்களுடன் வேலை செய்யும்.

“WordPress SSL சான்றிதழை” WordPress உடன் வேலை செய்யும் ஒரு SSL சான்றிதழாக நினைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் WordPress தளத்தில் ஒரு SSL சான்றிதழ் உள்ள HTTPS -ஐ எப்படிச் செயல்படுத்துவது:

அதை நீங்களே செய்யலாம்.

WordPress செருகுநிரலைப் பயன்படுத்தி ஒரு SSL சான்றிதழை அமைக்கலாம், அல்லது அதை WordPress -இல் கைமுறையாக அமைக்கலாம்.

அதை உங்களுக்காக நாங்கள் செய்வோம்.

உங்கள் WordPress தளத்தில் உங்களுக்காக நாங்கள் எவ்வாறு SSL சான்றிதழை நிறுவிப் பராமரித்து, HTTPS -ஐச் சேர்க்கிறோம் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

none
(பாதுகாப்பான) இணைப்பை உருவாக்குங்கள்.
உலாவிக்கும் இணைய சர்வருக்கு இடையில் ஒரு பாதுகாப்பான இணைப்பை உருவாக்குவதற்காக SSL சான்றிதழ்கள் ஒரு பாதுகாப்பு புரோடோகாலைச் செயல்படுத்துகின்றன. எனவே நம்பகமான ஒரு SSL சான்றிதழ் மூலம் பாதுகாப்பான, குறியாக்கம் செய்யப்பட்ட இணைப்பை உருவாக்குவதற்கு உங்கள் தளத்திற்கு ஒரு “கடவுச்சொல்” இருக்கும். மேலும் சர்வருக்கும் உலாவிக்கும் இடையிலான தரவுப் போக்குவரத்து குறியாக்கம் செய்யப்படுவதால் முக்கியமான தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன - அந்தத் தரவைப் படிக்க முடியாது என்பதால் ஹேக்கர்களுக்கு அவை பயனற்றதாகிவிடுகின்றன.

SSL சான்றிதழைப் பெறுவதில் உள்ள நன்மைகள்.

மனநிம்மதியோடு இருக்கலாம். SSL சான்றிதழ் உங்களையும் உங்கள் பார்வையாளர்களையும் சைபர்கிரிமினல்களிடமிருந்து பாதுகாக்கிறது, உங்கள் தளத்தின் SSL சான்றிதழின் பாதுகாப்பில் ஏதேனும் மீறல் நிகழ்ந்தால் உங்கள் தளப் பார்வையாளர்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பையும் சரிசெய்கிறது.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை உணர்வு கிடைக்கும். செல்லுபடியாகும், நம்பகமான ஒரு SSL சான்றிதழை நிறுவினால், உங்கள் தளத்தைப் பார்வையாளர்கள் பார்வையிடும்போது அதிலுள்ள HTTPS -இல் “S”, உங்கள் டொமைன் பெயருக்கு அடுத்து ஒரு பச்சைநிறப் பூட்டு ஆகியவை காண்பிக்கப்படும்.

none
உங்கள் WordPress தளத்திலுள்ள HTTPS முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால்:

நம்பகமான SSL சான்றிதழைக் கொண்டிருந்தால், அது நீங்கள்தான் உங்கள் தளத்தின் உரிமையாளர் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கும். SSL சான்றிதழைப் பெற்று அதை நிறுவியவுடன், உலாவியின் தேடல் பட்டியில் பச்சைநிறப் பூட்டு, HTTPS ஆகியவற்றுடன் உங்கள் தளம் தோன்றும்.

HTTPS, பச்சைநிறப் பூட்டு போன்ற நம்பகத்தன்மையை வெளிக்காட்டும் சின்னங்கள், உங்கள் தளம் அதன் உரிமையாளர் அல்லது பிஸினஸின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டது என்பதை நிரூபிக்கின்றன. இது ஒரு பார்வையாளரின் உலாவி உங்கள் தளத்தை வந்தடையும்போது, நீங்கள் உங்களுடைய தரவையும் அதே நேரத்தில் அவர்களுடைய தரவையும் பாதுகாக்கிறீர்கள் என்பதை அவர்களுடைய உலாவியின் தேடல் பட்டியில் காண்பிக்கிறது.

none
ஒரு தளம் பாதுகாப்பானதா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?
உங்கள் தளத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பச்சைநிறப் பூட்டு ஐகானை (HTTPS -ஐயும்) பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மையோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்றனர். அதனால்தான் உங்கள் தளத்தில் நிறுவப்பட்டுள்ள SSL சான்றிதழ் உங்கள் பார்வையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான எளிதான, விரைவான வழிகளில் ஒன்றாகும். HTTPS -ஆல் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, பச்சைநிறப் பூட்டு ஐகானைக் காண்பிக்கும் ஒரு WordPress இணையதளம், உங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆன்லைன் பாதுகாப்புக்கு மதிப்பளித்து, அதைப் பாதுகாக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டும்.
none
நீங்கள் HTTPS மூலம் பாதுகாக்க வேண்டிய பல WordPress தளங்கள் இருந்தால் இது எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்…
எந்தவொரு SSL சான்றிதழும் உங்கள் WordPress தளத்தைப் பாதுகாக்கும் என்றாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட WordPress தளங்களை இயக்குபவர்களுக்காக சிறப்பாக வேலைசெய்யும் SSL சான்றிதழ்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பல-தள SSL சான்றிதழ் இப்போதும் உங்கள் சான்றிதழ் புதுப்பிக்கப்பட வேண்டிய நேரத்திலும் உங்கள் நேரத்தைச் சேமிக்கும்.
none
WordPress மூலம் Google -இல் உயர்ந்த தரமதிப்பீட்டை எவ்வாறு பெறுவது.
SSL உள்ள தளங்களை தேடல் வரிசையின் மேலாக நகர்த்துவதன் மூலம் அனைவரும் SSL சான்றிதழ்களைப் பயன்படுத்துவதற்கு Google ஊக்குவிக்கிறது. அதாவது, உங்கள் தளத்திற்கு SSL சான்றிதழ் இருந்தால், அது SSL சான்றிதழ் இல்லாத பிற தளங்களை விட Google தேடல் முடிவுகளில் அதிக மதிப்பீட்டைப் பெறும்.

WordPress HTTPS பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

SSL சான்றிதழ்கள் இலவசமானவையா?

GoDaddy உங்களுக்குத் தேவைப்படும் SSL சான்றிதழின் காலம் மற்றும் வகையைப் பொறுத்து, சான்றிதழ்களின் விலைகள் ஒரு வருடத்திற்கு ₹ 3,519.00 என்னும் விலையில் தொடங்குகின்றன. கூடுதலாக, GoDaddy -இன் ஒரு-கிளிக் அமைவு மற்றும் விருது வென்ற வாடிக்கையாளர் ஆதரவு மூலம் நாங்கள் முழுமையான நிறுவல் மற்றும் புதுப்பிப்புச் சேவைகளை வழங்குவதால், நீங்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை.

WordPress config PHP கோப்பை எங்கு கண்டறிவது?

wp-config.php கோப்பு பொதுவாக /wp-content/ போன்ற பிற கோப்புறைகள் போலவே உங்கள் இணையதளத்தின் மூலக் கோப்புறையில் இருக்கும்.

SSL vs /HTTPS என்றால் என்ன?

HTTPS என்பது ஒரு இணைய சர்வருடன் குறியாக்கம் செய்யப்பட்ட தகவல்தொடர்பை மேற்கொள்ளவும் அதற்கான பாதுகாப்பு அடையாளத்தை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. HTTPS உடன் கூடுதலாக, FTP, SMTP, NNTP, XMPP போன்ற பிற பயன்பாடு சார்ந்த புரோடோகால்களைப் பாதுகாக்க SSL/TLS பயன்படுத்தப்படுகிறது.

/HTTPS பாதுகாப்பானதா?

ஹைப்பர் டெக்ஸ்ட் டிரான்ஸ்பர் புரோடோகால் செக்யூர் (HTTPS) - இது HTTP -இன் பாதுகாப்பான பதிப்பாகும், இது உங்கள் உலாவிக்கும் நீங்கள் இணைக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கும் இடையே அனுப்பப்படும் தரவைப் பற்றிய புரோடோகால் ஆகும். HTTPS -இன் முடிவில் இருக்கும் 'S' என்பதற்கு 'பாதுகாப்பு' என்று பொருள். அதாவது இதைப் பயன்படுத்தி செய்யப்படும் உங்கள் உலாவிக்கும் இணையதளத்திற்கு இடையிலான அனைத்துத் தகவல்தொடர்புகளும் குறியாக்கம் செய்யப்படும்.

SSL வழங்குநர் அல்லது SSL சான்றிதழ் அதிகாரி (CA) என்றால் யார்?

SSL சான்றிதழ் வழங்குநர் (சான்றிதழ் அதிகாரி) என்பவர் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுடைய அடையாளச் சான்றுகளைச் சரிபார்த்த பின்னர் அவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்குவார்.

SSL -க்கான போர்ட் என்ன?

SSL -ஐப் பயன்படுத்தியோ பயன்படுத்தாமலோ தரவை அனுப்பலாம், எனவே ஒரு பாதுகாப்பான இணைப்பைச் சுட்டிக்காட்டுவதற்கு போர்ட் எண்ணைப் பயன்படுத்துவது ஒரு வழி. இயல்புநிலையாக, HTTPS இணைப்புகள் TCP போர்ட் 443 என்பதைப் பயன்படுத்துகின்றன. பாதுகாப்பற்ற புரோடோகாலான HTTP, போர்ட் 80 -ஐப் பயன்படுத்துகிறது.