இணையதளத்தை அமைப்பது எப்படி?

உங்களுக்கான சரியான தேர்வு என்ன?

நீங்களே-செய்வதற்கான கருவிகள்.

உங்கள் சொந்தத் தளத்தை உருவாக்க எப்படி குறியீடு எழுதுவது என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இணையதள கட்டமைப்பு போன்ற கருவிகள், இழுத்துவிடும் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் சொந்தத் தளத்தைத் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கின்றன, அத்துடன், நிர்வகிக்கப்பட்ட WordPress உருவாக்கும் ஆற்றலை நிர்வகிக்கப்பட்ட WordPress அளிக்கிறது.
ஆன்லைனில் தங்கள் தயாரிப்புகளை விற்க விரும்பும் பிஸினஸ்களுக்கு, ஒருங்கிணைந்த ஷாப்பிங் கார்ட், உள்ளமைந்த கிரெடிட் கார்டு செயலாக்கம், ஷிப்பிங் விருப்பங்கள், இருப்புவிவரக் கருவிகள் மற்றும் பல உள்ளடங்கியுள்ள ஆன்லைன் ஸ்டோர் போன்ற நீங்களே செய்யக்கூடிய இணையதள கட்டமைப்புகளான கருவிகள் உள்ளன.
உங்கள் DIY திட்டத்தைத் தேர்வுசெய்க.

உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்

இணையதளத்தைக் கட்டமைப்பதற்கு எனக்குள்ள விருப்பத்தேர்வுகள் என்ன?

டிரேக் & டிராப் (drag & drop) தளக் கட்டமைப்புகளைக் கொண்ட இந்த DIY வழியானது Facebook® பக்கத்தைப் புதுப்பிப்பது போல எளிமையானது. மேலும் உங்களுக்கு இன்னும் மேம்பட்ட ஒன்று தேவைப்பட்டால், நிர்வகிக்கப்பட்ட WordPress போன்ற DIY பணித்தளங்கள் உள்ளன, அவை பிளக்-இன்களைப் பயன்படுத்தி ஏறக்குறைய எதையும் உருவாக்க உங்களை அனுமதிக்கின்றன.

நானே ஒரு மேம்பட்ட தளத்தை உருவாக்க விரும்பினால் என்ன செய்வது?

நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆர்வமுள்ளவராக இருந்தால், தீம்களைப் பயன்படுத்தி அல்லது மற்ற பயனர்கள் உருவாக்கிய கூடுதல் பக்கங்களைச் சேர்த்து ஒரு சக்திமிக்க, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தை உருவாக்க WordPress உதவுகிறது. அதற்கு கொஞ்சம் கூடுதல் திறன் தேவை, ஆனால் இணையத்தில் உள்ள மிகவும் பிரபலமான தளத்தை உருவாக்கும் கருவி என்கின்ற முறையில் அது மதிப்புமிக்கதே.

நிர்வகிக்கப்பட்ட WordPress குறித்து அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்

நான் ஒரு உள்ளூர் இணைய வடிவமைப்பாளரைப் பணியமர்த்த விரும்பினால் என்ன செய்வது?

உங்கள் சொந்தத் தளத்தை உருவாக்க உங்களுக்கு நேரம், திறமைகள் அல்லது விருப்பம் இல்லாவிட்டால், இணைய வடிவமைப்பாளரைப் பணியமர்த்துவது சிறந்த தீர்வாகும். உங்கள் இணையதளத்திற்காக பெரியதொரு தொகையைச் செலவழிக்கலாம், ஆனால் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், அதற்கு அவசியமில்லை. எங்கள் சிறந்த உதவிக்குறிப்புகள் இதோ. உங்களது வடிவமைப்பாளரிடம் இவை இருப்பதை உறுதி செய்யுங்கள்:

  • நீங்கள் ஆய்வுசெய்து பார்க்கக்கூடிய அவர் வடிவமைத்த தளங்களின் தொகுப்பு உள்பட நிறைய அனுபவம்.
  • அவருடன் வேலை செய்வது எப்படி இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லக்கூடிய சான்று வழங்குவோரின் ஒரு பட்டியல்.
  • உங்களது பட்ஜெட்டுக்குப் பொருந்தக்கூடிய விலைகள் இருக்க வேண்டும், அத்துடன் அவற்றைக் குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் திடீரென்று ‘கூடுதல் கட்டணங்களால்’ நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டியிருக்காது.
  • உங்களது பிராண்டு அல்லது ஸ்டைல் குறித்த ஒரு நல்ல புரிதல்.