எங்கள் நிபுணர்களில் ஒருவரை இப்போதே அழையுங்கள்: 040-67607626

WordPress இணையதளம்

WordPress மூலம் சக்திவாய்ந்த இணையதளத்தை உருவாக்குவதற்கான மிக எளிய வழி
  1. முன்-கட்டமைத்த இணையதளங்கள் மூலம் விரைவாகத் தொடங்கிடுங்கள்
  2. கிட்டத்தட்ட எந்தவொரு அம்சத்தையும் சேர்ப்பதற்கு இலவச ப்ளக்-இன்களை நிறுவிடுங்கள்
  3. இலவச டொமைன், மின்னஞ்சல், மற்றும் எந்நேரமும் உதவி

அனைத்து திட்டங்களிலும் இருப்பவை

99.9% இயக்க நேர வாக்குறுதி மற்றும் பணம் திருப்பித் தருதல் உத்தரவாதம்
இலவச ஆதரவு
தானியங்கு WordPress கோர் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள்
விரைவான, ஒரு-கிளிக் இடப்பெயர்வுகள்
ஆயிரக்கணக்கான இலவச தீம்கள் மற்றும் பிளக்-இன்களுக்கான அணுகல்
ஆரம்பநிலையில் உள்ளவர்களுககு: முன்கூட்டி அமைக்கப்பட்ட தளங்கள், இழுத்துவிடும் வசதியுள்ள பக்க எடிட்டர்
PHP 7 -இன் சமீபத்திய பதிப்பு
SFTP அணுகல் (டீலக்ஸ் மற்றும் அல்டிமேட் திட்டங்களில் மட்டுமே)
வருடாந்தத் திட்டத்தை வாங்கினால் முதல் வருடத்திற்கு இலவச பிஸினஸ் இமெயில்
தற்காலிக டொமைன் பெயர்

WordPress -இன் திறன் – எளிமையாக்கப்பட்டுள்ளது.

எங்களது பிரத்யேக விரைவுத் தொடக்க வழிகாட்டி, உங்களுக்குத் தேவையான பக்கங்கள் மற்றும் அம்சங்களுடைய முன்-கட்டமைத்த இணையதளம் மூலம் உங்களை ஆன்லைனில் விரைவாகக் கொண்டு சேர்க்கும். ஆயிரக்கணக்கான உயர்-தரப் படங்களுள்ள இலவச நூலகத்தையும் சேர்த்துள்ளோம். கூடுதலாக, எங்களது புதுமையான இழுத்து விடும் திருத்தி, நீங்கள் உரையைச் சேர்ப்பதையும், படங்களைத் திருத்துவதையும் பக்கத்தை மாற்றியமைப்பதையும் கூட எளிதாக்குகிறது. உங்களுக்கு சில தொழில்நுட்பத் திறன்கள் இருந்தால், நீங்கள் கற்பனை செய்யக்கூடிய எந்தவொரு அம்சத்தையும் சேர்க்க முடியும்.

கிடைக்கும் 1000 கணக்கான ப்ளக்-இன்கள் மூலம் எந்தவொரு அம்சத்தையும் சேருங்கள்.

எங்களது பிரீமியம் தீம்களில் மிகப் பிரபலமான அம்சங்கள் உள்ளமைக்கப்பட்டுள்ளன, ஆனால் wordpress.org -இலும் இணையமெங்கும் 43,000 -க்கும் மேற்பட்ட தீம்கள் கிடைக்கின்றன.

எங்களது நிர்வகிக்கப்பட்ட ஹோஸ்டிங் இயங்குதளத்தின் மூலம் உங்களது எல்லா தொழில்நுட்ப விஷயங்களும் எங்களால் கையாளப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

WordPress என்றால் என்ன?

WordPress ® என்பது வலைப்பதிவு மற்றும் இணையதள வெளியீட்டுப் பணித்தளமாகும். இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாது, இணையதள உருவாக்கத்தில் ஒரு தரநிலையாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. அழகு, இணையத் தரநிலைகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய தன்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட WordPress, சிறிய தனிப்பட்ட வலைப்பதிவு முதல் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெரிய வர்த்தக தளம் வரை அனைத்தையும் நிர்வகிக்க உதவும் ஓபன் சோர்ஸ் பணித்தளமாகும். லட்சக்கணக்கான தளங்கள் தங்களின் ஆன்லைனில் இருப்புக்கு WordPress-ஐ நம்புகின்றன, அதோடு GoDaddy-இன் நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங்கும் இருப்பதால் நீங்களும் அதை நம்பலாம்.

WordPress -ஐப் பயன்படுத்த எப்படி நான் கற்பது?

நீங்கள் WordPress -க்குப் புதியவரெனில், அதிலுள்ள அனைத்து அம்சங்களையும் புரிந்துகொள்ள சிறிது நேரம் பிடிக்கும். அதனால்தான் அதன் அனைத்து அடிப்படைகளையும் விவரிக்கும் 20+ வீடியோக்களைச் சேர்த்துள்ளோம். அதோடு, உலகின் மிகப் பிரபலமான இணையதளம் கட்டமைக்கும் கருவியான WordPress -இன் சமூகம் https://wordpress.org/support/ -இல் மிகப் பெரிய இலவச உதவியை வழங்குகிறது

வேறு இடத்தில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ள என்னுடைய WordPress தளத்தை GoDaddy-க்கு மாற்ற முடியுமா?

ஆம், ஏற்கனவே உள்ள உங்களது WordPress தளத்தை, கூடுதல் பாதுகாப்பும் நிர்வகிக்கப்பட்ட சேவைகளும் உள்ளடங்கிய எங்களது WordPress உகந்ததாக்கப்பட்ட ஹோஸ்டிங் இயங்குதளத்திற்கு நகர்த்துவது மிகவும் எளிது. உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வுசெய்தால் போதும், அதோடு அமைவுச் செயல்பாட்டின்போது, “எனது தளத்தை இடம்பெயர்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அது அவ்வளவு எளிதானது. (எங்களது தானியங்கு இடப்பெயர்வுக் கருவி WordPress.com தளங்களுடன் வேலை செய்யாது.)

மற்ற நிறுவல்களிலிருந்து, WordPress இன் உங்கள் பதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?

எங்களிடம் பல தனித்தன்மை வாய்ந்த, பிரத்யேக அம்சங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் எங்களது விரைவுத் தொடக்க வழிகாட்டிதான் மிகவும் சிறந்தது, இது உங்கள் தளத்தைப் பற்றி கேட்டு, உங்களுக்கு விருப்பமான அல்லது தேவையான அம்சங்களை தானியங்காக நிறுவுகிறது, மற்றும் எங்கள் விஷுவல் பேஜ் எடிட்டர், WordPress எடிட்டரை எளிமையான டிராக் அண்ட் டிராப் கருவிகள் மூலம் எளிமையாக்குகிறது. எங்களிடம் பிரத்யேக, முன்-உருவாக்கப்பட்ட இணையதளங்களும், WordPress -க்காக வடிவமைக்கப்பட்ட ஹோஸ்டிங் இயங்குதளமும், 20 WordPress வழிகாட்டி வீடியோக்களுக்கு மேல் உள்ள ஆன்லைன் நூலகம் மற்றும் பலவும் உள்ளன.

வாங்கிய பின்பு, எப்படித் தொடங்குவது?

WordPress ஐப் பயன்படுத்தி எப்படி வலைப்பதிவை உருவாக்குவது அல்லது உங்கள் தளத்தைக் கட்டமைக்கத் தொடங்குவது என்று உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் ஹோஸ்டிங் திட்டம் WordPress இன் சமீபத்திய பதிப்புடன் கச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளது, இதனால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உள்நுழைந்து, உங்கள் கட்டுப்பாட்டு பேனலில் இருந்து நேரடியாக தளத்தைக் கட்டமைக்கத் தொடங்கலாம். எப்படி உள்நுழைவது என்று தெரியவில்லையா? கீழே உள்ள “என்னுடைய WordPress நிறுவலை எப்படி அணுகுவது?” என்பதைக் காணவும்.

மேலும் உங்களுக்குக் கேள்விகள் ஏதேனும் இருந்தால், எங்களுடைய விருது வென்ற உதவிக் குழுவைத் தொடர்பு கொள்ளத் தயங்காதீர்கள். எங்களிடமே இருக்கும் WordPress நிபுணர்கள், உங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவை உருவாக்குவது, புதுப்பிப்பது அல்லது விளம்பரப்படுத்துவதில் கூட உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

என்னுடைய WordPress நிறுவலை எப்படி அணுகுவது?

உங்கள் WordPress இணையதளம் அல்லது வலைப்பதிவில் உள்நுழைய பல்வேறு வழிகள் உள்ளன.

https://www.godaddy.com/,-க்குச் சென்று, “எனது கணக்கு”-என்பதில் உள்நுழைந்து, உங்கள் தயாரிப்பு பட்டியலிலிருந்து நிர்வகிக்கப்பட்ட WordPress ஹோஸ்டிங் என்பதைத் தேர்வுசெய்யவும். http://coolexample.com/wp-admin, என்று தட்டச்சு செய்யவும், அதில் coolexample.com என்பது உங்கள் டொமைன் பெயராகும், இது உங்களை நேரடியாக நிர்வாகி உள்நுழைவுத் திரைக்கு அழைத்து செல்லும்.

4 பொறுப்புத்துறப்புகள்
மூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.